Thursday, 23 February 2012

நான்கு நிலை வாழ்க்கை

பிரமச்சர்யம்
வேதங்களை ஓதுவது; வேதங்களை கற்பித்த ஆசார்யர்களுக்குப் பணிவிடை செய்வது; எவரிடமும் பாரபட்சமின்றி நடந்து கொள்வது; தன்னை பகைப்பவர்களுக்கும் நன்மை செய்வது; தியானம் செய்வது; தன்னுடைய கல்வியை மேன்மேலும் வளர்த்து கொள்வது – ஆகியவை பிரமச்சாரியின் கடமை.
கிரஹஸ்தாஸ்ரமம்
கொடுமையின்மை, நன்றியுணர்வு, பிதுர் கார்யங்களில் ஈடுபாடு, எல்லா வர்ணங்களைச் சார்ந்தவங்களுக்கும் உணவளிப்பது, விருந்தாளிகளைத் தெய்வம் எனக் கருதுவது, உரிய காலத்தில் மட்டும் மனைவியை அடைந்து சந்ததிகளைப் பெருக்குவது, தெய்வ காரியங்களைச் செய்வது – போன்றவை இல்லற நிலையின் தர்மமாகும்.
வானப்ரஸ்தம்
இல்லற தர்மத்தை முழுமையாக முடித்த பின், சடைமுடி தரிப்பதற்கான விதிகளைப் பின்பற்றுவது; முயற்சியினால் இந்திரியங்களை அடக்குவது, உள்ளத்தை தூய்மைப்படுத்துவது - ஆகியவற்றைச் செய்து கொண்டு, மனைவியுடனோ, மனைவியில்லாமலோ வனம் சென்று, அங்கு கிடைத்ததை உண்டு வாழும் தர்மம் வானப்ரஸ்தம்.
சந்யாசம்
வீட்டையும், சுற்றத்தையும் துறந்து, சுற்றித் திரியும்போது, கிடைத்த இடத்தில் படுத்து, தானமாகக் கிடைப்பதை உண்டு, இந்திரியங்களை அடக்கி, ஆசைகளையும், பற்றுக்களையும் அறுத்து, எல்லா ஜீவராசிகளையும் சமமாகப் பாவித்து, எதையும் விரும்பாமல், எதையும் வெருக்காமல் வாழும் நிலை சந்யாசம்.

No comments:

Post a Comment