நன்மை தரக்
கூடிய குணங்கள் முப்பத்தாறு
- தெய்வங்களை வணங்க வேண்டும்.
- துவேசம் என்பதை விட்டொழிக்க வேண்டும்.
- சத்துள்ள ஆகாரத்தையே உண்ண வேண்டும்.
- தன்னடக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- காரணமில்லாத கோபத்தை தவிர்க்க வேண்டும்.
- தன்னுடைய முடிவுகளை பகிரங்கப்படுத்தக் கூடாது.
- கர்வத்தைத் தவிர்த்துப் பணிவுடன் இருக்க வேண்டும்.
- கொடுமை செய்யாமல் செல்வத்தை ஈட்ட வேண்டும்.
- நம்பத் தகுந்தவர்களிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்.
- தன்னுடைய மனைவியை ஒழுங்காகக் காப்பாற்ற வேண்டும்.
- அறியாமையின் காரணமாகத் தவறாக யாரையும் தாக்கக் கூடாது.
- தன்னுடைய நண்பர்களிடம் விரோதமாக நடந்து கொள்ளக் கூடாது.
- எந்த நேரத்திலும் மக்களின்பால் அன்பை கைவிட்டு விடக் கூடாது.
- பெருமளவில் பெண்களோடு உறவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
- தீய நடத்தை உடையவர்களை எந்த வேலையிலும் அமர்த்தக் கூடாது.
- தீர விசாரிக்காமல் யாருக்கும் எந்த தண்டனையும் கொடுக்கக் கூடாது.
- தீயவர்களை விளக்கி, நல்ல உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- மற்றவர்களைத் துன்புறுத்தாத வகையில் அதிகாரம் செலுத்த வேண்டும்.
- தன்னிடம் விசுவாசம் இல்லாதவர்களை ஒற்றர்களாக நியமிக்கக் கூடாது.
- தனக்கு தீமை செய்தவர்கள் மேல் என்றுமே நம்பிக்கை வைக்கக் கூடாது.
- குரோதமும், ஆத்திரமுமின்றி தன்னுடைய கடமைகளை செய்ய வேண்டும்.
- ஹிம்சை செய்வதன் முலம், தன்னுடைய இலட்சியத்தை அடையக் கூடாது.
- தீய நோக்கம் உடையவர்கள் எதிரே எந்த ஆலோசனையையும் செய்யக் கூடாது.
- உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் – ஆனால் தீமை செய்தவர்களிடம் அல்ல.
- இன்பங்களை அனுபவிக்கும்போது அவற்றில் பெரும் பற்றுக் கொண்டு விடக்கூடாது.
- பெருமையடித்துக் கொள்ளாத தைரியமும், எப்பொழுதும் இன் சொல் பேச வேண்டும்.
- பெரியோர்களிடமும், நல்லவர்களிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
- பேராசை உடையவர்களை விலக்கி, மற்றவர்களுக்கு தர்மங்களைச் செய்ய வேண்டும்.
- சாமர்த்தியத்தைக் காட்டுவதற்க்குக் கூட, நல்ல நேரத்திற்க்காகக் காத்திருக்க வேண்டும் .
- கெட்ட பெயர் வராத வகையில் செல்வத்தை அடைவதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.
- சரியான காரணத்தோடு எதிரியை வீழ்த்தினால், அதன் பிறகு அதை நினைத்து வருந்தக் கூடாது.
- தன்னுடைய சிறப்புகளைப் பற்றி பேசாமல், மற்றவர்களுடைய மேன்மைகளைப் பற்றியே பேச வேண்டும்.
- எல்லோரிடத்திலும் எல்லா நேரத்திலும் தயை, அதே நேரத்தில் தூய்மையான மனதுடன் இருக்க வேண்டும்.
- மற்றவர்களிடமிருந்து அபராதத் தொகைகளைப் பெரும்போது, நல்லவர்களைத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும்.
- தன்னால் எவன் ஒருவனுக்கு நன்மை செய்யப்பட்டதோ அவன், தன்னை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- வெறும் வார்த்தைகளால் மற்றவர்களைத் திருப்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து, காரியம் மூலமாக மற்றவர்களைத் திருப்தி செய்ய வேண்டும்.
மனிதன்
கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள்
- தானம் செய்ய வேண்டும்.
- பிறர் குற்றத்தைப் பேசக் கூடாது.
- ஈரமான காலுடன் படுக்க கூடாது.
- தினந்தோறும் நல்லவற்றை படிக்க வேண்டும்.
- சூரியன் உதயமான பின் யாரும் படுத்திருக்கலாகாது.
- உடலில் எந்தவிதமான ஆடையுமின்றி குளிக்கக் கூடாது.
- வடக்கிலும், மேற்கிலும் தலை வைத்துப் படுக்கக் கூடாது.
- வயல்களிலும், போகிற வழிகளிலும் மலஜலம் கழிக்கக் கூடாது.
- கோபம், பொறாமை ஆகியவற்றை மனிதன் விட்டுவிட வேண்டும்.
- அழுக்கடைந்த கண்ணாடியில் தன் முகத்தை மனிதன் பார்க்கக் கூடாது.
- உட்காருகிற ஆசனத்தைக் காலால் இழுத்து அதன் மீது உட்காரக் கூடாது.
- பிறன் மனைவியுடன் தனிமையில் ஒரே ஆசனத்தில் கூட அமரக் கூடாது.
- இரவில் இரண்டு தெருக்களோ, நான்கு தெருக்களோ சந்திக்கும் இடங்களில் நிற்கக் கூடாது.
- பிறரைத் திட்டுவது, குறைசொல்வது, கோள் சொல்வது ஆகியவற்றை விட்டுவிட வேண்டும்.
- சரீரத்தில் சுத்தமில்லாத போது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பார்க்கக் கூடாது.
- தன்னுடைய ஒரு காலை மற்றொரு காலினால் மிதிக்கக் கூடாது. அது மிகவும் கெட்ட பழக்கம்.
- ஓடுகளை உடைப்பது, நகத்தைக் கடிப்பது போன்றவை அசுத்தமான வழக்கங்கள். அவற்றை விட்டுவிட வேண்டும்.
- பொழுது விடிவதற்கு முன்பாக மனிதன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, தர்ம நியாயங்களைப் பற்றி நினைக்க வேண்டும்.
- பிறன் மனைவியை நாடக் கூடாது. அதைப் போல் ஆயுளைக் குறைத்து, பாவத்தைக் கூட்டும் காரியம் வேறு எதுவும் இல்லை,
- அடிப்பது என்பது திருத்துவதற்காக மட்டுமே வழக்கில் வந்தது, ஆகையால் தன் மகன் அல்லது சிஷ்யன் ஆகியோரைத் தவிர, வேறு எவரிடமும் அதைப் பயன்படுத்தக் கூடாது.
- சுற்றத்தான், நண்பன், கணவனில்லாத சகோதரி, குரு, பண்டிதன், வயது முதிர்ந்தவன் – ஆகியோர் ஏழைகளாக இருந்தால், அவர்களைத் தன்னால் இயன்ற வரையில் காப்பாற்ற வேண்டும்.
- கை கூப்பி நின்று சூரியன் உதயமாகும் போதே அவனை பூஜிக்க வேண்டும். உச்சி சூரியனையும், கிரஹணம் பிடித்த சூரியனையும், நீரில் தெரியும் சூரியனின் பிம்பத்தையும் பார்க்கக் கூடாது.
- தாய், தந்தை, குரு ஆகியோர் கட்டளை இடும்போது அது நல்ல காரியமா, கெட்ட காரியமா என்று ஆராய்ந்து அறியும் உரிமை மனிதனுக்கு கிடையாது. அக்கட்டளையை நிறைவேற்ற வேண்டும்.
- எதைக் கூறினால் மற்றொருவன் மனம் புண்படுமோ அதைக் கூறக் கூடாது. தீயினால் சுட்ட புண் ஆறும், வார்த்தையினால் ஏற்படுத்தப்பட்ட புண் ஆறுவதில்லை. ஆகையால் யாரையும் புண் படுத்திப் பேசக் கூடாது.
- தெருவில் செல்லும் போது, பிராமணன், பசு, அரசன், வயோதிகன், கர்ப்பிணிப் பெண், சுமையைத் தூக்கிச் செல்பவன், உடல் நலிந்தவன் ஆகியோர் எதிர்ப்பட்டால் அவர்களுக்கு வழி விட்டு, அதன் பின் நாம் நடக்க வேண்டும்.
- தன்னுடைய பிறந்த நட்சத்திரம், தன்னுடைய பிறந்த நட்சத்திரத்திலிருந்து ஐந்தாவது நாள், பூரட்டாதி, உத்திரட்டாதி, கிருத்திகை ஆகிய நட்சத்திரங்களிலும், அஷ்டமி, சதுர்தசி, அம்மாவாசை ஆகிய நாட்களிலும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக் கூடாது.
- மனைவிக்கு மாதவிலக்கு முடிந்த நான்காவது தினம் வரை அவளுடன் கணவன் சேரக்கூடாது; ஐந்தாவது நாள் சேர்ந்தால் பெண் குழந்தை பிறக்கும். ஆறாவது நாள் இனைந்தால் ஆண் குழந்தை பிறக்கும். மாதவிலக்கு முடிந்து பதினாறாவது நாள் வரை கர்ப்பமுண்டாவதற்கான காலம் என்று கூறப்படுகிறது.
- புகழ், ஆயுள், செல்வம் எல்லாவற்றையும் கொடுப்பது நல்ல ஆசாரமே!. நல்ல ஆசாரங்களிலிருந்து நழுவாதவன் நல்லுலகங்களை அடைவான்.
No comments:
Post a Comment