திருநாவுக்கரசர் தாண்டகம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். எல்லாம்
கடவுள் செயலே என்பதை ஒரு திருத்தாண்டகப் பாட்டில் மிக அழகாகப் பாடியுள்ளார்
திருநாவுக்கரசர். நீ ஆடச் செய்தால் அதற்குத் தகுந்தபடி ஆடாதவர் யார்? நீ
அடங்கச் செய்தால் அடங்காதவர் யார்? நீ ஓடச் செய்தால் ஓடாதவர் யார்? உருகச்
செய்தால் உருகாதவர் யார்? நீ காணச் செய்தால் காணாதவர் யார்? நீ காட்டா
விட்டால் காணவல்லவர் யார்? என்ற கருத்தினை கீழ்வரும் பாடலில் தெளிவாக விளக்குகிறார்.
- ஆட்டுவித்தால்ஆர் ஒருவர் ஆடா தாரே
- அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்கா தாரே
- ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே
- உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகா தாரே
- பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடா தாரே
- பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே
- காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே
- காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே
No comments:
Post a Comment