Sunday, 10 June 2012

பிராண சக்தி

நம் உடம்பின் இயக்கத்துக்குப் பிராண சக்தியே மூலகாரணமாக விளங்குகிறது . நம் உடம்பில் பிராண சக்தியின் இருப்பு குறைந்தால் சோர்வும், களைப்பும், நோய்களும் உண்டாகும். எண்ணுதல், பார்த்தல், பேசுதல், சாப்பிடுதல், வேலை செய்தல் முதலிய பல பணிகளால் பிராண சக்தி செலவாகிறது .

மவுனம்: ஒரு நாளைக்கு மவுனமாக இருப்பதன் மூலம் பிராண சக்தியைச் சேமிக்கலாம் . மவுனம் 3 வகைப்படும் . அவை வாய் மவுனம், உடல் மவுனம், மனோ மவுனம் என்பன. பேசாமல் இருப்பது வாய் மவுனம். சைகைகள் கூட இல்லாமல் இருப்பது உடல் மவுனம். மனதில் எதுவும் எண்ணாமல் இருப்பது மனோ மவுனம் ஆகும் .

மவுன உண்ணா நோன்பு: பேசாவிரதமும், உண்ணாவிரதமும் சேர்ந்து மேற்கொள்வது மவுன உண்ணா நோன்பு ஆகும் . இதனால் பிராண சக்தியை சேமித்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் .

முத்திரைகளால் மூச்சுப்பயிற்சி: கைவிரல்களால் எளிய முத்திரைகளுடன் மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் பிராண சக்தியைப் பெருக்கிக் கொள்ளலாம். இரண்டு கைகளிலும் மோதிர விரலின் 3ம் அங்குலாஸ்தியை கட்டை விரலால் தொட்டுக்கொண்டு செய்வது விஷம் நீக்கு முத்திரை ஆகும். இந்த முத்திரையில் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்தால் உடலின் கழிவுகள் வெளியேறும். கட்டை விரல் நுனியுடன் மோதிர விரல், சுண்டு விரல் நுனியைச் சேர்த்து வைத்துக் கொண்டு செய்வது பிராண முத்திரை ஆகும். இந்த முத்திரையில் மூச்சுப்பயிற்சி செய்தால் உடலில் பிராண சக்தி பெருகும் .

கைகளை கோர்த்துக் கொண்டு வலதுகட்டை விரலை மேலே நீக்கிவைத்துக் கொள்வது லிங்க முத்திரை ஆகும். இந்த முத்திரையில் கைகளை மார்புக்கு நேரே வைத்துக்கொண்டு ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்தால் மார்புச்சளி நீங்கும். உடல் எடை குறையும். உடல் சூடு அதிகமாகும். நோய் எதிர்ப்புசக்தி பெருகும். 
 
இரு கட்டை விரல்களால் காதுகளை அடைத்துக்கொண்டு ஆள் காட்டி விரல்களை கண்களின் மீதும், நடு விரல்களை மூக்கின் மீதும், சுண்டு விரல்களை கீழ் உதட்டின் மீதும் வைத்துக் கொண்டு செய்வது சன்முகி முத்திரை ஆகும். இந்த முத்திரையில் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்தால் மனதை உள்நோக்கிப் பார்க்கும் திறன் ஏற்படும். இது ஆன்மிக வளர்ச்சிக்கு உதவும். 
 
கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி விரலின் நுனியைச் சேர்த்துச் செய்வது சின் முத்திரை ஆகும். சின் முத்திரையில் மூச்சுப்பயிற்சி செய்தால் மனம் ஒருமுகப்படும். நினைவாற்றல் பெருகும்

No comments:

Post a Comment