ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான். அந்நாட்டு அரசனைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தான். அந்த நாட்டு மக்கள் அனைவரும் பண்பும் அன்பும் கொண்டவர்கள் என்பதே காரணம்.
இதைத் தெரிந்து கொள்ள பகைநாட்டு மன்னனின் சேவகர் இருவரை அழைத்து அவர்கள் முன்னே அறுசுவை உணவினை வைத்து உண்ணச் சொன்னான். உண்ணும்போது உண்பவர்முழங்கை மடங்கக் கூடாது.என்று கட்டளையிட்டான்.
இருவரும் சற்று சிந்தித்தனர்அவர்களில் ஒருவன் தன கையில் உணவை எடுத்து கையை மடக்காமல் எதிரே இருந்த நண்பனின் வாயில் ஊட்டினான். அதைப் பார்த்த மற்ற சேவகனும் அதேபோல செய்தான். இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொண்டதால் இருவரின் வயிறும் நிறைந்தது.
இதைப் பார்த்த மன்னனுக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே இந்த மன்னனுடைய மக்கள் மிக நல்ல மனம் படைத்தவர்கள் தான் என முடிவு செய்து அந்த மன்னனை சிறையிலிருந்து விடுவித்து தன் நண்பனாக்கிக் கொண்டான்.
பிறருக்கு உணவளித்தால் நமக்கு எப்படியேனும் உணவு கிடைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதைத்தான் ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்றார்கள்.
No comments:
Post a Comment