Showing posts with label Story. Show all posts
Showing posts with label Story. Show all posts

Monday, 11 June 2012

கர்ணன்

கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன. 
 
இதைக் கண்ட கண்ணன், நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்துதவுக, என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன். இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. 
 
ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக் கொண்டிருக்கிறான். இடக் கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம் தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அடுத்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.

அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா? 
 
சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். நீர் சொல்வது சரிதான். வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால்தான் இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் தான் இடக் கையாலேயே கொடுத்து விட்டேன்.

மனிதனால் முடியாதது எது?

துறவி ஒருவர் தனது சீடர்களிடம் என்னதான் முயன்றாலும் மனிதனால்  முடியாதது எது ? எனக் கேட்டார். கடவுளைக் காண்பது; காற்றைப் பிடிப்பது; இப்படி பலர் பலவித பதில்களைக் கூறினார்கள். அபத்தமான அவற்றைக் கேட்டு நகைத்தார் ஞானி. கடைசியில் அவரே பதில் கூறினார். என்னதான் முயன்றாலும் மனிதனால் முடியாதது, அவனது கடந்த காலம் தான். இன்று நிகழ்காலம். இதுவே நாளை கடந்த காலமாகிவிடும். எனவே நிகழ்காலத்திலேயே இறைவன் மேல் ஈடுபாடு கொண்டிருங்கள் ! என்றார் ஞானி.

அரதாச்சாரிய சுவாமிகள்

தினந்தோறும் சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து விட்டு அதன் பின்பு உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அரதாச்சாரிய சுவாமிகள். ஒருநாள் வழக்கம்போல சிவ பூஜை செய்துக் கொண்டிருக்கும் போது தாகத்தால் வாடிய நாய் ஒன்று அங்கு வந்தது. அதன் நிலையை உணர்ந்தார் அவர். அபிஷேக நீரை எடுத்து நாயின் முன் வைத்தார். அந்த நாய் அபிஷேக நீரைக் குடித்துவிட்டு அங்கிருந்து சென்றது. இதைக் கண்ட எல்லோரும் திகைத்தனர். அங்கிருந்த ஒருவர், இறைவனுக்குரிய அபிஷேக நீரை நாய்க்குக் குடிக்கக் கொடுத்தீர்களே... இது தகுமா ? என்று கேட்டார். அதற்கு சுவாமிகள், சிவபெருமானே நாய் வடிவில் வந்தால் நான் என்ன செய்ய முடியும் ? என்று கேட்க, சகல உயிர்களிடமும் சிவனைக்காணும் அவரது பக்தியை உணர்ந்து யாவரும் வியந்தனர்.

கடவுளைக் காட்டுங்கள்

கடவுள் மீது நம்பிக்கை இல்லாத நாத்திகன் ஒருவன், ஞானி ஒருவரிடம் எனக்குக் கடவுளைக் காட்டுங்கள் என்று கேட்டான். அதற்கு ஞானி அது முடியாத காரியம். கடவுளை நேரிடையாக பார்க்க முடியாது என்றார். அதற்கு அவனோ, கடவுளைப் பார்த்தே ஆகவேண்டும் என வற்புறுத்த, ஞானி அவனை வெளியே கூட்டி வந்தார். அது கோடைக் காலம். பகல் வேளை. அண்ணாந்து சூரியனைப்பார் என்று ஞானி கூற, நாத்திகனோ முடியாது, அது கஷ்டமான காரியம்! என்றான். சூரியன் இறைவனால் ஆக்கப்பட்ட கிரகம். அதனுடைய ஒளியையே உன்னால் பார்க்க முடியவில்லையே! அப்படியிருக்க இறைவனைக் காணுவது எப்படி முடியும் ? என ஞானி கூற மௌனமானான்.
 

Sunday, 10 June 2012

பஞ்ச தந்திரம்

1.மித்திர பேதம் - நட்பை கெடுத்து பகை உண்டாக்குவது

2.மித்ரலாபம் - தங்களுக்கு இணையானவர்களுடன் கூடி பகை இல்லாமல் வாழ்வது

3.சந்தி விக்ரகம் -பகைவரை உறவு கொண்டு வெல்லுதல்

4.லப்தகாணி (அர்த்த நாசம்) -கையில் கிடைத்ததை அழித்தல்

5.அசம்ரெஷிய காரியத்துவம் - எந்த காரியத்தையும் விசாரணை செய்யாமல் செய்வது.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு சர்மாவால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 86 கதைகளின் தொகுப்பே இந்த பஞ்ச தந்திர கதைகள். விலங்குகளை கொண்டு மனிதனுக்கும், ஏன் அரசனுக்கும் அறம் போதிக்கும் கதைகள் இவை.

அழகான ஒரு ஏரியின் கரையில் , அதிசயமான ஒரு பறவை வாழ்ந்து வந்தது, அதற்கு ஒரு உடல், இரண்டு தலைகள். இரண்டு தலைகளும், ஒற்றுமையாக நேசம் கொண்டு பல நாட்கள் வாழ்ந்து வந்ததன.

ஒரு நாள், அமுதம் போன்ற ருசியான ஒரு பழத்தை ஒரு தலை கண்டது. எடுத்து ருசித்ததும், "ஆகா என்ன சுவை" என்றது மற்றொரு தலையிடம். இதைக் கெட்டு மற்றொரு தலை "எனக்கும் கனி தா" என்றது கனிவாய்.

பழத்தின் சுவையில் மயங்கிய அந்த தலையோ, "நம் இருவருக்கும் உடல் ஒன்று தானே, நான் தின்றால் என்ன? நீ தின்றால் என்ன?" என்றது. இது நாள் வரை எல்லாவற்றையும் பகிர்ந்து உண்டுவந்த அந்த தலைகளுக்குள் இப்படி பகை மூண்டது.

ஏமாந்த தலை பழி வாங்கும் தருணம் பார்த்து காத்து இருந்தது. ஒரு நாள் , விஷக் கனி ஒன்று அதன் கண்ணில் பட்டது. அதை அந்த தலை உண்ணப் போவதைப் பார்த்ததும், பதறிப் போய் கத்தியது மற்றொரு தலை "உண்டு விடாதே, இருவருக்கும் ஆபத்து" என்றது. ஆனால் பழிவாங்கும் உணர்ச்சியில்

அதைக் கேட்காமல் ஏமாந்த தலை உண்டு விட்டது. அந்த பறவை இரு தலைகளும் தொங்க இறந்து விழுந்தது.

இந்த கதையிலிருந்து பல கருத்துக்களை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொருவரும் தங்கள் புரிந்து கொள்ளல் மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப தங்கள் வாழ்வின் பல நிகழ்ச்சிகளுக்கு வேறு வேறு கோணங்களில் பொருத்தி பார்க்க முடியும். "அமுதமே ஆனாலும் அதை பகிர்ந்து உண்ண வேண்டும்", "துணை என்பது அவசியம்-ஒருவருக்கு ஒருவர் பகை இல்லாமல் இருத்தலும் அவசியம்" 
 

கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா?

கடவுளின் அருளைப்பெற பக்தி மட்டுமே போதாது. நம்பிக்கையும் வேண்டும். ஒரு சமயம் பார்வதி சிவபெருமானிடம், கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்கிறார்களே, இது உண்மையானால், உலக மக்கள் யாவரும் கங்கையில் ஒரு முறை குளித்து தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள முடியுமா? என்றுக் கேட்டாள்.

இதுகேட்டு பெரிதும் நகைத்த சிவபெருமான் அன்னைக்கு விடையளிக்க அவளை பூலோகம் அழைத்து வந்தார். கங்கையின் கரையில், சிவபெருமான் கிழத்தோற்றம் கொண்டு உயிர் போகும் தாகம் கொண்டவராய் கீழே விழுந்தார். பார்வதியார் கணவனை மடியில் கிடத்திக்கொண்டு, யாராவது என் கணவரைக் காப்பாற்றுங்கள் அவர் தாகத்தில் இருக்கிறார் என கூவி அங்குள்ளவர்களை உதவிக்கழைத்தாள். அப்போது குளித்து விட்டு வந்த சிலர் பெரியவருக்கு நீர் கொடுக்க முன் வந்தனர்.

பார்வதியோ, உங்களில் யார் பாவம் இல்லாதவரோ அவர் நீர் அளித்தால்தான் என் கணவர் உயிர் பிழைப்பார் என்றாள். ஒருவரும் முன்வரவில்லை. அப்போது அவ்வழியே வந்த ஒரு திருடன் விஷயமறிந்து, கங்கையில் குளித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்து பெரியவர் வாயில் ஊற்றினான். இத்திருடன் பெரும் பாவியாயிற்றே என அனைவரும் வியப்போடு நோக்க, பெரியவராகிய சிவன் அது குறித்து திருடனிடமே கேட்டார். திருடனும் அவருக்குப் பதில் சொன்னான்.

நான் பெரும் பாவிதான். எனினும், கங்கையில் குளித்ததால் என் பாவங்கள் போய்விட்டது. எனவே நான் தங்களுக்கு நீர் தந்தேன். இனி நான் திருடினால்தான் எனக்கு பாவங்கள் சேரும் என்றான். அவனது நம்பிக்கையைக் கண்ட தேவி மனம் மகிழ்ந்தாள். ஆம் தெய்வீக நம்பிக்கை இல்லாது போனால் கங்கையில் குளித்தும் பயனில்லை.

Saturday, 9 June 2012

நம்பினோர் கெடுவதில்லை

ஓர் ஊரில் ஓர் ஏழைச்சிறுவன் தன தாயுடன் வசித்து வந்தான். அவன் பெயர் கோபால். தந்தை இறந்து விட்டதால் இருவரும் மாடுகளை மேய்த்து வாழ்ந்து வந்தனர். மிகவும் ஏழையானாலும் தன மகனை அறிவுள்ளவனாக்க அவன் தாய் விரும்பினாள். எனவே அடுத்த ஊரில் உள்ள ஒரு குருவிடம் கல்வி கற்க அனுப்ப எண்ணினாள்.

ஒரு நாள் தன் மகனை அழைத்தாள். " கோபால்! நீ ஒரு குருவிடம் சென்று கல்வி பயின்றால் தான் உன் வாழ்வு வளமாக இருக்கும். எனவே நீ அடுத்த ஊரில் உள்ள குருவிடம் கல்வி கற்க சென்று வா." என்று கூறினாள் கோபாலுக்கு வெகு தொலைவு சென்று படிக்க தயக்கமாக இருந்தது. அத்துடன் வழியில் ஒரு காடு இருந்தது. தனியே அந்தக்காட்டை கடந்து செல்ல வேண்டுமே என்ற அச்சமும் இருந்தது. எனவே தன தாயிடம் தயக்கத்துடன் கூறினான். "அம்மா! அடர்ந்த காட்டினுள் தனியாக நடந்து செல்ல பயமாக உள்ளதம்மா " என்றான்.

"கோபாலா! பயப்படாதே. நாம் வணங்கும் கிருஷ்ணர் உனக்குத்துணையாக இருப்பார்." என்று ஆறுதல் கூறினாள் தாய்.

"எனக்குத்துணையாக அவர் வருவாரா அம்மா ?"

"கட்டாயம் வருவாரப்பா. உனக்குப்பயமாக இருந்தால் நீ கண்ணா கண்ணா என்று உரக்கக் கூப்பிடு. உனக்குத்துணையாக அந்தக்கண்ணன் கட்டாயம் வருவார்."

தாயின் வார்த்தைகளால் மன நிம்மதியடைந்தான் கோபால். மறுநாள் குருவின் வீட்டை நோக்கி நடந்தான். அவன் தாய் அவனை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தாள். விரைவாக நடந்த கோபால் நடுக்காட்டை அடைந்தான். காட்டின் அமைதியும் காற்றின் ஒலியும் அவனுக்கு அச்சத்தை ஊட்டின அவனுக்குத் தன் தாயின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. உடனே உரக்க " கண்ணா! கண்ணா! நீ எங்கிருக்கிறாய் ? எனக்குத்துணையாக வா கண்ணா!" எனக்கூவி அழைத்தான். உரக்கக்குரல் எழுப்பியவாறே காட்டில் நடந்து சென்றான் கோபால்.

திடீரென்று அவன் எதிரே ஒரு சிறுவன் கையில் கோலுடனும் குழலுடனும் வந்து நின்றான். கோபலனைப்பர்த்து  சிரித்தான். அவனைப்பார்த்த கோபால் " நீதான் கண்ணனா? நீதான் எனக்குத்துணையாக வருவாய் என என் அம்மா சொன்னார்களா?" என்றான் மெதுவாக. புன்னகை புரிந்த கண்ணன் கோபாலின் கரங்களைப் பற்றிக்கொண்டான். "ஆமாம் நான்தான் கண்ணன். இந்தக்காட்டிலே மாடு மேய்ப்பவன். என்னைப்பற்றி உன் அம்மா சொன்னார்களல்லவா? "


"ஆமாம் சொன்னார்கள். நீ தினமும் எனக்குத்துணையாக வருவாயா? " "தினமும் நீ என்னை அழைத்தால் கண்டிப்பாகவருவேன்." என்று பேசியபடியே இருவரும் கை கோர்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் நடந்தனர்.

நாட்கள் கடந்தன. கோபால் தினமும் குருவிடம் சென்று கல்வி பயின்று வந்தான். அனைவரின் கல்வியும் நிறைவானது. குருபூஜை செய்து குருதட்சினை அளிக்க வேண்டும். இது நியதி. ஒவ்வொருவரும் தான் கொண்டுவரும் குருதட்சினை பற்றிப்பெருமையோடு பேசினர். ஒருவன்"  நான் வெள்ளித்தட்டு தருவேன்" என்றான். மற்றொருவன் நான் பட்டாடை தருவேன்" என்றான்.

பாவம் கோபால் என்ன செய்வான். ஏழையான அவன் தாய் எதைக் கொடுப்பாள்? தன்னால் குருவிற்கு ஒன்றும் கொடுக்க இயலவில்லையே என கோபால் மனம் வருந்தினான். இதைக்கண்ட அவன் தாய் மகனை அருகே அழைத்து "கோபாலா! உன் நண்பனை நீ தினமும் பார்க்கிறாயே அவனிடம் கேளேன்." என்றாள்.

கோபாலும் தன நண்பன் கண்ணனிடம் தன அசிரியருக்குத்தர பரிசொன்றைக் கேட்டான். கண்ணன் ஒரு தயிர் நிறைந்த பானையைக் கொடுத்தான். "இதையே உன் பரிசாகக்கொடு " என்றான். கோபாலும் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு ஆசிரியர் வீட்டை அடைந்தான். அங்கு மற்ற மாணவர்கள் அளித்த உயர்ந்த பரிசுப்பொருள்களைப் பார்த்து தன தயிர்ப்பானையை அவர்கள் முன் தரத்தயங்கினான். யாருக்கும் தெரியாமல் அதை அனைவரும் சாப்பிடும் இடத்தில் வைத்துவிட்டான். விழா முடிந்தபின் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். பரிமாறுவதற்குத் தயிர் இல்லை என்பதை அப்போதுதான் பார்த்தனர். ஒரே ஒரு பானை தயிர் மட்டும் உள்ளது இதை வைத்து பரிமாறுவோம் என நினைத்தார் ஆசிரியர். எனவே அந்தத்தயிரை வேறு பாத்திரத்தில் ஊற்றினர். பானையில் மீண்டும் தயிர் நிறைந்தது. மீண்டும் ஊற்ற மீண்டும் தயிர் நிறைந்தது. செய்தி அறிந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

"யார் இந்தத்தயிர்ப்பானையைக் கொண்டு வந்தது?" என விசாரித்தனர். அப்போது கோபால் தனக்குக்காட்டில் தன நண்பன் கொடுத்ததாகச் சொன்னான்.

ஆசிரியர் நண்பனாக வந்தது இறைவனே எனப்புரிந்து கொண்டார். "கோபாலா! அந்த உன் நண்பனை எனக்குக்காட்டு" என்று அவனுடன் காட்டுக்கு விரைந்தார். அவருடன் மற்ற மாணவர்கள் அனைவரும் காட்டை நோக்கி நடந்தனர். காட்டுக்குள் நுழைந்த கோபாலன்," கண்ணா! கண்ணா! உன்னைக்காண என் ஆசிரியரும் நண்பர்களும் வந்துள்ளனர். வா கண்ணா!" என பலமுறை அழைத்தும் கண்ணன் வரவில்லை.

கோபாலனுக்கு அழுகை வந்தது. அழத்தொடங்கினான். அப்போது ஒரு குரல் கேட்டது. " கோபாலா! உண்மையான அன்புடனும், நான் வருவேன் என்ற நம்பிக்கையோடும் என்னை அழைத்தால் நான் வருவேன். உன்னிடம் நான் வருவேன் எனக்கூறிய உன் தாயின் நம்பிக்கையை பொய்யாக்க விரும்பாமல்தான் நான் உன் முன் வந்தேன். என் மீது உண்மையான பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர் முன்னால் மட்டுமே நான் வருவேன். உன்னைப்பார்த்து மற்றவர்கள் நம்பிக்கையின் பெருமையைப் புரிந்துகொள்ளட்டும். வாழ்க! "என்று கூறிய கண்ணனின் குரல் மறைந்தது. இத்தனை நாட்களாக கண்ணனுடன் பழகிவந்த கோபாலனை அனைவரும் பக்தியுடனும் அன்புடனும் வணங்கினர்.

நம்பினோர் கெடுவதில்லை என்ற மூத்தோர் சொல் எத்தனை உண்மையானது! 


Friday, 8 June 2012

நல்லோர் சொல்லுக்கு வலிமை உண்டு

சிரவணன் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவனது தாயும் தந்தையும் மிகவும் வயதானவர்கள். அத்துடன் இருவரும் கண் தெரியாதவர்கள். தங்களின் மகனின் உதவியில்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்ய இயலாதவர்கள். நடக்க இயலாமலும் கண் தெரியாமலும் தவிக்கும் தன் பெற்றோருக்கு ஊன்றுகோலாகவும் கண்ணாகவும் இருந்தான் சிரவணன். சிரவணனின் தந்தையார் ஒரு ரிஷி.
 
அவர்கள் பல புண்ய நதிகளில் நீராடவும், கோவில்களில் பூஜை செய்யவும் விருப்பம் கொண்டனர். இரண்டு பெரிய பிரம்புத் தட்டுகளில் இருவரையும் அமரவைத்து அத்தட்டுகளைத் தராசு போல் அமைத்து அதைத்தன் தோளில் தூக்கிக் கொண்டான். வாலிப வயதை நெருங்கியவன் ஆனதால் சிரவணன் சிரமமின்றி தன் பெற்றோரைச் சுமந்து சென்றான்.

வெகு தூரம் நடந்து வேறு ஒரு காட்டுப் பகுதியை அடைந்தனர். சிரவணனின் தயார் நீர் அருந்தக் கொண்டுவருமாறு கூறினார். தந்தையாரும் தாகமாக உள்ளது எனக்கூறவே இருவரின் தாகத்தையும் நீக்க எண்ணினான். குடுவையில் நீர் காலியாக இருந்ததால் குளமோ கிணறோ அருகில் உள்ளதா எனத் தேடிச் சென்று நீர் கொண்டு வருவதாகக் கூறினான் சிரவணன். விரைவில் வந்துவிடுமாறு கூறி அனுப்பிவைத்தனர் அந்த வயோதிகத் தம்பதியர். அவர்களை வணங்கி விடை பெற்றுப் புறப்பட்டான் சிரவணன்.

அந்தப் பகுதி அயோத்தி நகரைச் சேர்ந்தது. அயோத்தி அரசன் தசரதன். காட்டு விலங்குகளின் துன்பத்திலிருந்து மக்களைக் காப்பதற்காக துஷ்ட மிருகங்களை வேட்டையாட தசரதன் கானகம் வந்திருந்தான். மாலைநேரம். இருள் லேசாகக் கவிந்து கொண்டிருந்தது. மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான் மன்னன். 
 
அவன் அருகே மிருகம் ஒன்று தண்ணீர் குடிப்பதுபோல சத்தம் கேட்டது. மன்னன் துள்ளி எழுந்தான். தன் வில்லில் நாணைத் தொடுத்தான்.  சப்தவேதி (இலக்கை பார்க்காமலே குறி வைக்கும் கலை) என்ற கலையை பயன்படுத்தி இலக்கை எய்தான். வில்லிலிருந்து அம்பு புறப்பட்ட மறுகணமே "அம்மா !" என்ற அலறல் குரல் கேட்டது.

மனிதக் குரலைக் கேட்ட மறுகணம் மன்னன் திடுக்கிட்டான். குரல் வந்த திசை நோக்கி ஓடினான். அங்கே சிரவணன் அம்பு பட்டு வீழ்ந்து கிடந்தான். அவனிடம் தசரதன் மன்னிக்குமாறு வேண்டினான். தவறு நேர்ந்துவிட்டது என்று புலம்பி அழுதான். 
 
 "அரசே! என் பெற்றோர் வனத்தில் தாகத்தால் தவித்தவாறு உள்ளனர். அவர்களிடம் நான் இறந்த செய்தியைச் சொல்லாமல் அவர்களை நீர் அருந்தச் செய்துவிடுங்கள். பெற்ற தாய் தந்தையரின் நீர் வேட்கையைத் தீர்க்காமல் சாகிறேன். நீங்கள் அவர்களின் மகனாக இருந்து அவர்கள் தாகத்தைத் தீர்த்து விடுங்கள். இதுதான் என் கடைசி ஆசை."என்று கூறிவிட்டு இறந்து விடுகிறான். 

சிரவணன் கூறியது போல் நீரை எடுத்துக்கொண்டு அவன் பெற்றோர் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் தசரதன். குரலைக் காட்டாமல் நீரை அந்த வயோதிகத் தாயிடம் கொடுத்தான். தசரதனின் கை பட்டதுமே "யார் நீ?" என்று சத்தமிட்டாள் அந்தத்தாய். இருவரும் "எங்கள் மகன் எங்கே? நீ ஏன் வந்தாய்? எங்கள் மகனுக்கு என்னவாயிற்று?" என்று அழுது புலம்பினர். 
 
அதைத் தாங்காத தசரதன் தான் தவறாக அம்பெய்திய காரணத்தால் சிரவணன் மாண்ட செய்தியைக் கூறினான். புத்திர சோகம் தாங்காத அந்தப் பெற்றோர் "ஏ! மன்னா! நாங்கள் மகனை இழந்து தவித்து உயிர் விடுவது போலவே நீயும் எத்தனை புத்திரர்களைப் பெற்றாலும் யாரும் அருகே இல்லாமல் புத்திர சோகத்தாலேயே உயிர் விடுவாய். இது எங்கள் சாபம் " என்று சபித்துவிட்டு உயிர் விட்டனர்.

பின்னாளில் இந்த தசரதன் ராமனை வனவாசத்திற்கு அனுப்பிவிட்டு புத்திரசோகத்தில் ஆழ்ந்து துன்பப்பட்டான். பரதனும் சத்ருக்னனும் கேகயநாடு செல்லவும் ராம இலக்குவர் வனம் ஏகவும் தசரதன் தனிமையில் தவித்து பின் உயிர் விட்டான். நல்லோர் சொல்லுக்கு வலிமை உண்டு. பெற்றோரை தெய்வமாக எண்ணி அவர்களுக்கு அன்புடன் சேவை செய்து வந்த சிரவணன் பண்பால் பெருமை பெற்றான். அவன் பெற்றோரின் சாபம் பலித்துவிட்டது. எனவே பெற்றோரிடம் நாம் ஆசிபெற என்றும் அவர்களை வணங்க வேண்டும்.
 

காளிதாசனின்

போஜராஜனின் அவையில் நவரத்தினங்கள் என்று சொல்லத்தக்க ஒன்பது கவிகள் இருந்து அவையை அலங்கரித்தனர். அவர்களுள் தண்டி கவியும் காளிதாசனும் மிகவும் சிறப்புப் பெற்றவர்கள். அதிலும் காளிதாசன் மன்னனின் தனி அன்பையும் நட்பையும் பெற்றவன். முதன்மைக் கவியான தன்னை விட காளிதாசன் எந்த விதத்தில் உயர்ந்தவன் என்று மன்னன் காளிதாசனைக் கொண்டாடுகிறார்? என மனதுக்குள் பொறாமை கொண்டார் தண்டிகவி. இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஒருநாள் தண்டி வழக்கம் போல் சரயு நதியில் நீராடி நதிக்கரையில் யோக நிலையில் அமர்ந்தார். வெகு நேரம் கடந்து கண்களைத் திறந்தார். காளிதாசன் அப்போதுதான் நதியில் மகிழ்ச்சியோடு நீந்தி நீராடிக் கொண்டு இருந்தான். ஒரு கவியாக இருப்பவன் அத்துடன் பெரும் காளி பக்தனாக இருப்பவன் சூரியன் உதித்து இத்தனை நேரம் கடந்து நீராடுகிரானே! இவன் எப்போது காளியைப் பூஜை செய்வது அவைக்கு எப்போது வருவது. இன்று அவைக்குத் தாமதமாகத்தான் வரப்போகிறான். என எண்ணியவாறே புன்னகையுடன் காளிதாசனை ஏளனமாகப் பார்த்தவாறே சென்றார் தண்டிகவி.

இல்லம் சென்ற கவி ஆடை ஆபரணம் பூண்டு அலங்கரித்துக் கொண்டு உணவு உண்டு அவைக்கு வந்தார். அவைக்கு வணக்கம் கூறியவாறே காளிதாசனின் இருக்கையைப் பார்த்தவுடன் திகைத்தார். அங்கே அவருக்கு முன்னாலேயே அவைக்கு வந்து அமர்ந்திருந்தான் காளிதாசன். அத்துடன் பொருள் பொதிந்த புன்னகையை தண்டியின் மேல் வீசியவாறே அமர்ந்தான். தனக்குப் பின்னால் தான் நீராடியவன் எப்படி இவ்வளவு விரைவில் வந்து அமர்ந்துள்ளான் என எண்ணியவாறே தன் ஆசனத்தில் அமர்ந்தார் தண்டிகவி.

அன்று தண்டியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. காளிதாசன் எந்த கடமையும் செய்யாமல் அவைக்கு வந்துள்ளான் அதனால்தான் இவ்வளவு விரைவில் அவனால் வரமுடிந்துள்ளது. ஆனால் மன்னனோ இவனைத் தன் உயிர் நண்பனாகவும் சிறந்த காளிபக்தனாகவும் எண்ணி பெருமைப் படுததுகிறாரே? எப்படியும் இவனது பெருமையைக் குலைத்து விடவேண்டும். மீண்டும் சிறந்த காளிபக்தன் என்ற பெயர் எனக்கே வரும்படி செய்ய வேண்டும் என முடிவு செய்து கொண்டார்.

வழக்கம்போல் தண்டி கவி நதியில் குளித்து கண்களை மூடி மனதுக்குள் இறைவியைப் பூஜித்தார். அன்றும் அவர் கண்களைத் திறந்தபோது புன்னகையுடன் காளிதாசன் தன்னைக் கடந்து செல்வதைக் கண்டார். இதே நிகழ்ச்சி தொடர்ந்து பல நாட்கள் நீடித்தது. சூரிய உதயத்திற்கு முன்பே தண்டி கவி நீராடி கரையில் அமர்ந்து தேவியைப் பூஜிப்பதும் வெகு நேரம் கழித்து காளிதாசன் வருவதுமாக நாட்கள் நகர்ந்தன.

அன்று தண்டி குளித்து முடித்து ஜபதபங்களை முடித்து நிஷ்டையில் அமர்ந்து காளியைப் பூஜிக்கத் தொடங்கினார். ஆனால் அவரது கவனம் நீராடும் காளிதாசன் மேல் சென்றது. அதனால் மனதில் காளிக்கு அலங்காரம் செய்யும் போது கழுத்தில் மாலையிடாமலேயே அவள் தலையில் கிரீடத்தைச் சூட்டிவிட்டார். சட்டென கவனத்தைத் திருப்பியவர் தன் பிழையை அறிந்தார். இப்போது என்ன செய்வது? இப்படியே மாலையிட்டால் கிரீடம் விழுந்துவிடும் கிரீடத்தை எடுத்துவிட்டு மாலையிட்டால் அலங்காரத்தைக் கலைத்த தோஷமாகுமே என்ன செய்வது எனத் திகைத்தவாரே "தாயே! இது என்ன சோதனையம்மா எனக்கு?" என்று மனதுக்குள் கலங்கியவாறே அமர்ந்து விட்டார் தண்டி.

நிதானமாக ஸ்நானத்தை முடித்துக் கொண்டு கரையேறினான் காளிதாசன். கலக்கத்தோடு அமர்ந்திருந்த தணடியைக் கண்டான். நிதானமாக அவரது அருகே வந்து நின்றான். "புலவரே! ஏன் தயக்கம்? கிரீடத்தைக் கழற்றிவிட்டு மாலையைச் சூட்டுங்கள். பிறகு கிரீடத்தை வைத்து அலங்காரத்தை முடியுங்கள். பூஜையை தொடங்குங்கள். காளி மாதா ஏற்றுக்கொள்வாள்." என்று கூறிவிட்டு அவரைத் தாண்டிச் சென்று விட்டான் காளிதாசன்.

திடுக்கிட்டுக் கண்விழித்தார் தண்டிகவி. "என்ன ஆச்சரியம்! என்மனதில் நடக்கும் போராட்டத்தை அறியும் வல்லமை படைத்துள்ளானே? காளிதாசன் உண்மையில் என்னினும் உயர்ந்தவன்தான். அவனே சிறந்த காளிபக்தன். என் மனமாசு அகன்றது. தாயே காளிமாதா! உன் மகனைச் சந்தேகித்த என்னை மன்னித்துவிடு." என்றபடியே காளிதாசன் சென்ற திசையை நோக்கிக் கரம் குவித்தார் தண்டிகவி.

இறைவனிடம் அன்பு காட்ட செயல்கள் அவசியமல்ல. மனமே முக்கியம். அன்புக்கே இறைவன் கட்டுப் படுபவன் என்ற உண்மையை நாமும் புரிந்து கொள்வோம்.
 

குரு பக்தி

துரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் குருவாக இருந்தார். அவர்களுக்கு வில் வித்தையை சிறப்பாகக் கற்பித்து வந்தார். வில் வித்தையில் அர்ஜுனனை விடச் சிறந்தவர் எவருமில்லை எனக்கூறும்படி செய்வதாகச் சபதம் செய்திருந்தார். இதனால் துரியோதனனுக்குக் கோபமும் பொறாமையும் அர்ஜுனன் மீது ஏற்பட்டிருந்தது. இயல்பாகவே அர்ஜுனன் வில்லில் அம்பை ஏற்றி எய்வதில் மிகவும் சிறந்தவன். அதனால் துரோணர் அர்ஜுனனிடம் தனி அன்பு கொண்டிருந்தார்.

ஒரு நாள் துரோணர் தன் மாணவர்களுக்காகக் காத்திருந்தார். அப்போது ஓர் ஏழைச்சிறுவன் வந்து துரோணரைப் பணிந்து நின்றான். அவனை ஆசிர்வதித்தார் துரோணர். "யாரப்பா நீ? எங்கு வந்தாய்?"

"குருவே!, நான் தங்களிடம் வில் வித்தை பயில வேண்டும் என விரும்புகிறேன். பலநாட்களாகத் தங்களைத் தேடித் திரிந்தேன். இன்றுதான் தங்களின் தரிசனம் கிடைத்தது. என்னைத் தங்கள்  சீடனாக ஏற்றுக் கொண்டு அருள் செய்ய வேண்டும்"

"என்ன கேட்டாய்? உன்னை மாணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா? நான் அரச குடும்பத்தாருக்கு மட்டுமே கற்பிப்பவன். உன்னைப் போன்ற ஏழைச் சிறுவனுக்குக் கற்பிக்க மாட்டேன். உனக்கேற்ற ஆசானைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வித்தையைக் கற்றுக்கொள். என் பூரண ஆசி உனக்கு." கைகளை உயர்த்தி ஆசி வழங்கிவிட்டு துரோணர் அங்கிருந்து சென்று விட்டார். 
 
மண்டியிட்டு அமர்ந்திருந்த அந்த வேடுவச் சிறுவன் கண்களில் நீர் பெருக நின்றான். அவனது பல நாள் ஆசை நிறைவேறாமல் போனது பற்றி மிகவும் வருந்தினான். எங்கே துரோணர் பாதங்களை வைத்திருந்தாரோ அந்த இடத்திலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டான். துரோணர் சென்ற திசை நோக்கி வணங்கினான். விடுவிடுவெனத் தன் இருப்பிடம் நோக்கி நடந்தான்.

இல்லம் சேர்ந்த அச்சிறுவன் மண்ணைக் குழைத்து துரோணரைப் போன்ற ஒரு சிலையைச் செய்து வைத்துக் கொண்டான். அந்தச் சிலையின் முன்னால் நின்று வணங்கினான். பின்னர் தனது பயிற்சியைத் தொடங்கினான். துரோனரையே தனது குருவாக மானசீகமாக வரித்துக் கொண்டான்.

நாட்கள் கடந்தன. விரைவிலேயே சிறந்த வில் வீரனாக ஆனான். ஒரு நாள் பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது ஒரு நாய் இவனை பார்த்து குரைத்தது. கோபப்பட்டவன் ஒரு அம்பு விட்டான் நாய் மேல். அந்த அம்பு நாயின் வாயை தைத்தது. அது துரோணரின் நாய். கதறிய நாய் துரோணரிடம் வந்தது. 
 
இதைப் பார்த்த அர்ஜுனன் திகைத்து நின்றான். தன் குருவை சந்தேகத்தோடு பார்த்தான். "தன்னினும் சிறந்த வில்வீரன் ஒருவன் உள்ளான். அவன் விட்ட பாணமே இதற்குச் சாட்சி. இந்தக்கலையை அறிந்தவர் துரோணர் ஒருவரே. இன்று மற்றொருவர் உள்ளார் எனில் இதைக் கற்பித்தவர் தனது குருவே. " இவ்வாறு அர்ஜுனன் எண்ணம் ஓடிற்று.

 நாய் வந்த வழியை தேடி சென்று பார்த்தபோது வில்லும் கையுமாக பயிற்சி செய்து கொண்டு இருந்தான் அன்று வந்த வேடுவச் சிறுவன். துரோணரைக் கண்டதும் மண்டியிட்டு வணங்கினான்.

"ஏ சிறுவனே! உனக்கு இக்கலையைக் கற்பித்தவர் யார்? உன் குரு யார்?"   என சற்றே கோபமாகக் கேட்டார் துரோணர்

"தாங்கள்தான் எனது குருநாதர். தினமும் நான் உங்கள் முன்னிலையில்தானே பயிற்சி மேற்கொள்கிறேன்."

"பொய் சொல்லாதே! ராஜகுமாரர்களைத் தவிர நான் யாருக்கும் கற்பித்ததில்லை. உண்மையைச் சொல்."

"என்னுடன் வாருங்கள்." என்று அழைத்த சிறுவனுடன் அனைவரும் அவன் இல்லம் சென்றனர். காட்டின் நடுவே ஒரு குடிசை. அதன் முன்னே ஒரு திறந்த வெளியில் நாடு நாயகமாக துரோணரின் சிலை அமர்ந்த நிலையில் அமைக்கப் பட்டிருந்தது. அச்சிலையை வணங்கிய சிறுவன் "இவர்தான் என் குருநாதர். இவர் முன்னால்தான் நான் பயிற்சி செய்கிறேன்." என்றான் பணிவோடு.

"இது எனது உருவம்போல் உள்ளதே"

"ஆம் குருதேவா. தங்களின் பாதம் பதித்த மண்ணைக் கொண்டுவந்து அதைச்சேர்த்து ஒரு சிலை செய்து தாங்களே அமர்ந்து எனக்குப் பாடம் சொல்வதாக நினைத்துக் கொண்டேன். தங்களை என் மனதில் குருவாக எண்ணிக் கொண்டு தினமும் வணங்கி வருகிறேன்."

துரோணர் அச்சிறுவனின் குருபக்தியே அவனுக்கு இத்தனை திறமைகளும் வளரக்காரணம் என்பதைத் தெரிந்து கொண்டார்.  "சிறுவா!, உன் பெயர் என்ன?"

"என் பெயர் ஏகலைவன். இந்தக் காட்டில் வசிக்கும் வேடுவர் தலைவரின் மகன் நான்."

"உன் திறமையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். குருதக்ஷிணை தரவேண்டாமா நீ?"

"குருவே! எதுவேண்டுமானாலும் கேளுங்கள். "அதெல்லாம் வேண்டாம். ஏகலைவா! நீயே சிறந்த மாணவன். என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். எனக்குக் குருதக்ஷிணையாக உன் வலதுகைக் கட்டை விரலைத் தருவாயா?"

"தாங்கள் எனது குரு என ஒப்புக் கொண்டதே எனக்குப் போதும். தாங்கள் குருதக்ஷிணை என என் உயிரையே கேட்டாலும் நான் தரத் தயாராக உள்ளேன். பெற்றுக்கொள்ளுங்கள்." மறுகணம் தனது இடது கை வாளால் வலதுகை கட்டை விரலை வெட்டி ஒரு இலையில் வைத்து அவர் பாதத்தில் வைத்துப் பணிந்து நின்றான் ஏகலைவன்.

மனம் மகிழ்ந்த துரோணர் "ஏகலைவா! குருபக்தி என்ற சொல்லுக்கு நீயே ஒரு உதாரணம். உலகம் உள்ளவரை உன் பெருமையை இவ்வுலகம் பேசும்." என்று ஆசிகூறி அங்கிருந்து சென்றார். 
 

இன்னா செய்தாரை

ஓர் ஊரில் சாம்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். எப்போதும் தீயவற்றையே நினைத்து வாழ்ந்தான். தீயவருடனேயே சேர்ந்து தீய காரியங்கள் செய்து பணம் சம்பாதித்து வாழ்ந்தான். ஒரு முறை வேறு ஊருக்குச் சென்று அங்கிருப்பவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்க எண்ணம் கொண்டான். அதனால் அடுத்திருந்த ஓர் ஊருக்குப் புறப்பட்டான்.

வழியில் ஒரு பெரும் காடு இருந்தது. அதைத் தாண்டுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. நடந்து நடந்து மிகவும் களைத்து விட்டான் சாம்பன். ஒரு பெரிய மரத்தடியில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான். பறவைகள் எல்லாம் கூட்டை நோக்கிப் பறக்கும்நேரம் ஆகிவிடவே எழுந்து அமர்ந்தான். பசி வேறு வயிற்றைப் பிசைந்தது. அப்போது அந்த மரத்தை நோக்கி புறா ஒன்று பறந்து வந்தது. 

ராஜகீர்த்தி என்பது அதன் பெயர். அது தன் இருப்பிடத்திற்கு யாரோ வந்திருப்பது கண்டு மகிழ்ந்தது. விருந்தினரை வரவேற்கும் எண்ணத்தோடு சாம்பனிடம் வந்து கூறியது.

"ஐயா, என் இல்லம் தேடி நீங்கள் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி. மிகவும் களைப்பாக இருக்கிறீர்களே. இருங்கள் நீங்கள் உண்ணக் கனி கொண்டு வருகிறேன் " என்று கூறிப் பறந்தது. சற்று நேரத்தில் சுவை மிக்க கனிகளைக் கொண்டு வந்து அவர் முன் வைத்து "உண்ணுங்கள் ஐயா, இரவு இங்கேயே தங்கி காலையில் புறப்படுங்கள்" என்று கூறி அவர் படுப்பதற்காக புற்களையும் மலர்களையும் பரப்பி படுக்கை தயாரித்துக் கொடுத்தது.


சாம்பன் மகிழ்ச்சியுடன் படுத்து உறங்கினான். ராஜகீர்த்தியும் சாம்பனுக்குப் பாதுகாப்பாக அவன் அருகிலேயே படுத்து உறங்கியது. மறுநாள் காலை சாம்பன் புறப்படும்போது ராஜகீர்த்தி என்ற அந்தப் புறா, "நண்பா, அடுத்த மலையில் என் நண்பன் விரூபாக்கன் என்ற அரக்கன் இருக்கிறான். என் நண்பன் நீ என்று தெரிந்தால் உனக்கு வேண்டிய உதவி செய்வான் நீ அங்கு செல்." என்று கூறியது.

ராஜகீர்த்திப் புறாவின் சொற்படியே சாம்பன் அடுத்த மலையை நோக்கிச் சென்றான். சற்றுத் தொலைவு சென்றபோது வேறு ஒரு மலை தெரிந்தது. அதன் மேல் ஏறிச் சென்றான் சாம்பன். அங்கு அரக்கர் கூட்டத்தின் நடு நாயகமாக வீற்றிருந்தான் விரூபாக்கன் என்ற அரக்க அரசன்.

அவனைப் பார்த்து அஞ்சினான் சாம்பன். "நீ யார்?"எனக்கேட்ட விரூபாக்கனுக்கு நடுங்கியபடியே பதில் கூறினான் சாம்பன். "நான் ராஜகீர்த்தியின் நண்பன்." இதைக் கேட்ட உடனே எழுந்து அருகே வந்த விரூபாக்கன் சாம்பனை அணைத்துக் கொண்டான்.

"நீ என் நண்பனின் நண்பன். இனி எனக்கும் நண்பன்." சாம்பானுக்கு பெரும் விருந்தும் பல பரிசுகளையும் கொடுத்து நிறைய பொற்காசுகளையும் மூட்டையில் கட்டிக்கொடுத்தான் விரூபாக்கன். 

அந்த அரக்க அரசனிடம் விடைபெற்றுக் கொண்ட சாம்பன் தன் சொந்த ஊர் நோக்கி நடக்க ஆரம்பித்தான். வரும் வழியில் தன் நண்பன் ராஜகீர்த்தியின் மரத்தடிக்கு வந்தான். அங்கு வழக்கம்போல் இருட்டும் நேரம் ராஜகீர்த்தி இல்லம் திரும்பியது. 

"நண்பா, உன் நண்பன் விரூபாக்கன் எனக்கு நிறைந்த பொன் கொடுத்துள்ளான். இன்று இரவு இங்கேயே கழித்து விட்டு காலையில் நான் புறப்படுகிறேன்." இதைக் கேட்ட ராஜகீர்த்தி மகிழ்ந்தது. தன் நண்பனுக்கு உண்ண உணவளித்து படுக்கை தயார் செய்தது.

நடு இரவில் கண் விழித்த சாம்பன் அருகே தூங்கும் ராஜ்கீர்த்தியைப் பார்த்தான். 'நான் இன்னும் வெகு தூரம் போகவேண்டுமே. உச்சி வேளையில் பசித்தால் என்ன செய்வது'  என்று சிந்தித்தவன் தன் அருகே படுத்திருந்த புறாவைக் கொன்றான். அதன் அழகிய இறகுகளைப் பிய்த்துப் போட்டான் அந்த உடலை நெருப்பில் வாட்டி எடுத்துக் கொண்டு தன் பொன் மூட்டையையும் தூக்கிக் கொண்டு வேகமாக அந்த இடம் விட்டுப் புறப்பட்டான்.

பொழுதும் விடிந்தது. நேரம் கடந்துகொண்டிருந்தது.தினமும்தன்னை வந்து பார்த்துச் செல்லும் நண்பன் ராஜகீர்த்தி வராததால் அரக்க அரசனான விரூபாக்கன் அவனைத் தேடி வரும்படி தன் காவலருக்கு கட்டளையிட்டான். அவர்களும் ராஜகீர்த்தியின் இல்லம் வந்து அங்கே புறாவின் இறகுகள் கிடப்பதைக் கூறினர்.

என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்ட விரூபாக்கன் சாம்பனைத் தேடி இழுத்து வரும்படி கட்டளையிட்டான். அவனது வீரர்களும் சிறிது நேரத்தில் சாம்பனைக் கட்டி இழுத்து வந்தனர். அவனிடம் நெருப்பிலிடப்பட்ட தன் நண்பனின் உடலைப் பார்த்து கதறி அழுதான் விரூபாக்கன். தனக்கு நன்மை செய்தவன் என்று கூட நினைத்துப் பார்க்காத நன்றி கெட்ட சாம்பனைக் கொன்று தின்னுமாறு பணித்தான்.

ஆனால் அரக்கர் அனைவரும் நன்றி கெட்டவனின் உடலைத் தின்னமாட்டோம் என்று கூறிவிட்டனர். அதன் பின் சண்டாளர்களிடம் கொடுத்தால் அவர்களும் நாங்கள் ஏற்கெனவே பாவம் செய்து சண்டாளர்களாக உள்ளோம். இந்தப் பாவியின் உடலைத் தின்றால் இந்த நரகத்திலேயே உழலவேண்டும். எங்களுக்கு வேண்டாம் என்று கூறவே சாம்பனை வெட்டி குழியில் போட்டு மூடுமாறு கட்டளையிட்டான்.

பின்னர் ராஜகீர்த்தியின் உடலுக்கு மிகுந்த மரியாதையுடன் அந்திம காரியங்களைத் தானே செய்தான். மிகுந்த துயரத்தோடு சிதையிலிடும்போது திடீரென்று ராஜகீர்த்தியின் உடலில் சிறகுகள் மிகவும் அழகுடன் வளரத் தொடங்கியது. அதைப் பார்த்த விரூபாக்கன் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான். விண்ணிலே காமதேனுவுடன் இந்திரன் செல்வது தெரிந்தது. அதன் நிழல் ராஜகீர்த்தியின் மேல் பட்டதால் ராஜகீர்த்தி உயிர் பெறத் தொடங்கியது. விரூபாக்கணும் ராஜகீர்த்தியும் இணைந்து இந்திரனைத் துதித்தனர். 


இந்திரன் மகிழ்ந்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, ராஜகீர்த்தி, "தேவதேவா, அறியாமல் பிழை செய்த எங்கள் நண்பன் சாம்பனை மன்னிக்கவேண்டும். அவனையும் உயிர்ப்பிக்க வேண்டும்." என்று கேட்டுக் கொண்டது.

"உன் பெருந்தன்மையும், தீமை செய்தவனுக்கும் நன்மைசெய்ய எண்ணும் உன் நல்ல பண்புக்கும் உன்னைப் பாராட்டுகிறேன். உன் விருப்பப்படியே சாம்பனை உயிர்ப்பிக்கிறேன். நலமோடு வாழ்வீர்களாக"  என்று ஆசிவழங்கிவிட்டு மறைந்தார் தேவேந்திரன்.

உயிருடன் எழுந்து வந்த சாம்பன் ராஜகீர்த்தியிடம் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டான்.அவனை அணைத்து மகிழ்ந்தது ராஜகீர்த்தி. இத்தகைய உயர்ந்த பண்பு தனக்கில்லாமல் போயிற்றே என விரூபாக்கன் வெட்கப்பட்டான். தான் செய்த நன்றி மறந்த செயலுக்காக வெட்கப் பட்டான் சாம்பன். இருவரையும் அணைத்துக் கொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தது ராஜகீர்த்தி என்னும் புறா.

'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்'

என்று கூறியுள்ளார். ஒருவன் செய்த தவறுக்கு சிறந்த தண்டனை எது என்றால் அவன் நாணும்படியாக அவனுக்கு நன்மை செய்தலே ஆகும்.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்

ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான். அந்நாட்டு அரசனைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தான். அந்த நாட்டு மக்கள் அனைவரும் பண்பும் அன்பும் கொண்டவர்கள் என்பதே காரணம். 
 
இதைத் தெரிந்து கொள்ள பகைநாட்டு மன்னனின் சேவகர் இருவரை அழைத்து அவர்கள் முன்னே அறுசுவை உணவினை வைத்து உண்ணச் சொன்னான். உண்ணும்போது உண்பவர்முழங்கை மடங்கக் கூடாது.என்று கட்டளையிட்டான்.

இருவரும் சற்று சிந்தித்தனர்அவர்களில் ஒருவன் தன கையில் உணவை எடுத்து கையை மடக்காமல் எதிரே இருந்த நண்பனின் வாயில் ஊட்டினான். அதைப் பார்த்த மற்ற சேவகனும் அதேபோல செய்தான். இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொண்டதால் இருவரின் வயிறும் நிறைந்தது.

இதைப் பார்த்த மன்னனுக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே இந்த மன்னனுடைய மக்கள் மிக நல்ல மனம் படைத்தவர்கள் தான் என முடிவு செய்து அந்த மன்னனை சிறையிலிருந்து விடுவித்து தன் நண்பனாக்கிக் கொண்டான். 
 
பிறருக்கு உணவளித்தால் நமக்கு எப்படியேனும் உணவு கிடைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதைத்தான் ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்றார்கள்.
 

நல்ல சொற்கள்

ஒரு கிளி வியாபாரி கிளி விற்றுக் கொண்டு சென்றான். அவ்வூரில் இருந்த கசாப்புக் கடை வைத்திருக்கும் குப்பன் ஒரு கிளியை வாங்கினான். அதை தன் கடையின் முன் கட்டித் தொங்க விட்டான். 
அந்தக் கிளியும் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருந்தது. சிலநாட்கள் கழித்து கிளி வியாபாரி இன்னொரு கிளியை ஒரு ஆசிரமம் வைத்து நடத்தும் ஒரு முனிவரிடம் விற்றான். அந்த ஆசிரமவாசியும் அந்தக் கிளியை ஆசிரமத்தின் முன் பகுதியில் தொங்கவிட்டார். அந்தக் கிளியும் வருவோரையும் போவோரையும் பார்த்துக் கொண்டிருந்தது. 

சில நாட்கள் கழித்து கிளி வியாபாரி தான் விற்ற கிளிகளைப் பற்றி அறிந்து கொள்ள நினைத்தான்.

முதலில் கசாப்புக் கடைக்குச் சென்றான். அங்கே இருந்த கிளியிடம் சென்று" எப்படி இருக்கிறாய் கிளியே?" என்று அன்புடன் கேட்டான்.  அதற்கு அந்தக் கிளி "டேய் இவன் காலை ஓடி. கழுத்தை வெட்டு என்று மிகவும் கடுமையாகப் பேசியது.

அதே சமயம் கடை முதலாளியும் தன் வேலையாட்களிடம் எப்படி வெட்டுவது என்று சொல்லிக் கொண்டிருந்தான். அதைக் கேட்ட கிளி வியாபாரி வருத்தத்துடன் வெளியேறினான். 

பின்னர் நேராக முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றான். உள்ளே நுழைந்தவுடன் "வாருங்கள். நலமா? அமருங்கள். ஏதேனும் பழங்கள் உண்ணுங்கள்" என்ற அன்பான சொற்களைக் கேட்டு மகிழ்ந்தான் வியாபாரி..அப்போது உள்ளே நுழைந்த முனிவர்,அன்பாக உபசரித்து பழங்கள் உண்ணக் கொடுத்தார். 
இப்போது வியாபாரி புரிந்து கொண்டான். கசாப்புக் கடையில் பேசும் சொற்களை அங்கிருக்கும் கிளி கற்றுக் கொண்டது. முனிவரின் அன்புச் சொற்களை இங்கிருக்கும் கிளி கற்றுக் கொண்டது. அதனால் எங்கே நல்லன பேசப்படுகிறதோ அங்கே நாம் இருந்தால் நமக்கும் அதே சொற்கள் தான் பேச வரும் எனவே நல்லதையே நாடவேண்டும் என்று சொன்னார்கள்.
நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அதற்கு நமது காதுகளில் நல்ல சொற்கள் விழுந்து கொண்டே இருக்க வேண்டும்.

சிறந்த நீதிபதி

ஒரு காலத்தில் நம் நாட்டில் விக்ரமாதித்தன் என்னும் அரசன் உஜ்ஜயினி என்னும் நாட்டை ஆண்டு வந்தான். அவன் காலத்தில் அந்நாட்டில் கலைஞர்களும் கவிஞர்களும் நிறைந்திருந்தனர். அரசன் குடிமக்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தான். நீதிநெறி தவறாது ஆட்சி செய்தான்.

மன்னன் விக்ரமாதித்தன் குற்றவாளியைக் கண்ணால் பார்த்தே அவன் குற்றவாளியா நிரபராதியா என அறிந்து கொள்வான்.அத்தகு திறமை படைத்திருந்தான். அத்தகைய அரசனின் காலம் முடிந்து நகரமும் அழிந்து போயிற்று. அந்த உஜ்ஜயினி நகரமே மண் மேடாகக் காட்சியளித்தது. அந்த நகரம் இருந்த இடத்தில் ஒரு காடும் சிறு கிராமமும் தோன்றியிருந்தது. அந்த கிராமத்தில் வாழும் சிறுவர்கள் மாடு மேய்க்கும் தொழிலைச் செய்து வந்தனர்.

ஒருநாள் அந்தச் சிறுவர்கள் மாடுகளை மேயவிட்டுவிட்டு விளையாடத் தொடங்கினார்கள். ஒரு சிறுவன் தான்தான் அரசன் என்று கூறிக் கொண்டு அங்கு சற்று உயரமாக இருந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு மற்ற சிறுவர்களை மிகுந்த அதிகாரம் செய்யத் தொடங்கினான். அவன் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசத் தோன்றாத சிறுவர்களும் அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். 

மேடைமேல் அமர்ந்த சிறுவன் சிறந்த நீதிபதி போல் பேசத் தொடங்கினான். மற்றவர்கள் வழக்கைக் கூறுவதும் சிறுவன் தீர்ப்புக் கூறுவதுமாக விளையாட்டு தொடர்ந்தது.

தினமும் அவர்கள் அங்கே வந்து விளையாடத் தொடங்கினர். நீதிபதி விளையாட்டு அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தச் செய்தி ஊருக்குள் பரவ உண்மையான வழக்குகளும் அந்தச் சிறுவனிடம் வரத் தொடங்கின. மேடை மீது அமர்ந்தவுடன் இந்தச் சிறுவனின் நடை பார்வை பேச்சு எல்லாம் மாறிவிடுவதை ஆச்சரியத்துடன் மக்கள் மன்னனிடம் தெரிவித்தனர்.


இதைக் கேள்விப்பட்ட மன்னன் அந்தச் சிறுவனைக் காணவும் அவன் தீர்ப்பு சொல்வதைப் பார்க்கவும் மாறுவேடத்தில் நேரில் வந்து கவனித்தான். அப்போது அந்தச் சிறுவன் முன் வந்த வழக்கை அவன் தீர்த்துவைத்த விதமும் அவனது பேச்சும் ஒரு சிறந்த அரசனுக்குரிய சிறப்புடன் இருப்பதைக் கவனித்தான். அரண்மனைக்குச் சென்ற மன்னன் அந்த சிறுவனைப் பற்றியும் ஊரைப் பற்றியும் விசாரிக்குமாறு கூறினான். 
அப்போதுதான் அந்தக் காடு இருந்த இடத்தில்தான் உஜ்ஜயினி நகர மன்னர் விக்ரமாதித்தன் வசித்த அரண்மனை இருந்தது என்ற விவரம் தெரிந்தது. உடனே மன்னன் அந்த இடத்தில் ஏதேனும் சிறப்பு இருக்கக்கூடும் என்று எண்ணி அந்த காட்டுக்கு மந்திரி பிரதானிகளுடன் சென்றான். அங்கு பூமியைத் தொண்டி சோதனை செய்யப் பணித்தான். அங்கு ஆழத்தில் ஒரு நகரம் இருந்த அடையாளங்களான கட்டடங்களின் இடிபாடுகள் தெரிந்தன. சிறுவன் அமர்ந்து தீர்ப்புக் கூறிய இடத்தைத் தோண்டியபோது அங்கே ஆழத்தில் ஒரு கல்லாலான பலகை தெரிந்தது.
அதைக் கவனமாக வெளியே எடுத்தபோது அதை இருபத்தைந்து பதுமைகள் தாங்கியிருப்பது போல் இருந்ததைக் கண்டு வியந்தான். அந்த ஆசனத்தை தன் அரண்மனைக்கு கொண்டு சென்று நல்ல நாளில் சிறப்புப் பூஜைகள் செய்து அந்த ஆசனத்தில் அமரச் சென்றான். திடீரென்று அந்த ஆசனத்தில் இருந்த ஒரு பதுமை பேசத் தொடங்கிற்று.

"மன்னா, நீ எந்த ஆசையும் இல்லாமல் இருக்கிறாயா? ஆசையை விட்டவருக்குத்தான் இந்த ஆசனத்தில் அமரும் தகுதி இருக்கிறது." இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் தயங்கி நின்றான்.

"எனக்குத்தான் இன்னும் பல நாடுகளைப் பிடிக்கவேண்டும் என்னும் ஆசை இருக்கிறதே "என்று நினைக்கும் போதே அந்தப் பதுமை மறைந்தது. மன்னன் மீண்டும் தன் மனத்தின் ஆசையை ஒழித்துவிட்டு மீண்டும் பூஜைகள் செய்து அந்த ஆசனத்தில் அமரவந்தான். அப்போதும் இரண்டாவது பதுமை பேசியது."

"மன்னா,நீ பொறாமையில்லாமல் இருக்கிறாயா?" இப்போதும் மன்னன் தயங்கினான்."மன்னனாகிய என்னைவிட அறிவிலும் மதிநுட்பத்திலும் சிறந்தவர்களைப் பார்க்கும்போது என் மனத்தே பொறாமை தோன்றுகிறதே." இவ்வாறு நினைத்த உடனே அடுத்த பதுமையும் மறைந்தது. சற்றும் சலிக்காத மன்னன் மீண்டும் தன் உள்ளத்தைப் பண்படுத்திக் கொண்டான். ஒருமாதம் கழித்து மீண்டும் சிறப்புப் பூஜைகள் செய்து ஆசனத்தில் அமர வந்தான்.

இப்போது மூன்றாவது பதுமை பேசியது. "மன்னா, நீ பொய் பேச எண்ணியதுண்டா? நீதிபதியாய் இருந்து நீ வழங்கிய தீர்ப்பு எல்லாம் சரியானது என்று நினைக்கிறாயா?" 
மன்னன் தயங்கினான். அரசாங்கத்துக்கு கேடு வருமானால் அதை சில பொய்கள் பேசித்தானே விலக்க வேண்டியுள்ளது. என எண்ணியவன் தான் சொன்ன தீர்ப்பு எல்லாம் சரியாக இருக்குமா என்றும் எண்ணிய உடனே அந்தப் பதுமையும் மறைந்தது. இப்படியே இருபத்துநான்கு பதுமைகளும் மறைந்தன.

கடைசி நாள் ஒரே ஒரு பதுமை அந்த ஆசனத்தைத் தாங்கி நின்றிருந்தது. இனியாவது இந்த ஆசனத்தில் அமர இயலுமா என்ற ஆசையுடன் மன்னன் அதில் அமரவந்தான்.அப்போது பதுமை பேசிற்று.

"மன்னா, இப்போதும் நீ பொறாமை ஆசை பொய், வஞ்சம் சூது போன்ற தீய குணங்களை விட்டு விட்டு அந்தச் சிறுவனைப் போல களங்கமில்லாமல் இருக்கிறாயா?"

ஆம் என்று துணிச்சலாகக் கூற மன்னனால் இயலவில்லை. ஒரு சிறுவனுக்குள்ள களங்கமற்ற மனம் தன்னிடம் உள்ளதா என எண்ணிப் பார்த்தான்.

அப்போது பதுமை,"மன்னா இந்த ஆசனத்தில் அமரவேண்டும் என்னும் ஆசையை நீ என்னும் விடவில்லையே. நீ எப்படி களங்கமில்லா மனமுள்ளவன் என நினைக்க முடியும்?"என்று கேட்டவுடன் அந்தப் பதுமை தான் தாங்கியிருந்த ஆசனத்தொடு விண்ணில் பறந்து மறைந்தது.
விக்ரமாதித்தனைப்போல் அவன் அமர்ந்து நீதி சொன்ன ஆசனத்தில் அமர்வதற்கு ஒரு தகுதி வேண்டும்.

"சமன்செய்து சீர்தூக்கும் கொல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி." 
இவ்வாறு எண்ணிய மன்னன் அன்றே தன் தகுதியை உயர்த்திக் கொள்ளும் முயற்சியைத் தொடங்கினான்.


யார் குரு?

மிகச் சிறந்த சூஃபி ஞானிகளில் ஒருவரான ஹாசன் என்பவரிடம் இறக்கும் சமயத்தில் உங்களது குரு யார் என்று யாரோ ஒருவர் கேட்டார்.

அதற்கு அவர், மிக தாமதமாக இந்த கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். நேரம் இல்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். என்று கூறினார். அதற்கு கேள்வி கேட்டவர், நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது. நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள், இன்னும் சுவாசித்து கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறீர்கள். நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது என்று கேட்டார்.

அதற்கு ஹாசன் எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் இருக்கிறார்கள். நான் அவர்களது பெயரை சொல்வதற்கே எனக்கு பல மாதங்கள் பிடிக்கும் அவர்களைப் பற்றி பேச வருடங்கள் ஆகும். இருப்பினும் மூன்று பேர்களை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அதில் ஒன்று ஒரு திருடர். ஒருமுறை நான் பாலைவனத்தில் தொலைந்து போய் வழி கண்டுபிடித்து கிராமத்தை போய் சேரும்போது நடு இரவாகி விட்டது. பாதி இரவு சென்று விட்டது. கடைகள் அனைத்தும் மூடிக் கிடந்தன. கதவுகள் அனைத்தும் அடைபட்டுக் கிடந்தன. ரோட்டில் மனித நடமாட்டமே இல்லை. நான் விசாரிப்பதற்காக யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இறுதியில் சுவற்றில் உள்ளே நுழைவதற்காக கன்னம் வைத்துக் கொண்டிருந்த ஒரு திருடனை பார்த்தேன்.

நான் அவரிடம், நான் தங்க இங்கே ஏதாவது இடம் இருக்குமா என்று கேட்டேன். அவர், நான் ஒரு திருடன், நீங்களோ ஒரு சுஃபி ஞானி போல தோன்றுகிறீர்கள். இப்போது தங்க இடம் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் விருப்ப்பட்டால் என் வீட்டிற்கு வரலாம், திருடனுடன் தங்க உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையென்றால் என்னுடன் வாருங்கள். என்று அழைத்தார்.

நான் கொஞ்சம் ஒரு வினாடி தயங்கினேன். பின் எனக்கு உரைத்தது. ஒரு திருடன் சூஃபியை பார்த்து பயப்படாத போது ஏன் சூஃபி திருடனைக் கண்டு அஞ்ச வேண்டும். உண்மையில் அவன்தான் என்னைக் கண்டு அஞ்ச வேண்டும். அதனால் நான் அவனிடம் சரி நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினேன். நான் அவனுடன் சென்று அவன் வீட்டில் தங்கினேன். அந்த மனிதன் மிகவும் அன்பானவன், மிகவும் அருமையான மனிதர். நான் அவருடைய வீட்டில் ஒரு மாதம் தங்கினேன். ஒவ்வொரு இரவும் அவர் திருடுவதற்கு கிளம்பும்போதும், சரி, நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள், தியானம் செய்யுங்கள், ஓய்வெடுங்கள், நான் என் வேலையை பார்க்கப் போகிறேன் என்பார். அவர் திரும்பி வரும்போது, ஏதாவது கிடைத்ததா என்று நான் கேட்பேன். இன்று எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை திரும்பவும் முயற்சிப்பேன். என்று கூறுவார். ஒருநாளும் அவர் நம்பிக்கையிழந்து நான் பார்க்கவேயில்லை.

ஒரு மாதம் முழுவதும் அவர் வெறும் கையுடன்தான் திரும்பி வந்தார். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவர் நாளை முயற்சி செய்வேன். கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும். நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள் என்று நீங்கள் கடவுளிடம் சொல்லுங்கள். என்று கூறுவார்.

மேலும் தொடர்ந்து ஹாசன் சொல்லுகையில் நான் பல வருடங்கள் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கையில் எதுவும் நிகழவில்லை. நான் மிகவும் மனமுடைந்து நம்பிக்கையிழந்து இது எல்லாவற்றையும் நிறுத்திவிடலாமா என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு. கடவுள் என்று ஒருவரும் இல்லை, எல்லா பிரார்த்தனைகளும் மடத்தனம், எல்லா தியானங்களும் பொய் என்று நினைப்பேன் – அப்போது திடீரென அந்த திருடனின் நினைவு வரும். அவர் ஒவ்வொரு நாள் இரவும் கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும் என்று கூறியதை நினைத்துக் கொள்வேன்.

அதனால் மேலும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். திருடன்கூட அந்த அளவு நம்பிக்கையுடனும் அந்த அளவு நம்பிக்கையுணர்வுடனும் இருக்கும்போது நான் ஏன் இன்னும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று தோன்றும். பலமுறை இப்படி நிகழ்ந்திருக்கிறது. அந்த திருடனும் அவனைப் பற்றிய நினைவும் நான் இன்னும் ஒருநாள் என்று முயல உதவி செய்திருக்கிறது. ஒருநாள் அது நிகழ்ந்து விட்டது. அது நிகழ்ந்தே விட்டது. நான் அந்த திருடனின் வீட்டை விட்டும் அவனை விட்டும் பலஆயிரம் மைல் தூரம் அப்பால் இருந்தேன். ஆயினும் நான் அந்த திசையில் வணங்கினேன். அவர்தான் எனது முதல் குரு.

எனது இரண்டாவது குரு ஒரு நாய். நான் மிகவும் தாகமாக இருந்தேன். தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி வந்தது. அதற்கும் மிகவும் தாகமாக இருந்தது. அது நதிக்குள் பார்த்தது. அங்கே வேறொரு நாய் இருப்பதை பார்த்தது. – அதனுடைய பிம்பம்தான் – அதைப் பார்த்து பயந்தது. அது குரைத்தது உடனே அந்த நாயும் குரைத்தது. இது மிகவும் பயந்து போய் தயங்கிக் கொண்டே திரும்பி போனது. ஆனால் தாகம் மிகவும் அதிகமாக இருந்ததால் திரும்பி வந்தது, தண்ணீரில் பார்த்தது, அந்த நாய் அங்கேயே இருப்பதை பார்த்தது. ஆனாலும் தாகத்தினால் தண்ணீரில் எட்டிக் குதித்தது, அந்த பிம்பம் கலைந்து போய் விட்டது. தண்ணீரை குடித்து அது ஒரு கோடை காலமாக இருந்ததால் தண்ணீரில் நீச்சலடித்து ஆனந்தப்பட்டது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதன்மூலம் கடவுளிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்ததை புரிந்து கொண்டேன். ஒருவர் எல்லா பயங்களோடும் எட்டிக் குதித்து விடவேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.

நான் அறியாததற்குள் குதித்து விடும் ஒரு சமயம் வந்த போது ஒரு பயம் வந்தது. அந்த எல்லை வரை போய்விட்டு தயக்கப் பட்டுக் கொண்டு திரும்பி வந்து விடுவேன். அப்போது அந்த நாயின் நினைவுதான் வந்தது எனக்கு. நாய் எட்டிக் குதிக்கும்போது நான் ஏன் எட்டிக் குதிக்கக் கூடாது என்று தோன்றியது. ஒருநாள் நான் அறியாததற்குள் எட்டிக் குதித்துவிட்டேன். நான் கரைந்து அறியாதது மட்டுமே இருந்தது. அந்த நாய்தான் எனது இரண்டாவது குரு.

எனது மூன்றாவது குரு ஒரு சிறு குழந்தை. நான் ஒரு நகரத்தினுள் சென்றபோது அந்த குழந்தை ஒரு மெழுகுவர்த்தியை ஏந்திக்கொண்டு சென்றது அதன் திரி ஏற்றப்பட்டிருந்தது, மசூதியில் வைப்பதற்காக ஏற்றப்பட்ட அந்த மெழுகுவர்த்தியை கைகளில் எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது அந்த குழந்தை. ஒரு கிண்டலுக்காக நான் அந்த குழந்தையை நீயா இந்த மெழுகுவர்த்தியை ஏற்றினாய் என்று கேட்டேன். அவன் ஆமாம் என்று கூறினான். நான் தொடர்ந்து, அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா மெழுகுவர்த்தி எரியாமல் இருந்தது, நீ ஏற்றினாய் ஒளி வந்தது. நீ ஏற்றியபோது பார்த்தாய் அல்லவா அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா என்று கேட்டேன். அந்த பையன் சிரித்துவிட்டு, மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, இப்போது நீங்கள் இந்த ஒளி எங்கு போனது என்று பார்த்தீர்கள் அல்லவா அது எங்கு போனது என்று எனக்கு கூறுங்கள் என்று கேட்டான். என்னுடைய ஆணவம் சுக்குநூறானது, எனது அறிவு அனைத்தும் பொடிபொடியானது. அந்த வினாடியில் நான் எனது முட்டாள்தனத்தை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் அறிந்தவன் என்பதை விட்டு விட்டேன். என்றார்.

ஹாசன் மூன்று குருக்களைப் பற்றி கூறினார். மேலும் அவர் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் பற்றியும் பேச எனக்கு நேரம் இல்லை என்றார்.

ஆம், அது உண்மை. எனக்கு ஒருவர்தான் குரு என்று கிடையாது. ஏனெனில் எனக்கு ஆயிரக்கணக்கான குருக்கள் இருக்கின்றனர். நான் சாத்தியப்பட்ட எல்லா வழிகளிலும் கற்றுக் கொண்டேன்.

நீ அப்படிப்பட்ட விதமான ஒரு சீடன் என்றால் உனக்கு குரு என்று ஒருவர் தேவை இல்லை. ஆனால் நினைவில் கொள், குரு என்ற ஒருவர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீ தேர்ந்தெடுத்தாலும் சரி, தேர்ந்தெடுக்காமல் எல்லோரையும் வைத்துக் கொண்டாலும் சரி, நீ ஒரு சீடனாக இருக்க வேண்டியது அவசியம்.

சீடனாக இருப்பது இந்த பாதையில் மிக அவசியமான ஒரு விஷயம்.

சீடனாக இருப்பது என்றால் - கற்க முடிவது, கற்க தயாராக இருப்பது, இந்த இயற்கைக்கு திறந்தவனாக இருப்பது. நீ ஒரு குருவை தேர்ந்தெடுக்கும் போது என்ன நிகழ்கிறது எப்படி கற்றுக் கொள்வது என கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாய். ஒரு குருவுடன் இருக்கும்போது நீ மெதுமெதுவாக லயப்பட ஆரம்பிக்கிறாய். மெதுமெதுவாக நீ இயற்கையுடன் லயப்படுவது எப்படி என கற்றுக் கொள்கிறாய்.

குரு என்பவர் இந்த இயற்கையின் சிறிய வடிவம்தான். குருவுடன் நெருங்கி வர வர நீ அழகு, நேசம், நெருக்கம், அணுக்கம், அன்யோன்யம், ஒப்புக்கொடுத்தல் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்கிறாய். ஒருவரிடம் ஒன்றாக இருக்கும்போது இவ்வளவு ஆனந்தம் கிடைக்கும்போது முழுமையுடன் ஒன்றாக இருக்கும்போது எவ்வளவு ஆனந்தம் கிடைக்கும் என்பதை நீ பார்க்கும் ஒரு நேரம் வரும். குரு என்பவர் ஒரு ஆரம்பம்தான், அவர் முடிவு அல்ல. உண்மையான குரு என்பவர் ஒரு வாசல்தான், நீ அவர் மூலம் சென்று கடந்து போக முடியும். உண்மையான குரு நீ அவரை கடந்து செல்ல உதவுபவர்.
 
 

Wednesday, 22 February 2012

The Secret of Happiness

A certain merchant sent his son to the wisest of all men to learn the Secret of Happiness. The youth walked during forty days by a desert until he arrived to a beautiful castle, at the top of a mountain. There lived the wise one he was looking for.

However, instead of finding a holy man, our hero entered into a large room and he saw an immense activity; merchants entered and left, people conversing at the corners, a small orchestra playing soft melodies and a table full with the most delicious dishes of that region of the world.

The sage conversed with everybody, and the youth had to wait two hours to be attended. The sage listened attentively to the motive of his visit, but said that at that moment he did not have time to explain the Secret of Happiness. He suggested him to take a walk through the palace and to return two hours later.

"But I want to ask you a favor," added the sage giving him a little spoon of tea in which he poured two drops of oil. "While walking, carry this little spoon with the oil and take care that the oils does not get spilled."

The young man started to climb and descend the stairs of the palace maintaining always his eyes fixed on the spoon. After the two hours had passed, he returned to the presence of the sage.

"How are you?" asked the sage. "Did you see the Persian tapestry in my dining room? Did you see the garden that the Master of Gardeners took ten years to create? Did you notice the beautiful parchments of my library?"

The youth embarrassed, confessed that he had not seen anything. His only worry had been not to spill the drops of oil the sage had entrusted him.

"So then go back and know the marvels of my world," the Sage said. "You cannot trust a man without knowing his house."

Already more relaxed, the youth took again the spoon and went back to stroll through the palace, this time looking with attention to all the works of art adorning the ceiling and the walls.

He saw the gardens, the mountains surrounding them, the delicacy of the flowers, the care with which every work of art was placed on its place. After returning to the presence of the Sage, he recounted in detail all he had seen.

"But where are the two drops of oils I entrusted you?" asked the Sage. The young one looked at the spoon and noticed he had spilled them.

"So this is the only advice I can give you." said the Wisest of all the Wise One. "The Secret of Happiness is in looking to all the marvels of the world, but without ever forgetting the two drops of oils in the spoon."

“The Secret of Happiness is in knowing to enjoy the greatest pleasures of life without forgetting the little things we have in our reach"...

The Villager and the Happy Man

In a small village in the valley, lived a man who was always happy, kind, and well disposed to everyone he met. He always smiled, and had a kind and encouraging word to say whenever necessary. Everyone who met him left feeling better, happier and elated. People knew they could count on him, and regarded him as a great friend.

One of the village dwellers was curious to know what his secret was, and how he could always be so kind and helpful. He wondered how it is that he held no grudge toward anyone, and why he was always happy.

Once, upon meeting him in the street he asked him: "Most people are selfish and unsatisfied. They do not smile as often as you do; neither are they as helpful or kind as you are. How do you explain it?"

"When you make peace with yourself, you can be in peace with the rest of the world. If you can recognize the spirit in yourself, you can recognize the spirit in everyone, and then you find it natural to be kind and well disposed to all. If your thoughts are under your control, you become strong and firm. The personality is like a robot programmed to do certain tasks. Your habits and thoughts are the tools and programs that control your personality. Become free from being programmed, and then the inner good and happiness that reside within you will be revealed."

"But a lot of work is necessary. Good habits have to be developed. The ability to concentrate and to control the thoughts has to be strengthened. The work is difficult and endless. There are many walls that need to be too climbed. It is not an easy task." Lamented the villager.

"Do not think about the difficulties, otherwise this is what you will see and experience. Just quite your feelings and thoughts, and try to stay in this peace. Just try to be calm, and do not let yourself be carried away by your thoughts."

"Is that all?" Asked the villager.

"Try to watch your thoughts and see how they come and go. Stay in the quietness that arises. The moments of peace will be brief at first, but in time they will get longer. This peace is also strength, power, kindness, and love. You will then realize that you are one with the Universal Power, and this will cause you to act from a different dimension, not from the selfish, small, limited ego."

"I will try to remember your words," said the villager and continued, "there is another thing that I am curious about. You do not seem to be influenced by the environment. You have a kind word to everyone, and are helpful. However, people treat you well, and do not exploit your goodness."

"Being good and being kind do not necessarily point to weakness. When you are good, you can also be strong. People sense your inner strength, and therefore do not impose on you. When you are strong and calm inside, you help people, because you can, and you want to. You then act from strength and not from weakness. Goodness can also go with power and strength, it is not a sign of weakness, as some people erroneously think."

"Thank you very much for your advice and explanation", said the villager, and went away happy and satisfied.

Tuesday, 31 January 2012

Three nice stories that inspire

1. Once, all villagers decided to pray for rain, on the day of prayer all people gathered and only one boy came with an umbrella, that's faith.

2. A one year old baby, when you throw him in the air, he laughs because he knows you will catch him, that's trust.

3. Every night we go to bed, we have no assurance to wake up alive the next morning but still we have plans for tomorrow, that's hope.