தினமும், 10 லிட்டர் அளவுக்கு குளிர்பானம் குடித்த பெண் மரணமடைந்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் நடஷா ஹாரிஸ், 30. எட்டு குழந்தைகளுக்கு தாய். இவர், காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை அடிக்கடி, “கோகோகோலா’ குளிர்பானத்தை பருகி வந்தார். ஒரு நாளைக்கு, 10 லிட்டர், “கோககோலா’வை இவர், பல ஆண்டுகளாக குடித்துவந்தார். இதற்கிடையே அவர் கடந்த, 2010ம் ஆண்டு திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார்.
இவர் திடீரென இறந்ததற்கான காரணம் குறித்து, பல்வேறு துறை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். நடஷாவின், கணவரை அழைத்து, அவரது மனைவி என்னென்ன உணவு பழக்கங்களை கொண்டிருந்தார் என கேட்டனர். நடஷா, ஒரு நாளைக்கு எட்டு முதல், 10 லிட்டர் “கோககோலா’ குடித்ததாகவும், 30 சிகரெட் வரை பயன்படுத்தியதாகவும், ஆனால், குறைவான உணவு மட்டுமே உட்கொண்டு வந்ததாகவும், நடஷாவின் கணவர் கூறினார்.
சமீபத்தில், நடஷாவின் மரணம் குறித்த மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“தண்ணீராக இருந்தாலும் அது அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உடலுக்கு கெடுதலை தான் செய்யும். அதிகப்படியான, “கோககோலா’வினால் அவரது உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்து விட்டது.
இதனால், அவருக்கு ரத்த அழுத்தமும், சக்தி குறைவும் ஏற்பட்டுள்ளது. இது தான் அவருக்கு மரணத்தை ஏற்படுத்தி விட்டது என, டாக்டர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Source:
http://www.paththirikai.com/2012/04/cocacola/

No comments:
Post a Comment