சிவராத்திரி அன்று விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளலாம்.
அன்று முழுவதும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையைத் துவக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.
சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம். இரவில் சிவனுக்கு செய்யப்படும் பூஜைகள் குறித்த முழு விவரமும் இங்கு தரப்பட்டுள்ளது. அதற்கேற்ற பொருட்களை நீங்கள் வாங்கி அளிக்கலாம்.
முதல் சாமம்:- பஞ்சகவ்ய அபிசேகம் - சந்தனப்பூச்சு - வில்வம், தாமரை அலங்காரம் - அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் - ருக்வேத பாராயணம்.
இரண்டாம் சாமம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் - பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - பாயாசம் நிவேதனம் - யசுர் வேத பாராயணம்.
மூன்றாம் சாமம்:- தேன் அபிசேகம் - பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - எள் அன்னம் நிவேதனம் - சாமவேத பாராயணம்.
நான்காம் சாமம்:- கரும்புச்சாறு அபிசேகம் - நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்காரம் - அர்ச்சனை - சுத்தான்னம் நிவேதனம் - அதர்வன வேத பாராயணம்.
அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையும், உச்சிக்கால பூஜையையும் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். அதன் பின் உபதேசம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பதற்கு ஈடாகாது.மாசி மாதத் தேய்ப்பிறைச் சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரியாகும்.சூரிய உதயம் முதல் இரவு முழுவதும் பகல் இரவு 60 நாழிகையும் அமாவாசை இருந்தால், அன்று யோக சிவராத்திரி. திங்கட்கிழமை அன்று சூரிய அஸ்தமனம் முதல், அன்றிரவு நான்கு ஜாமமும் தோப்பிறைச் சதுர்த்தி இருந்தால் அன்றைய தினமும் யோக சிவராத்திரி. திங்கட்கிழமை அன்று இரவு நான்காம் ஜாமத்தில், அமாவாசை அரை நாழிகை இருந்தாலும் யோக சிவராத்திரியாகும். திங்கட்கிழமை இரவு நான்காம் ஜாமத்தில், தேய்பிறைச் சதுர்த்தசி அரை நாழிகை இருந்தாலும் யோக சிவராத்திரியாகிறது. இப்படி யோக சிவராத்திரி திங்கட்கிழமை சம்பந்தமாய் வருவது நான்கு வகைப்படும்.
யோக சிவராத்திரி விரதம்:
ஒரு யோக சிவராத்திரி விரதம் இருந்தால், அது மூன்று கோடி மற்றைய சிவராத்திரி விரதம் இருந்த பலனைத் தரும் என்பது ஜதீகம்.
நித்திய சிவராத்திரி:
பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி 12, வளர்பிறைச் சதுர்த்தசி 12 இந்த இருபத்து நான்கும் நித்திய சிவராத்திரியாகும்.
பட்ச சிவராத்திரி:
தை மாதம் தேய்பிறைப் பிரதமை தொடங்கிப் பதின்மூன்று நாள் வரையில், நியமத்துடன் ஒரு பொழுது உணவு உண்டு. பதினான்காவது நாளான சதுர்த்தசியன்று விதிப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி ஆகும்.
மார்கழி மாத வளர்பிளைச் சதுர்த்தசி திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடி வந்தாலும் மாசிமாதத் தேப்பிறைச் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமையுடனோ அல்லது ஞாயிற்றுக்கிழமையுடனோ கூடி வந்தாலும் அந்த ஒரு சிவராத்திரி, மூன்று கோடி சிவராத்திரிகளுக்கு இணையானதாகும் என்று அறியப்படுகிறது.
நமது நாட்டு விரதங்களில் நவராத்திரி சிவராத்திரி என்ற இரண்டுமே ராத்திரி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. முன்னது அம்பிகையைப் பற்றியது. பின்னது சிவனைப் பற்றியது. ராத்திரி காலத்தில் பூஜை செய்ய வேண்டும் என்பதை இவை மெய்ப்பிக்கின்றன.
ராத்திரி என்பது என்ன?
ராத்திரி என்பது யாதொரு வேலையும் செய்யாமல் இருள் சூழ்ந்து உறங்கும் காலமாம். பகலெல்லாம் வேலை செய்து நாம் தினந் தோறும் இரவில் உறங்குகிறோம். அப்படி உறங்கி எழுந்தால் தான் உடலுக்கு ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. தூக்கம் இல்லாவிடில் உடலும் மனமும்; சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. நமது நன்மையை நாடி சர்வேஸ்வரன் நமக்குத்தந்தவரன் தூக்கமாம். ஆனால் அளவு கடந்தும் தூங்கககூடாது. தீர்க்க நித்திரை என்று மரணத்திற்குப் பெயர்.
எதனால் தூக்கம் வருகிறது?
எதனால் தூக்கம் வருகிறது, தூக்கம் அவசியம்தானா, என்று விசாரித்த சிலா இது ஒரு அரிய பாக்கியம் இன்றியமையாதது என்ற முடிவிற்கு வந்தனர்.
நமது உப நிஷத் ஸ்வம் அபீதோபவதி என்கிறது. அதாவது தூக்கத்தில் சிவன் நம்மை அடைகிறான். இதைத் தூங்குகிறான் என வேதம் மறைவிடமாகக் கூறுகிறது.
பகலெல்லாம் அலைந்து திரிந்த நமது இந்திரியங்களும் உடலும் சக்தியை இழந்து ஓய்வடைகின்றன. அச்சமயம் நமது இருதயத்தில் உள்ள ஈஸ்வரன் நம் ஜீவனை அணைத்து அருகில் அமர்த்துகின்றான். அச்சமயம் கண் காண்பதில்லை. காது கேட்பதில்லை. புத்தி ஒன்றையும் நினைப்பதில்லை. சுகமாகத்தூங்கினேன் என எழுந்தபின் கூறுகிறோம்.
சக்தி தரும் சிவன்- அச்சமயம் நாம் இழந்த சக்தியை பகவான் நமக்கு அளித்து அனுப்புகிறார். இப்படி இம்மண்னுலகும் விண்னுலகும் ஒரு சமயம் வேலையை விட்டு இறைவனிடம் ஒடுகிகிறது. இதுவே மஹாபிரளயம் எனப்படும். நாம் தினந்தோறும் தூங்குவது தைனந்தினப்ரளயம் எனப்படும். நாம் பகலில் வேலை செய்து களைத்துபபோவது போல் உலகெல்லாம் வளர்ச்சி காலத்தில் வேலை செய்து களைப்படைகிறது. அந்த பிரபஞ்சத்திற்கு இழந்த சக்தியை அளிப்பதற்காக சிவன் தனக்குள்லயப்படுத்துகிறார். இதே பிரளயம் எனப்படும். ப்ரலயம் என்பதே பிரளயம் என்றாயிற்று. லயம் என்றால் இரண்டறக் கலத்தல். பிர என்றால் உலகம். பிரளயம் என்றால் உலக ஒடுக்கம் என்பதாகும்.
பிரளயத்தில் இறைவனைத் தவிர ஒரு வஸ்துவும் காணப்படாது. மெழுகில் தங்கப்பொடிகள் உருத்தெரியாமல் மறைவது போல் உலகம் சிவனது சக்தியில் ஒளிந்திருக்கும். சிவனது சக்தியை ப்ரக்ருதி என்றும் மாயை என்றும் கூறுவார்கள். தட்டானைப்போல் பரமன் மெழுகு போன்ற ப்ரக்ருதியில் தங்கப்பொடி போன்ற ஜீவர்களை ஒடுக்குகிறார். தீயில் மெழுகை உருக்கினால் தங்கம் தனியே வருவது போல் சிருஸ்டி காலத்தில் ஜீவர்கள் கர்மாவிற்கு ஏற்றபடி உடல் எடுக்கிறார்கள்.
அப்படி உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே சிவராத்திரி ஆகும். அன்று சிவனைத்தவிர வேறு ஒரு வஸ்துவும் இல்லை. ஆனால் சிவனைவிட்டு என்றும் பிரியாத சக்தி மாத்திரம் இருப்பாள். அன்னையான உமையவள் குழந்தைகளான நம் பொருட்டு சிவனை அச்சமயம் பூஜித்தாள். சிவபூஜை இல்லாவிழல் நாம் வாழ முழயாது. உலகம் ஒடுங்கிய பொழுது பார்வதி- சிவனை நாம் சிவமாக (சேமமாக) இருப்பதற்காகப் பூஜித்த தினமே சிவராத்திரி ஆகும். அது மாசி மாத தேய் பிறையாகும்.
நமக்காக தேவி சிவனைப் பூஜித்த தினத்தில் நாம் சிவனைப் பூஜித்தால் தினம் பூஜிப்பதைவிட பன்மடங்கு பயனைத்தரும். அன்று சுத்த உபவாசம் இருந்து இரவு கண் விழித்து நான்கு கால பூஜை செய்பவருக்கு முக்தி தரவேண்டும் என தேவி வேண்டினாள். சிவனும் அவரரவர் விருப்பங்களை நான் நிறைவேற்றுவேன். அத்துடன் விருப்பமேயில்லாத மனநிலையையும் தந்தருளுவேன் என வரமளித்தார்.
அபிசேகப்ரியன்: அபிசேகப்ரியன் சிவன். அலங்காரப்ரியன் விஸ்ணு சிவலிங்கத்திற்கு அபசேகம் செய்யச் செய்ய நமது துன்பம் அகலும் நோய் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும். நல்ல எண்ணெய் பஞ்சகவ்யம் பஞ்சாமிருதம் நெய் பால்; தயிர் தேன் கரும்புச் சாறு இளநீர் பழரசம் சந்தனம் ஐந்து கலச தீர்த்தம் -இந்த வரிசைக் கிரமத்தில் இந்த வஸ்துக்களால் பதினொரு ருத்ர ஜபத்துடன் அபிசேகம் செய்யவேண்டும். பூஜை செய்யாதவர் புஜை செய்யும் இடத்தில் இவைகளை அளித்து அபிசேகம் தரிசனம் செய்யவேண்டும். சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும்; மூர்த்தி சிவன் அதேபோல் சீக்கிரம் கோபமும் உண்டாகும். ஆதலால் அபசேக திரவியங்களும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை செய்பவரும் சுத்தமாக இருந்து மனம் வாக்கு உடல் மூன்றும் ஒன்றுபட்டு நிதானமாக பூஜை செய்து சிவனருள் பெறலாம். சிவனுக்குரிய முக்கிய விரதங்களில் சிவராத்திரி விரதம் முக்கிய விரதமாகும். நித்ய, பட்ச, மாத, யோக, மகா சிவராத்திரி என சிவராத்திரி ஐந்து வகைப்படும். மாதந்தோறும் கிருட்ணபட்ச சதுர்த்தியில் வருவது நித்ய சிவராத்திரி ஆகும். மாதந்தோறும் வருவது மாத சிவராத்திரி ஆகும். திங்கட்கிழமை பகல், இரவு இரு பொழுதும் அமாவாசையாக இருந்தால் அது யோக சிவராத்திரி ஆகும். கிருட்ணபட்ச மாசி மாத சிவராத்திரி மகாசிவராத்திரி ஆகும்.
சிவராத்திரியைப் பற்றி பல புராணக்கதைகள் உண்டு. ஒரு காலத்தில் உலகம் அழிந்த போது மீண்டும் உலகை சிருஷ்டிக்க வேண்டி அன்னை உமாதேவி சிவபெருமானை வேண்டித் தவமிருந்த இரவே சிவராத்திரி ஆகும். இன்னொரு கதையில் ஒரு நாள் அன்னை உமா விளையாட்டாக தந்தை ஈசனின் கண்களை மூடியதாகவும், இதனால் உலகமே இருள் அடைந்து போனதாகவும், இதனால் பயந்து போன தேவர்கள் இரவு முழுவதும் இறைவனை வேண்டி வணங்கி மீண்டும் உலகிற்கு ஒளி கிடைக்கச்செய்ததாகவும் அந்த இருண்ட இரவே சிவராத்திரி ஆகும். மற்றொரு கதையில் ஒரு முறை ஒரு வேடன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் அன்று ஒரு விலங்கும் அகப்படவில்லை. பொழுதும் நன்றாக இருட்டிவிட்டது. ஆகவே இரவில் வீடு திரும்ப அஞ்சிய வேடன் ஒரு மரத்தின் மீதேறி அமர்ந்தான். துஸ்ட மிருகங்களிற்கு அஞ்சிய வேடன் அன்று இரவு முழுவதும் அந்த மரத்தின் இலைகளைப் பறித்து ஒவ்வொன்றாக கீழே போட்ட வண்ணம் இருந்தான். அந்த இலைகள் அந்த மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அது ஒரு வில்வ மரம். அன்றைய தினம் ஒரு மகாசிவராத்திரி தினமாகும். மகாசிவராத்திரி தினத்தில் அறியமலே சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளை பறித்துப் போட்ட வேடனிற்கு மோட்சம் கிடைத்ததாக இந்தக் கதை கூறுகிறது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் சிவராத்திரி அன்று வில்வ தளை கொண்டு சிவனை வழிபட்டால் சகல வினைகளும் நீங்கி சகல சுகங்களையும் நாம் பெறலாம் என்பதே ஆகும்.
நான்கு கால சிவ பூஜைகள்
சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது அவ்வாறு பூஜை மேறnடிகாண்டு பூஜையைச் செய்து முடிக்க முழயாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையைக்கண்டு களிக்கலாம். அன்று பூராகவும் உபவாசமாக இருந்து வரவேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment