Showing posts with label Spiritual. Show all posts
Showing posts with label Spiritual. Show all posts

Monday, 11 November 2013

ஹிந்து

ஹிந்து
 
ஹிந்து என்ற பெயர் ஒரு மதத்தை(religion), கலாச்சாரத்தை (culture), தத்துவ அறிவு (philosophy),  வாழ்க்கை முறையை (way of life), இவை அனைத்தையும் உள்ளடக்கிய பண்பாட்டை (culture) குறிக்கிறது.

'ஹிந்து மதம்', 'ஹிந்து' என்ற சொல் இந்திய சமயத்தினர்கள் மீது வெள்ளைக்காரர்கள் திணித்ததே. இந்தியாவில் மதம் என்ற பெயரில் எதுவுமே இருந்தது கிடையாது, தமிழில் சமயம் என்றும் வடமொழியில் 'தர்ம(ம்)' என்றே வழங்கப்பட்டு வந்தது. சடங்குகளையும், கொள்கைகளையும் சார்ந்தது சமயங்கள் அவற்றின் வேறுபாடுகளை வைத்து வைதீகம், பவுத்தம், ஆசிவகம், சமணம், வைணவம், சைவம், சிறுதெய்வ சமயம் என்று பல்வேறு பெயர்களில் வழங்கப் பெறலாயிற்று. ஆதி இந்தியர்கள் இவற்றில் எதோ ஒரு சமயம் சார்ந்தவர்களாக இருந்தனரேயன்றி அனைத்தையுமே ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர்.


சமண சமயம்

இந்தியாவில் தோன்றிய பழைய சமயங்களுள் சமண சமயமும் ஒன்று. இது பொதுவாக ஜைனம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆருகதம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அகிம்சை சமண சமயத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இன்று உலகில் சமண சமயத்தை ஏறத்தாள 5 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றார்கள். பல்வேறு வரலாற்று காலகட்டங்களில் தமிழர்களிடம் சமணம் பரவி இருந்தது, இன்றும் குறிப்பிடத்தக்க சமணர்கள் தமிழர்கள் ஆவார்கள். இவர்கள் தமிழ்ச் சமணர் அன்று அறியப்படுவர். வடநாட்டினின்று வந்த சமணரும் தமிழ்ச் சமணரும் கலாச்சார இரீதியாகவும் மொழி இரீதியாகவும் வேறுபட்டவர்கள் ஆவர். கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் மகாவீரரால் பின்பு இம்மதம் பிரசித்தப்படுத்தப்பட்டது.மகாவீரருக்கு முன்பு 24 தீர்த்தங்கரர் என அறியப்படும் சமணப்பெரியார்கள் இருந்துள்ளார்கள்.

சமணம் என்ற சொல்லின் பொருள்

சமணம் எனும் சொல் ஸ்ரமணம் என்ற வடமொழிச் சொல்லின் பாகத வடிவமே சமணம். கடிய நோன்புகளிளாலும், தவத்தாலும் தங்களைக் கடுமையாக வருத்திக் கொள்பவர் - சிரமப்படுத்திக்கொள்பவர் என்பது சமணர் என்ற சொல்லின் மற்றொரு பொருளாகும். எல்லா உயிர்களையும் சமமாகப் பார்க்கும் அருள் உள்ளம் உடையவர் என்றும் இச்சொல்லிற்கு சிறப்பு விளக்கம் செய்வர்.

சமண சமயப் பிரிவுகள்:

சமண சமயத்தில் ஆடையணியாமல் உடலில் திருநீறு பூசியபடி இருக்கும் திகம்பரர்களும் , வெள்ளை ஆடையினை உடுத்தியிருக்கும் சுவேதம்பரர்களும் இரு ஆதிப்பிரிவினர் ஆவார்கள். இவர்களிலிருந்து கீழ்வரும் பிரிவுகள் பிற்காலத்தில் தோற்றம் பெற்றன.
  • சுதனக்வாசி - இறைவனுக்கு உருவமில்லை என்பது இவர்கள் கொள்கை.
  • சுவேதம்பர தேராபந்த் - ஆச்சார்யா பிக்ஷு என்பவரால் தொடங்கப்பெற்றது.
  • பிசாபந்த
  • முர்டிபுஜக - உருவவழிபாட்டினை ஏற்றவர்கள்.

இல்லறத்தாரும் மற்றும் துறவறத்தாரும் பொதுவாக கடைபிடிக்க வேண்டிய ஐந்து அனுவிரதங்கள்

  1. அகிம்சை
  2. வாய்மை
  3. கள்ளாமை
  4. துறவு
  5. அவாவறுத்தல்

துறவறத்தார் கடைபிடிக்க வேண்டிய மகாவிரதங்கள்

  1. ஐம்பொறி அடக்கம் ஐந்து
  2. ஆவஸ்யகம் ஆறு
  3. லோசம்
  4. திகம்பரம் (உடை உடுத்தாமை)
  5. நீராடாமை
  6. பல் தேய்க்காமை
  7. தரையில் படுத்தல்
  8. நின்று உண்ணல்
  9. ஒரு வேளை மட்டும் உண்ணல்
சந்திரகுப்த மௌரியரின் அரசகுருவாக இருந்த பத்திரபாகு முனிவர் என்பவர் காலத்தில் சமண சமயம் தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக வந்தது என்பர். இந்தியாவின் வடப்பகுதியிலிருந்து பன்னீராயிரம் சமண முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்னகம் நோக்கி வந்தார். இவர் மைசூர் அருகேயிருக்கும் சிரவணபௌகொளவில் தம் குழுவுடன் தங்கினார். இவருடைய சீடரான விசாக முனிவர் சோழபாண்டிய நாட்டில் சமணம் பரவ வழிவகை செய்தார். இவ்வாறு இந்திய வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த சமண சமயம் பற்றி, கதா கோசம் எனும் நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. பத்திரபாகு முனிவரின் காலம் கி.மு. 317 முதல் கி.மு. 297 என்பதால் சமணம் தென்னகம் வந்த வரலாறு ஏறத்தாள 2500 காலத்திற்கும் முற்பட்டதாகும்.
அதன்பின் வடநாட்டில் தோன்றிய சமய நெறி என்றாலும், தமிழ்நாட்டில் வேரூன்றி பல நூற்றாண்டுகள் செழிப்புடன் விளங்கியது. தமிழ்நாட்டில், தமிழ் மொழியில், தமிழர் சிந்தனையில் சமணத்தின் பங்கு இணைபிரிக்க முடியாதது. சங்ககாலத்துப் பாடல் ஒன்று இவர்களை 'உண்ணாமையின் உயங்கிய மருங்குல் ஆடாப படிவத்து ஆன்றோர்' என்று குறிப்பிடுகிறது. (அகம் 123)
பாண்டிய மன்னன் நின்றிசீர் நெடுமாறன் காலத்தில் திருஞான சம்மந்தருடன் வாதத்தில் ஈடுபட்ட சமணர்கள், தாங்கள் வாதத்தில் தோற்றால் கழுவேறுவோம் என்று கூறினர். அனல் வாதம், புனல் வாதம் இரண்டிலும் திருஞான சம்பந்தர் வென்றதால் சமணர்கள் கழுவேறினார்கள்.
"சமணத்திற்கும் பெளத்தத்திற்குமிடையில் முரண்பாடு ஏறபட்டதும் புத்தசமயம் தமிழ்நாட்டை விட்டு இலங்கைக்குச் சென்றது. சமணமே தமிழகத்தின் தனிப்பெரும் சமயமாக பல நூற்றாண்டுகள் நிலைபெற்றிருந்தது. சிந்தாந்த ரீதியில் சமணர்களது அறநெறிகள் இன்றுவரை தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுள்ளன...தமிழக மக்கள் சிந்தனையில் சமண அறநெறிகள் உள்ளன."
தேவகோட்டையில் வாழ்ந்த மக்களிடம் சமன சமயத்தை பரப்ப வந்த சமன துறவிகளை தேவகோட்டை மன்னன் விரட்டியதால் உயிருக்கு பயந்து தற்பொதுள்ள சித்தன்னவாயில் என்னும் ஊரில் உள்ள ஒரு பாறையில் தஞ்சம் புகுந்தனர். அங்கு அவர்கள் ஓய்வு நேரத்தில் வரைந்த சமன துறவி ஒவியங்களே தற்போதுள்ள உலக புகழ் பெற்ற சித்தன்னவாசல் ஓவியங்கள் ஆகும்.

சமணரும் தமிழும்

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக "தமிழ்நாட்டில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்து, இலக்கிய வளம்மிக்க மொழி என்னும் அந்தஸ்தைத் தமிழ் அடையப் பெருமளவு காரணமாயினர். தமிழ்மொழியில் இலக்கியம், இலக்கணம் (மொழியியல்), உரைநடை, அகராதி நிகண்டு, மற்றும் தருக்கம் ஆகிய துறைககளில் சமணப்பெரியார்கள் ஆற்றியுள்ள பணி வியக்கத்தக்கது." 
  • சீவக சிந்தாமணி (சமணம், அரசன் சீவகன் வரலாறு, எட்டு மணம் பின் துறவறம், வடமொழி தழுவல்)
  • வளையாபதி (70 செய்யுள்கள் கிடைகின்றன)
  • நீலகேசி தற்போது கிடைக்கவில்லை
  • திருக்குறள்
  • நாலடியார்
  • பழமொழி நானூறு
  • ஏலாதி
  • திணைமாலை நூற்றைம்பது

ஐஞ்சிறுகாப்பியம்

  • உதயணகுமார காவியம் (சைனம், அரசன் உதயணன் வரலாறு)
  • நாககுமார காவியம் (சைனம், தற்போது கிடைக்கவில்லை)
  • யசோதர காப்பியம் (வடமொழி தழுவல், உயிர்கொலை கூடாது)
  • நீலகேசி (நீலி என்ற பெண் சைன முனிவர் சைன சிறப்பை எடுத்தியம்பும் காப்பியம்)
  • சூளாமணி (சைனம், திவிட்டன் விசயன் கதை, துறவு-முக்தி, வடமொழி தழுவல்)
  • பெருங்கதை (சைனம், அரசன் உதயணன் வரலாறு)

Thursday, 8 November 2012

Important Tamil books










Deiva Vaaku
Deiva Vaakku Bagam 2










































Monday, 11 June 2012

ஒருவரை மற்றவருக்கு அறிமுகப்படுத்துவது எப்படி?

முதன் முதலில் ஒருவரை அறிமுகப்படுத்தும் போது, அவரைப் பற்றி நல்ல அபிப்ராயம் ஏற்பட வேண்டும் என்பதற்கு ராம காவியத்தில் ஒரு நிகழ்வு நடந்திருப்பதைக் காணலாம். விஸ்வாமித்திரர் தான் மேற்கொண்ட யாகத்திற்கு இடையூறு செய்த அரக்கி தாடகையை அழிக்க தசரதரின் மகன்களான ராம-லட்சுமணர்களை யாகம் செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். யாகத்திற்கு இடையூறு செய்த தாடகை, ராமரால் வதம் செய்யப்பட்டாள். பிறகு ராம-லட்சுமணர்களை அழைத்துக் கொண்டு மிதிலைக்கு வந்தார். அங்கு ஜனகரை அரச சபையில் ராம-லட்சுமணர்களுடன் சந்தித்த விஸ்வாமித்திரர், ஜனகரிடம், இவர்கள் தசரதரின் மகன்கள். யாகம் ஒன்று வெற்றிபெற அழைத்துச் சென்றேன். யாகம் வெற்றிபெற ராமன் உதவினான்.

அது மட்டுமல்ல இப்பொழுது வரும் வழியில் கல்லாக மாறியிருந்த அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்து, மீண்டும் அவளை வாழ வைத்தான், என்று ராமனின் தயாள குணத்தை வர்ணித்தார். இங்கு முக்கியமான சம்பவத்தை மறைத்து விட்டார். அதாவது, தாடகையை ராமன் வதம் செய்தான் என்பதைக் கூறாமல் அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்தான் என்றார். ஏன் அப்படிக் கூறினார்? முதன்முதலில் ஒருவரை மற்றவருக்கு அறிமுகப்படுத்தும் போது நல்ல அபிப்ராயம் ஏற்படுத்துவதற்காக அகலிகையின் சாபம் தீர்த்தான் என்றார். அதுவே, முதன் முதலில் யாகத்தின் போது தாடகை என்பவளை வதம் செய்தான் என்று சொல்லியிருந்தால், ஜனகன் மனதில் என்ன இருந்தாலும் ஒரு பெண்ணைக் கொன்றவன் என்ற அபிப்ராயம் ஏற்பட்டிருக்கும். அதனால் தான் அப்படிக் கூறினாராம் விஸ்வாமித்திரர்.

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேசித்தார்?

அர்ஜுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் கீதை என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது. பகவான் அந்த கீதையை உபதேசித்தது பற்றியே ஒரு சந்தேகத்தை எழுப்பினான், அர்ஜுனன். அர்ஜுனனின் சந்தேகம் என்ன தெரியுமா ? ஸ்ரீ கிருஷ்ணர், மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை அருளியிருக்கிறார். நுட்பமான அரிய பல உண்மைகளை எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார் ? பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். ஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம். ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும் ? மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர். அவரை ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார் ? அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும்கூட பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இப்படி நல்லவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்துவிடுபவனும், ஆத்திரக்காரனுமான என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக கிருஷ்ணர் கருதியிருக்கிறாரே, இது எவ்வகையில் நியாயம் ? அர்ஜுனனின் இந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் கண்ணபிரான் கூறினார்.

அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை. தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.

அர்ஜுனா ! நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய் என்னிடம். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது - தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய் அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல; தகுதிச் சிறப்புதான் காரணம். அர்ஜுனன் அப்போதும்கூட அகந்தை எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான்.

Sunday, 10 June 2012

துளசி பூஜை

முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி சாவா மருந்தாகிய அமிர்தத்தைப் பெற முயன்றனர். அப்பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் ஆகியன உண்டாயின. ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அத்தி வலை அமிர்த கலசத்தில் விழுந்தது.

அக்கலசத்தின்றும் பச்சை நிறத்துடன் ஸ்ரீதுளசி மகாதேவி தோன்றினாள். துளசி, லட்சுமி, கௌதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகாவிஷ்ணு வைத்துக்கொண்டு ஏனையவற்றைத் தேவர்களுக்கு வழங்கி விட்டார். துளசி தளத்தில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவிணிதேவர் இருவர் ஆகியோர் உறைகின்றனர்.


இலையின் நுனியில் பிரமன், மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி சரசுவதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர். துளசியை நினைத்தால் பாவம் போகும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான். துளசியை வழிபட்டால் ஆயுள் பலம் புகழ் செல்வம் மகட்பேறு முதலியன பெருகும். துளசி காஷ்ட (கட்டை) மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசி தீர்த்தத்தைப் பருகினவர் பரமபதம் செல்வர்.

பக்தி!

பகவான் கிருஷ்ணரின் நினைவு எந்நேரமும் நம் நினைவில் இருந்தால் போதும். உலகில் எதையும் சாதிக்கலாம். பக்தனின் உண்மை அன்புக்கு அவன் உடனே கட்டுப்படுவான்.

ஒரு சமயம், கிருஷ்ணர் தனக்கு தலைவலி வந்தது போல நடித்தார். அவரது மனைவி சத்யபாமாவுக்கு விஷயம் தெரிந்து மருந்துடன் ஓடோடி வந்தாள். அடுத்து ருக்மணி வந்தாள். அவர்கள் தங்களால் ஆன வைத்தியத்தை எல்லாம் செய்து பார்த்தார்கள். வலியால் துடிப்பது போல நடித்தார்.

அந்த சமயத்தில் நாரதர் அங்கு வந்தார். ஊரையே ஏமாற்றும் நாரதரை உலகளந்த பெருமான் ஏமாற்றி விட்டார். உண்மையிலேயே, சுவாமிக்கு தலைவலி தான் போலும் என்று நம்பிவிட்டார். இதற்கான மருந்தை அந்த பரந்தாமனைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும் என நினைத்து, "ஐயனே! எங்களைப் போன்ற ஜடங்களுக்கு வியாதி வந்தால் வைத்தியர் மருந்தளிப்பார். நீயே உலகம். உனக்கு ஒன்று என்றால், அதற்கு மருந்தும் உன்னிடம் தானே இருக்கும். என்ன மருந்து என சொல். வரவழைக்க ஏற்பாடு செய்கிறேன்,'' என்றார்.

கிருஷ்ணர் அவரிடம், "என் மீது அதிக பக்திகொண்டவன் யாரோ, அவனது பாதத்தில் படிந்த மணலை உதிர்த்து தண்ணீரில் கலக்கிக் கொண்டு வாருங்கள். அந்த "பாததூளி தீர்த்தம்" என்னைக் குணமாக்கி விடும்,  என்றார். நாரதரும் தேடிப்பார்த்தார். யாரும் சிக்கவில்லை. எல்லாரும் தங்கள் பக்தியில் ஏதோ ஒரு குறை இருப்பதாகவே கூறினர்.

கிருஷ்ணரிடமே திரும்பிய நாரதர், "மருந்தைச் சொன்ன நீ மருந்து எங்குள்ளது?'' என்பதையும் சொல்லி விடு,'' என்றார்.

அதற்கு, கிருஷ்ணர் சொன்ன பதிலைக் கேட்டு, நாரதர் சிரித்துவிட்டார்.

"கிருஷ்ணா! கோபியர்களின் கால் தூசைக் கொண்டு வரச்சொல்கிறாயே! எங்களைப் போன்றவர்கள் யாகம், பூஜைகளால் உன்னை ஆராதிக்கிறோம்.

அப்படிப்பட்ட நாங்களே எங்கள் பாத தூசை தருவதற்கு யோசிக்கிறோம். கல்வியறிவற்ற கோகுலத்துப் பெண்களின் கால் தூசை கேட்கிறாயே! என்ன விளையாட்டு இது,'' என்றார்.

"சொன்னதைச் செய்,''என்றார் கிருஷ்ணர்.

நாரதர் கோகுலம் சென்றார்.

"கோபியரே! கிருஷ்ணனுக்கு உடல்நிலை சரியில்லை,''என்றார்.

இதைக் கேட்ட மாத்திரத்திலேயே பல கோபிகைகள் மயங்கி விழுந்து விட்டனர். சிலர் அரைகுறை மயக்கத்தில், "கண்ணா! உனக்கு என்னாயிற்று! கிருஷ்ணா! நீ பிழைக்காவிட்டால் நாங்களும் பிழையோம். இந்த உலகில் வாழமாட்டோம்,'' என்று உயிர்போகும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். சிலர், பித்துப் பிடித்ததைப் போல தயிர் பானைகளை கீழே போட்டு விட்டு அங்குமிங்குமாக ஓடினர்.

"கிருஷ்ணா! உனக்கு என்னாயிற்று? இப்போதே உன்னைப் பார்க்க வேண்டும்!'' என்று அரற்றினர். அவர்களின் பக்தியைப் பார்த்து நாரதர் அசந்து போனார்.

தேவலோகத்திற்கு போய், "கிருஷ்ணனுக்கு உடல்நிலை சரியில்லை, உங்களில் பக்தி மிக்கவர் பாதத்தூளியைக் கொடுங்கள் என்ற போது, "நாங்கள் ஒன்றும் அவர் நினைக்குமளவு பக்தி செலுத்தவில்லையே!'' என்றார்களே தவிர, ஒருவராவது இப்படி வருத்தப்பட்டார்களா! ஏன்! நராயணா! நாராயணா! என்று அவன் திருநாமத்தை எந்நேரமும் உச்சரிக்கும் நான் கூட அப்படி ஒரு நிலையை அடையவில்லையே! இந்தக் கோபிகைகளோ, "கிருஷ்ணனின் உடல்நிலை சரியில்லை எனக் கேட்டதுமே கலங்கித் துடிக்கிறார்களே! உயிரையே விடுமளவு பக்தி செலுத்துகிறார்களே! இவர்களின் பாதத்தூளியே கிருஷ்ணரின் வியாதியைக் குணப்படுத்தும்' என்று நினைத்த நாரதர், அவர்கள் பாதம்பட்ட கோகுலத்து மண்ணில் சிறிதளவு நீரில் கரைத்து கொடுத்தார். கிருஷ்ணருக்கு சுகமாகி விட்டது.

அந்தக் கண்ணனை நாமும் "கிருஷ்ணா! கிருஷ்ணா' என பக்தியுடன் நினைப்போம். அவனது கருணா கடாட்சத்துக்கு ஆளாவோம்.
 

‌சிவரா‌த்‌தி‌ரி ‌விரதம்

சிவராத்திரி அ‌ன்று விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். ‌வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். ‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்து பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம். இர‌வி‌ல் ‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் பூஜைக‌ள் கு‌றி‌த்த முழு ‌விவர‌மு‌ம் இ‌ங்கு தர‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ற்கே‌ற்ற பொரு‌ட்களை ‌நீ‌ங்க‌ள் வா‌ங்‌கி அ‌ளி‌க்கலா‌ம்.

முதல் சாமம்:- பஞ்சகவ்ய அபிசேகம் - சந்தனப்பூச்சு - வில்வம், தாமரை அலங்காரம் - அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் - ருக்வேத பாராயணம்.

இரண்டாம் சாமம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் - பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - பாயாசம் நிவேதனம் - யசுர் வேத பாராயணம்.

மூன்றாம் சாமம்:- தேன் அபிசேகம் - பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - எள் அன்னம் நிவேதனம் - சாமவேத பாராயணம்.

நான்காம் சாமம்:- கரும்புச்சாறு அபிசேகம் - நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்காரம் - அர்ச்சனை - சுத்தான்னம் நிவேதனம் - அதர்வன வேத பாராயணம்.

அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையு‌ம், உச்சிக்கால பூஜையையு‌ம் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். 
 
பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது.மாசி மாதத் தேய்ப்பிறைச் சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரியாகும்.சூரிய உதயம் முதல் இரவு முழுவதும் பகல் இரவு 60 நாழிகையும் அமாவாசை இருந்தால், அன்று யோக சிவராத்திரி. திங்கட்கிழமை அன்று சூரிய அஸ்தமனம் முதல், அன்றிரவு நான்கு ஜாமமும் தோப்பிறைச் சதுர்த்தி இருந்தால் அன்றைய தினமும் யோக சிவராத்திரி. திங்கட்கிழமை அன்று இரவு நான்காம் ஜாமத்தில், அமாவாசை அரை நாழிகை இருந்தாலும் யோக சிவராத்திரியாகும். திங்கட்கிழமை இரவு நான்காம் ஜாமத்தில், தேய்பிறைச் சதுர்த்தசி அரை நாழிகை இருந்தாலும் யோக சிவராத்திரியாகிறது. இப்படி யோக சிவராத்திரி திங்கட்கிழமை சம்பந்தமாய் வருவது நான்கு வகைப்படும்.

யோக சிவராத்திரி விரதம்:

ஒரு யோக சிவராத்திரி விரதம் இருந்தால், அது மூன்று கோடி மற்றைய சிவராத்திரி விரதம் இருந்த பலனைத் தரும் என்பது ஜதீகம்.

நித்திய சிவராத்திரி:

பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி 12, வளர்பிறைச் சதுர்த்தசி 12 இந்த இருபத்து நான்கும் நித்திய சிவராத்திரியாகும்.

பட்ச சிவராத்திரி:

தை மாதம் தேய்பிறைப் பிரதமை தொடங்கிப் பதின்மூன்று நாள் வரையில், நியமத்துடன் ஒரு பொழுது உணவு உண்டு. பதினான்காவது நாளான சதுர்த்தசியன்று விதிப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி ஆகும். 
 
மார்கழி மாத வளர்பிளைச் சதுர்த்தசி திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடி வந்தாலும் மாசிமாதத் தேப்பிறைச் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமையுடனோ அல்லது ஞாயிற்றுக்கிழமையுடனோ கூடி வந்தாலும் அந்த ஒரு சிவராத்திரி, மூன்று கோடி சிவராத்திரிகளுக்கு இணையானதாகும் என்று அறியப்படுகிறது. 

நமது நாட்டு விரதங்களில் நவராத்திரி சிவராத்திரி என்ற இரண்டுமே ராத்திரி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. முன்னது அம்பிகையைப் பற்றியது. பின்னது சிவனைப் பற்றியது. ராத்திரி காலத்தில் பூஜை செய்ய வேண்டும் என்பதை இவை மெய்ப்பிக்கின்றன.

ராத்திரி என்பது என்ன?

ராத்திரி என்பது யாதொரு வேலையும் செய்யாமல் இருள் சூழ்ந்து உறங்கும் காலமாம். பகலெல்லாம் வேலை செய்து நாம் தினந் தோறும் இரவில் உறங்குகிறோம். அப்படி உறங்கி எழுந்தால் தான் உடலுக்கு ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. தூக்கம் இல்லாவிடில் உடலும் மனமும்; சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. நமது நன்மையை நாடி சர்வேஸ்வரன் நமக்குத்தந்தவரன் தூக்கமாம். ஆனால் அளவு கடந்தும் தூங்கககூடாது. தீர்க்க நித்திரை என்று மரணத்திற்குப் பெயர்.

எதனால் தூக்கம் வருகிறது?

எதனால் தூக்கம் வருகிறது, தூக்கம் அவசியம்தானா, என்று விசாரித்த சிலா இது ஒரு அரிய பாக்கியம் இன்றியமையாதது என்ற முடிவிற்கு வந்தனர்.

நமது உப நிஷத் ஸ்வம் அபீதோபவதி என்கிறது. அதாவது தூக்கத்தில் சிவன் நம்மை அடைகிறான். இதைத் தூங்குகிறான் என வேதம் மறைவிடமாகக் கூறுகிறது.

பகலெல்லாம் அலைந்து திரிந்த நமது இந்திரியங்களும் உடலும் சக்தியை இழந்து ஓய்வடைகின்றன. அச்சமயம் நமது இருதயத்தில் உள்ள ஈஸ்வரன் நம் ஜீவனை அணைத்து அருகில் அமர்த்துகின்றான். அச்சமயம் கண் காண்பதில்லை. காது கேட்பதில்லை. புத்தி ஒன்றையும் நினைப்பதில்லை. சுகமாகத்தூங்கினேன் என எழுந்தபின் கூறுகிறோம்.

சக்தி தரும் சிவன்- அச்சமயம் நாம் இழந்த சக்தியை பகவான் நமக்கு அளித்து அனுப்புகிறார். இப்படி இம்மண்னுலகும் விண்னுலகும் ஒரு சமயம் வேலையை விட்டு இறைவனிடம் ஒடுகிகிறது. இதுவே மஹாபிரளயம் எனப்படும். நாம் தினந்தோறும் தூங்குவது தைனந்தினப்ரளயம் எனப்படும். நாம் பகலில் வேலை செய்து களைத்துபபோவது போல் உலகெல்லாம் வளர்ச்சி காலத்தில் வேலை செய்து களைப்படைகிறது. அந்த பிரபஞ்சத்திற்கு இழந்த சக்தியை அளிப்பதற்காக சிவன் தனக்குள்லயப்படுத்துகிறார். இதே பிரளயம் எனப்படும். ப்ரலயம் என்பதே பிரளயம் என்றாயிற்று. லயம் என்றால் இரண்டறக் கலத்தல். பிர என்றால் உலகம். பிரளயம் என்றால் உலக ஒடுக்கம் என்பதாகும்.

பிரளயத்தில் இறைவனைத் தவிர ஒரு வஸ்துவும் காணப்படாது. மெழுகில் தங்கப்பொடிகள் உருத்தெரியாமல் மறைவது போல் உலகம் சிவனது சக்தியில் ஒளிந்திருக்கும். சிவனது சக்தியை ப்ரக்ருதி என்றும் மாயை என்றும் கூறுவார்கள். தட்டானைப்போல் பரமன் மெழுகு போன்ற ப்ரக்ருதியில் தங்கப்பொடி போன்ற ஜீவர்களை ஒடுக்குகிறார். தீயில் மெழுகை உருக்கினால் தங்கம் தனியே வருவது போல் சிருஸ்டி காலத்தில் ஜீவர்கள் கர்மாவிற்கு ஏற்றபடி உடல் எடுக்கிறார்கள்.

அப்படி உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே சிவராத்திரி ஆகும். அன்று சிவனைத்தவிர வேறு ஒரு வஸ்துவும் இல்லை. ஆனால் சிவனைவிட்டு என்றும் பிரியாத சக்தி மாத்திரம் இருப்பாள். அன்னையான உமையவள் குழந்தைகளான நம் பொருட்டு சிவனை அச்சமயம் பூஜித்தாள். சிவபூஜை இல்லாவிழல் நாம் வாழ முழயாது. உலகம் ஒடுங்கிய பொழுது பார்வதி- சிவனை நாம் சிவமாக (சேமமாக) இருப்பதற்காகப் பூஜித்த தினமே சிவராத்திரி ஆகும். அது மாசி மாத தேய் பிறையாகும்.

நமக்காக தேவி சிவனைப் பூஜித்த தினத்தில் நாம் சிவனைப் பூஜித்தால் தினம் பூஜிப்பதைவிட பன்மடங்கு பயனைத்தரும். அன்று சுத்த உபவாசம் இருந்து இரவு கண் விழித்து நான்கு கால பூஜை செய்பவருக்கு முக்தி தரவேண்டும் என தேவி வேண்டினாள். சிவனும் அவரரவர் விருப்பங்களை நான் நிறைவேற்றுவேன். அத்துடன் விருப்பமேயில்லாத மனநிலையையும் தந்தருளுவேன் என வரமளித்தார்.

அபிசேகப்ரியன்: அபிசேகப்ரியன் சிவன். அலங்காரப்ரியன் விஸ்ணு சிவலிங்கத்திற்கு அபசேகம் செய்யச் செய்ய நமது துன்பம் அகலும் நோய் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும். நல்ல எண்ணெய் பஞ்சகவ்யம் பஞ்சாமிருதம் நெய் பால்; தயிர் தேன் கரும்புச் சாறு இளநீர் பழரசம் சந்தனம் ஐந்து கலச தீர்த்தம் -இந்த வரிசைக் கிரமத்தில் இந்த வஸ்துக்களால் பதினொரு ருத்ர ஜபத்துடன் அபிசேகம் செய்யவேண்டும். பூஜை செய்யாதவர் புஜை செய்யும் இடத்தில் இவைகளை அளித்து அபிசேகம் தரிசனம் செய்யவேண்டும். சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும்; மூர்த்தி சிவன் அதேபோல் சீக்கிரம் கோபமும் உண்டாகும். ஆதலால் அபசேக திரவியங்களும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை செய்பவரும் சுத்தமாக இருந்து மனம் வாக்கு உடல் மூன்றும் ஒன்றுபட்டு நிதானமாக பூஜை செய்து சிவனருள் பெறலாம். சிவனுக்குரிய முக்கிய விரதங்களில் சிவராத்திரி விரதம் முக்கிய விரதமாகும். நித்ய, பட்ச, மாத, யோக, மகா சிவராத்திரி என சிவராத்திரி ஐந்து வகைப்படும். மாதந்தோறும் கிருட்ணபட்ச சதுர்த்தியில் வருவது நித்ய சிவராத்திரி ஆகும். மாதந்தோறும் வருவது மாத சிவராத்திரி ஆகும். திங்கட்கிழமை பகல், இரவு இரு பொழுதும் அமாவாசையாக இருந்தால் அது யோக சிவராத்திரி ஆகும். கிருட்ணபட்ச மாசி மாத சிவராத்திரி மகாசிவராத்திரி ஆகும்.

சிவராத்திரியைப் பற்றி பல புராணக்கதைகள் உண்டு. ஒரு காலத்தில் உலகம் அழிந்த போது மீண்டும் உலகை சிருஷ்டிக்க வேண்டி அன்னை உமாதேவி சிவபெருமானை வேண்டித் தவமிருந்த இரவே சிவராத்திரி ஆகும். இன்னொரு கதையில் ஒரு நாள் அன்னை உமா விளையாட்டாக தந்தை ஈசனின் கண்களை மூடியதாகவும், இதனால் உலகமே இருள் அடைந்து போனதாகவும், இதனால் பயந்து போன தேவர்கள் இரவு முழுவதும் இறைவனை வேண்டி வணங்கி மீண்டும் உலகிற்கு ஒளி கிடைக்கச்செய்ததாகவும் அந்த இருண்ட இரவே சிவராத்திரி ஆகும். மற்றொரு கதையில் ஒரு முறை ஒரு வேடன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் அன்று ஒரு விலங்கும் அகப்படவில்லை. பொழுதும் நன்றாக இருட்டிவிட்டது. ஆகவே இரவில் வீடு திரும்ப அஞ்சிய வேடன் ஒரு மரத்தின் மீதேறி அமர்ந்தான். துஸ்ட மிருகங்களிற்கு அஞ்சிய வேடன் அன்று இரவு முழுவதும் அந்த மரத்தின் இலைகளைப் பறித்து ஒவ்வொன்றாக கீழே போட்ட வண்ணம் இருந்தான். அந்த இலைகள் அந்த மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அது ஒரு வில்வ மரம். அன்றைய தினம் ஒரு மகாசிவராத்திரி தினமாகும். மகாசிவராத்திரி தினத்தில் அறியமலே சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளை பறித்துப் போட்ட வேடனிற்கு மோட்சம் கிடைத்ததாக இந்தக் கதை கூறுகிறது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் சிவராத்திரி அன்று வில்வ தளை கொண்டு சிவனை வழிபட்டால் சகல வினைகளும் நீங்கி சகல சுகங்களையும் நாம் பெறலாம் என்பதே ஆகும்.

நான்கு கால சிவ பூஜைகள்

சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது அவ்வாறு பூஜை மேறnடிகாண்டு பூஜையைச் செய்து முடிக்க முழயாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையைக்கண்டு களிக்கலாம். அன்று பூராகவும் உபவாசமாக இருந்து வரவேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

பாஞ்சாலி ஏன் சிரித்தாள் ?

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, தட்சிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக், காத்திருந்தார். அவர் மரணமடைவதற்கு முன்பு, அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார். தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார்.

பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி "தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும்" என்று கேட்க, பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள். அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த தர்மர், " நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் ? " என்று கடுமையாகக் கேட்டார்.

"துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்ய  முயன்றபோது, கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்? தர்மம் தெரிந்த பீஷ்மர், அந்தச் சபையில் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றி கேட்கிறீர்களே என்று நினைக்கும்போது சிரிக்காமல் என்ன செய்வது? "என்று சொல்ல, பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள். 
 
பீஷ்மர் பேசினார். "பாஞ்சாலி சொன்னது முற்றிலும் உண்மை. அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும், உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும். துரியோதனன், அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறைய உபசரிப்பான். ஆனால், அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல. சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு, அவர்களை தன் காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வான். உண்டவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள். இதற்கு சல்லியன் ஓர் உதாரணம் .

"ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது. அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்ய  முயன்றபோது எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன் ."

"ஆனால் இப்போது, பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது. அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன. இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது. எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவன். கேளுங்கள்" என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார் .

அதனால்தான் அந்தக் காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள்.
 

மார்க்கண்டேயர்

திருக்கடையூருக்கு சற்று தூரத்தில் அமைந்திருந்த காட்டுப் பகுதியில் குடில் அமைத்து மிருகண்டு என்ற மகரிஷியும், அவரது மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை ஆசை ஏற்பட்டதால் மிருகண்டு மகரிஷி சிவபெருமானை நோக்கி ஒற்றைக் காலில் தவம் இருந்தார்.

அவரது கடும் தவத்தில் ஈசனும் மனமுருகி அவர் முன் தோன்றினார். அவரிடம் குழந்தை வரம் கேட்டார் மிருகண்டு மகரிஷி. அந்த வரத்தை கொடுத்த சிவபெருமான், அத்துடன் ஒரு நிபந்தனையையும் விதித்தார். குறைந்த ஆயுளும், நிறைந்த அறிவும் கொண்ட பிள்ளை வேண்டுமா? அல்லது நீண்ட ஆயுளுடன், ஆனால் குறைந்த அறிவும் கொண்ட மகன் வேண்டுமா? என்பதுதான் அந்த நிபந்தனை.

முட்டாளாக 100 வயது வாழ்வதைவிட நிறைந்த அறிவுடன் குறைவான ஆயுள் வாழ்வதே சிறந்தது என்று முடிவெடுத்த மிருகண்டு மகரிஷி, குறைந்த ஆயுளுடன் மெத்த அறிவு கொண்ட குழந்தையைக் கேட்டார். அதற்கு சிவபெருமான், நீ வேண்டியபடியே மகன் பிறப்பான். அந்த குழந்தை 16 ஆண்டுகளே உயிர் வாழும் என்று அருளிவிட்டு மறைந்தார். 

ஒரு வருடம் கழிந்தது.மிருகண்டு மகரிஷி தம்பதியர்க்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். சிவபெருமான் அருளிய வரத்தினால் பிறந்ததாலோ என்னவோ, அவர் மீது மிகுந்து பற்று கொண்டு வளர்ந்தான் மார்க்கண்டேயன். சகல சாஸ்திரங்களையும், வேதங்களையும் படித்துத் தேறினான். எந்தக் கேள்வி கேட்டாலும் அவனிடம் இருந்து சட்டென்று பதில் வந்தது. மகனின் திறமையை எண்ணி பெருமிதம் கொண்டனர் மிருகண்டு தம்பதியர்.

மார்க்கண்டேயன் தினமும் திருக்கடையூர் வந்து, அங்கு அமிர்தகடேஸ்வரராக எழுந்தருளி அருள்பாலிக்கும் சிவபெருமானை தொழுது வந்தான். நாட்கள் வேகமாக ஓடின. மார்க்கண்டேயன் வாலிப வயதை அடைந்தான். அதுவரை மகனின் திறமையை பார்த்து வியந்து வந்த மிருகண்டு தம்பதியர், அவனது ஆயுள் முடியப் போகிறதே... என்று வருந்தினர். உண்மையை அறிந்த மார்க்கண்டேயன், பெற்றோரின் இந்த நிலையைக் காண சகிக்காமல் தனது 15 வயதிலேயே ஒவ்வொரு சிவ தலமாக சென்று 108 சிவ தலங்களை தரிசிக்க எண்ணினான். அதன்படி 107 சிவ ஸ்தலங்களில் வழிபட்டுவிட்டு இறுதியாக தனது 16 வயதில் திருக்கடையூர் வந்தான்.

“அமிர்தகடேஸ்வரரே... நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்“ என்று, அந்த சிவலிங்கம் முன்பு விழுந்து வணங்கி மந்திரங்கள் சொல்லத் தொடங்கினான்.அந்தநேரம் அவனது உயிரை எடுக்க எமனும் வந்து விட்டான். தனது தவத்தின் வலிமையால் அவனால் எமனைப் பார்க்க முடிந்தது. உடனே, அப்படியே அமிர்தகடேஸ்வரரான லிங்கத்தைக் கட்டியணைத்துக் கொண்டான். எமனும் அவன் உயிரைப் பறிக்க தன் பாசக்கயிறை வீசினான். அது சிவலிங்கத்தையும் சேர்ந்து விழுந்தது. கயிற்றை பலமாக இழுத்தான். ஆனால், அவனால் இழுக்க முடியவில்லை.

தன்மீது பாசக்கயிற்றை வீசி இழுத்த எமனைக் கண்டு கோபம் கொண்டார் சிவபெருமான். சட்டென்று லிங்கம் பிளந்து வெளியே வந்தார். “காலனே எனக்கும் சேர்த்தா பாசக் கயிறு வீசுகிறாய்?“ கோபத்தில் கர்ஜித்தவர் எமனை எட்டி உதைத்தார். அதன் பின்னரும் கோபம் தணியாமல் தன் கையில் இருந்த சூலாயுதத்தினால் காலனைச் சம்ஹாரம் செய்து, ‘கால சம்ஹாரமூர்த்தி’ ஆனார். தொடர்ந்து, மார்க்கண்டேயனை அன்புடன் தடவி, “என்றும் பதினாறாக இருக்கக் கடவாய்“ என்று சிரஞ்சீவி பட்டம் அளித்தார்.

எமன் இறந்தால் பூலோகம் என்ன ஆகும்...? பூமாதேவியால் பூமியின் பாரத்தை தாங்க முடியவில்லை. “இறப்பே இல்லாமல் இருந்தால் எனக்குச் சுமை அதிகமாகும். ஆகையால் எமனுக்கு உயிர்ப் பிச்சை அளியுங்கள்” என்று வேண்டினாள்.சிவபெருமானும் எமனுக்கு உயிர்ப் பிச்சை அளித்து ஒரு நிபந்தனையும் விதித்தார். “யார் என்னிடத்தில் மிக பக்தியாக உள்ளார்களோ அவர்களை வதைக்காதே!” என்பதுதான் அந்த நிபந்தனை.

மணமேடையில் மறைந்துள்ள ரகசியங்கள்

மணக்கோலம் காணும் மணமக்கள், மணமேடையில் தாலிகட்டிக் கொள்வர். அந்த மணமேடை தத்துவார்த்த ரீதியாக அமைக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரியாது. தாலி கட்டி முடிந்ததும் மணமேடையை மூன்று முறை வலம் வரச் சொல்வது வழக்கம். ஆலயத்தை வலம் வருவது போல மணப்பந்தலை வலம்வர காரணம் மணப்பந்தலில் அமைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் யாவும் தெய்வ வடிவங்களாகும். பந்தலில் ஊன்றப் பட்டிருக்கும் நான்கு கால்களும், நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. திருமணம் விக்னேஷ்வரர் சாட்சியாகவும், அக்னிசாட்சியாகவும் நடைபெறுகிறது. அரசன் ஆணைக்கால் என்று அரசானிக்கால் வைக்கப்படுகிறது. குபேரனுக்குரிய நவதானியமும் வைக்கப்பட்டுள்ளது. மணப்பந்தலை வலம் வரும் பொழுது தெய்வத்தை, திருவிளக்கை, அக்னியை, மரத்தை வலம் வந்து, அவற்றின் அருளையும் பெறுகின்றோம்.

நரசிம்மர்

இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். 
 
தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தனர். குடலைப்பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமிகூட அவர் அருகில் செல்ல பயந்தாள். என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன், என்றாள். அவர் அருகில் செல்லும் தகுதி அவரது பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது.

தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன் அவரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத் தானே அவர் அங்கு வந்திருக்கிறார்! தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார். பிரகலாதா! என்னை மன்னிப்பாயா? என்றார். அவனுக்கு தூக்கி வாரிபோட்டது. சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்? என்றான். உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு, என்றார் நரசிம்மர். 
 
பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது. மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள், என்ற நரசிம்மரிடம், பிரகலாதன், ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது, என்றான். பணம் இருக்கிறது, படிப்பு இருக்கிறது. ஆனால், ஆசை வேண்டாம் என்கிறான் பிரகலாதன். குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்கவும், நாடாளவும் மட்டும் அல்ல! இறை சிந்தனையையும் வளர்த்துக் கொள்வதற்கு!

படித்தால் மட்டும் போதாது. பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. பகவானை கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகிப் போனான். இந்த சின்னவயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே! ஆனாலும், அவர் விடவில்லை. இல்லையில்லை! ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும், நரசிம்மர் விடாமல் கெஞ்சினார். 
 
பகவான் இப்படி சொல்கிறார் என்றால், தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும் என்று முடிவெடுத்த பிரகலாதன், இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள், என்றான். நரசிம்மர் அவனிடம், பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் என் இடத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர், என்றார். தந்தை கொடுமை செய்தாரே என்பதற்காக அவரை பழிவாங்கும் உணர்வு பிரகலாதனிடம் இல்லை. 
 

கந்தசஷ்டி கவசம் உருவான கதை

கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும், நோய் நொடிகளிலிருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.

இந்த கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். தேவராய சுவாமிகள் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா?

தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார்.

அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.

நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார்.

அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும்.

தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.

அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த,

'சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்'

என்று தொடங்கும் கவசம்.

இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும்.

முருகனுக்கு உகந்தநாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு. முருகனுக்கு முகங்கள் ஆறு. முருகனின் படை வீடுகள் ஆறு. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு, 'சரவணபவ' என்ற முருகனின் மந்திரம் ஆறெழுத்து, ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு பேன்றவற்றை குறிக்கும்.

இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா?

இத்த்னை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும்.

கருணையுள்ள கண்ணன்

அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். 
 
உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத் தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான். அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.

அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச் சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் சொல்ல, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய் சொல்ல, ஏன்... அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி. எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர். 
 
என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அறவே பிடிக்காதோ, யாரொருவன் கண்ணனைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த சகுனி கண்ணாடியில் தெரிந்தான். கண்ணா! மாயம் செய்கிறாயா? என அனை வரும் ஒரே நேரத்தில் கேட்டனர். இல்லை..இல்லை... என்னைக் கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி. என்னை எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல! கணநேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள், என்றான் கருணையுள்ள கண்ணன்.

Friday, 8 June 2012

எல்லாம் கடவுள் செயலே

திருநாவுக்கரசர் தாண்டகம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். எல்லாம் கடவுள் செயலே என்பதை ஒரு திருத்தாண்டகப் பாட்டில் மிக அழகாகப் பாடியுள்ளார் திருநாவுக்கரசர். நீ ஆடச் செய்தால் அதற்குத் தகுந்தபடி ஆடாதவர் யார்? நீ அடங்கச் செய்தால் அடங்காதவர் யார்? நீ ஓடச் செய்தால் ஓடாதவர் யார்? உருகச் செய்தால் உருகாதவர் யார்? நீ காணச் செய்தால் காணாதவர் யார்? நீ காட்டா விட்டால் காணவல்லவர் யார்? என்ற கருத்தினை கீழ்வரும் பாடலில் தெளிவாக விளக்குகிறார்.
ஆட்டுவித்தால்ஆர் ஒருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே
உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே

Tuesday, 8 May 2012

காலத்தை பற்றிய குறிப்பு

பொழுது போகவில்லை.குறைந்தபட்சம் பொழுது எப்படி போகுதுன்னாவது தெரிஞ்சிக்கலாம் வாங்க...

பொழுது என்பது காலம் என்று பொருள்படும். காலம்சிறுபொழுது, பெரும்பொழுது என்று இரண்டு வகையாகப்பிரிக்கப்பட்டுள்ளது.

சிறு பொழுது

சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும்.சிறுபொழுது பின்வருமாறு அமையும்.

வைகறை - விடியற்காலம்
காலை - காலைநேரம்
நண்பகல் - உச்சி வெயில் நேரம்
எற்பாடு - சூரியன் மறையும் நேரம்
மாலை - முன்னிரவு நேரம்
யாமம் - நள்ளிரவு நேரம்
சிறுபொழுது ஆறும் ஒரு நாளின் ஆறு கூறுகளாகஇருப்பதை அறியலாம்.

பெரும்பொழுது

பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும்.ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறுபிரிவுகளாகப் பிரிப்பர். இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால்பெரும்பொழுது எனப்படுகிறது. ஆண்டில் உள்ள பன்னிரண்டுமாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும் பொழுதுகளாகப்பிரிக்கப்பட்டுள்ளன.


சித்திரை, வைகாசி - இளவேனில் காலம்
ஆனி, ஆடி - முதுவேனில் காலம்
ஆவணி, புரட்டாசி - கார் காலம்
ஐப்பசி, கார்த்திகை - குளிர்காலம்
மார்கழி, தை - முன்பனிக் காலம்
மாசி, பங்குனி - பின்பனிக் காலம்

இன்பம்

அழியும் உடலுடன் இரண்டற கலந்து அத்துடன்
அழியும் அற்ப இன்பந்தான் சிற்றின்பம்.
ஆதி அந்தமிலாத இறைவனுடன் இரண்டற கலந்து
அழிவே இல்லாத நிலையை அடையும் இன்பந்தான் பேரின்பம்.
பட்டினத்தார்

Wednesday, 25 April 2012

Change Your Thinking

Two men, both seriously ill, occupied the same hospital room. One man was allowed to sit up in his bed for an hour each afternoon to help drain the fluid from his lungs. His bed was next to the room's only window. The other man had to spend all his time flat on his back. The men talked for hours on end. They spoke of their wives and families, their homes, their jobs, their involvement in the military service, where they had been on vacation. Every afternoon, when the man in the bed by the window could sit up, he would pass the time by describing to his roommate all the things he could see outside the window. The man in the other bed began to live for those one hour periods where his world would be broadened and enlivened by all the activity and color of the world outside. The window overlooked a park with a lovely lake. Ducks and swans played on the water while children sailed their model boats. Young lovers walked arm in arm amidst flowers of every color and a fine view of the city skyline could be seen in the distance. As the man by the window described all this in exquisite details, the man on the other side of the room would close his eyes and imagine this picturesque scene. One warm afternoon, the man by the window described a parade passing by. Although the other man could not hear the band - he could see it in his mind's eye as the gentleman by the window portrayed it with descriptive words. Days, weeks and months passed.

One morning, the day nurse arrived to bring water for their baths only to find the lifeless body of the man by the window, who had died peacefully in his sleep. She was saddened and called the hospital attendants to take the body away. As soon as it seemed appropriate, the other man asked if he could be moved next to the window. The nurse was happy to make the switch, and after making sure he was comfortable, she left him alone. Slowly, painfully, he propped himself up on one elbow to take his first look at the real world outside. He strained to slowly turn to look out the window besides the bed. It faced a blank wall. The man asked the nurse what could have compelled his deceased roommate who had described such wonderful things outside this window. The nurse responded that the man was blind and could not even see the wall. She said, 'Perhaps he just wanted to encourage you.'

Epilogue:
There is tremendous happiness in making others happy, despite our own situations. Shared grief is half the sorrow, but happiness when shared, is doubled. If you want to feel rich, just count all the things you have that money can't buy. 

'Today is a gift that is why it is called The Present.’