இன்றைய நவீன உலகில் இயந்திரங்களின் பயன்பாடு மிகவும் அத்யாவசியமாகி விட்டது. இயந்திரங்கள் இல்லாத மனித வாழ்க்கையைப் பற்றி கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு இயந்திரங்கள் இன்றைய மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாதவையாக மாறி விட்டன. இன்றைய நவீன உலகில் இயந்திரங்களின் பயன்பாடு பற்றி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.
இயந்திரங்களினால் மனிதனின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது. இயந்திரங்கள் இன்றைய மனிதனின் தேவைகளை வெகு விரைவாக பூர்த்தி செய்கிறது. இயந்திரங்கள் இன்றைய உலகம் சுருக்கிவிட்டதால், மனிதனால் விரைவாக பயணம் செய்ய முடிகிறது. வியாபாரம் பெருகிவிட்டது. இயந்திரங்கள் இன்றைய உலகை ஒரு பூகோளக் கிராமமாக (Global Family) மாற்றி அமைத்துள்ளது. வளர்ந்து வரும் அறிவியல் நவீனங்களும் அதை உண்மைப்படுத்தும் விதத்திலேயே வெகு விரைவாக அறிவியல் புரட்சி செய்து வருகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, தற்கால உலகை அறிவியல் உலகம் என்றும் உலகம் ஒரு கிராமம் கூறலாம். கணனி, மின் அஞ்சல், இணையம் என தகவல் தொழில் நுட்பத்துறையிலும், மறு பக்கத்தில் அறிவியல் ஆராய்சியின் உச்ச நிலையில் போலாக்கம் (Cloning) எனும் செயற்பாடு உலகை பெரு வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இயந்திரங்களின் பயன்பாடு பற்றி விரிவாக காண்போம்.
இயந்திரங்கள்
இயந்திரவியலின் இயந்திரங்கள் இரு முக்கிய வகைப்படும்.
1.
மரபு சார்ந்தது
2.
மரபு சாராதது
1.
மரபு சார்ந்தது
a.
திரும்பு மைய இயந்திரங்கள்
b.
எந்திர மைய இயந்திரங்கள்
c.
அலைவு மைய இயந்திரங்கள்
d.
இணைவு மைய இயந்திரங்கள்
2.
மரபு சாராதது
a.
சீரொளி இயந்திரங்கள்
b.
நீர் தாரை இயந்திரங்கள்
c.
கேளா ஒலி இயந்திரங்கள்
d.
சிராய்ப்பு தாரை இயந்திரங்கள்
e.
மின்மவியல் இயந்திரங்கள்
f.
மின்கசிவு இயந்திரங்கள்
g.
மின் வேதி இயந்திரங்கள்
h.
வேதி இயந்திரங்கள்
i.
கரி வில் இயந்திரங்கள்
இவ்வாறு பல வகையாக இயந்திரங்களைப் பிரிக்கலாம். அறிவியலும் இயந்திரங்களும் இல்லாத உலகத்தைப்பற்றி சிந்திக்க முடியாத அளவுக்கு இன்றைய உலகில் அவை பெரும் பங்கு வகிக்கின்றன. மனித வாழ்க்கை தொடங்கியது முதல் அறிவியல் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கிவிட்டன. மனிதன் தனது ஆதி காலத்தில் தனது அனைத்து தேவைகளையும் தானாகவே தனது உழைப்பினாலேயே பூர்த்தி செய்து கொண்டான். பிறகு தனது தேவைக்கேற்ப புதிய கருவிகளை கண்டுபிடித்தான். அதாவது தனது தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யவும், சிரமம் இல்லாமல் விரைவாகவும், நேர்த்தியாகவும் வேலைகளைச் செய்ய இந்த இயந்திரங்கள் உதவியது. காலப்போக்கில் நாகரீகம் வளர தொடங்கியது மனிதனும் வளர தொடங்கினான். புது புது
கருவிகளையும் கண்டு பிடித்தான். அவற்றின் துணையோடு உலகையும் ஆளத்தொடங்கினான்.
சாதனைகள் பல செய்தான். சமத்துவத்தை நிலை நாட்டினான்.
இன்றைய உலகில் இயந்திரங்கள் மிக மிக அத்யாவசியமான பொருளாகிவிட்டது. காலை எழுந்தது
முதல் இரவு உரங்குவது வரை நாம் பெரும்பாலான வேலைகளுக்கு இயந்திரங்களையே நம்பி உள்ளோம்.
உதாரணமாக பெரும்பாலான வீடுகளில் சமயல் செய்ய சமயல் எரிவாயு அடுப்பையே
பயண்படுத்துகிறார்கள். பயணம் செய்ய மிதி வண்டி, இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம்,
புகைவண்டி, ஆகாய விமானம் மற்றும் கப்பல் என பல வகையான வாகனங்கள் உதவி பரிகின்றன. துணி துவைப்பதற்கும், தண்ணீரை
காய்ச்சுவதற்கும், தார் சாலைகள் அமைப்பதற்கும், தரமான கட்டிடங்கள் கட்டுவதற்கும்,
தரணியை ஆள்வதற்கும் இன்றைய உலகில் இயந்திரங்கள்
உதவி புரிகின்றன. சமயல் முதல் சாப்ட்வேர் வரை, துவைப்பது முதல் தூங்குவது வரை இயந்திரங்கள்
மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
அரசாங்கங்கள் தனது
நிர்வாகத்தை எளிதாக நடத்த இயந்திரங்கள் பெரும் அளவில் உதவி புரிகின்றன. அரசாங்கக்
கோப்புகளை எளிதாக எடுத்துச் செல்ல நான்கு சக்கர வாகனம், புகைவண்டி, ஆகாய விமானம் மற்றும்
கப்பல் போன்ற வாகனங்கள் பயன்படுகின்றன. குற்றவாளிகளைத் தண்டிக்கவும் எதிரி
நாட்டிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவும் அதி நவீன ஆயுதங்கள் உதவுகின்றன. செய்திகளை
உடனுக்குடன் பரிமாறவோ அல்லது எடுத்துச்செல்லவோ வாகனங்கள் மிகவும் பயணுள்ளதாக
இருக்கின்றன. குற்றங்கள் நடந்த இடத்திற்கு விரைவாக செல்லவும் இந்த வாகனங்கள்
பயணளிக்கின்றன.
மனிதனால் செய்ய
இயலாத காரியங்களைக் கூட செய்ய இந்த இயந்திரங்கள் உதவி புரிகின்றன. கனமான பொருட்களை
எடுத்துச் செல்லவும், அகற்றவும், இடம் மாற்றவும், விரைவாக செய்து முடிக்கவும் பல புது
வகையான இயந்திரத்தின் மூலம் மக்கள் வேலைகளை எளிதாக செய்கிறார்கள்.
ஆடைகள் நூற்கவும்,
கட்டிட பொருட்கள் தயாரிக்கவும், செருப்பு போன்ற அத்யாவசிய பொருட்கள் தயாரிக்கவும் இயந்திரங்கள்
பயன் படுத்தப்படுகின்றன. தகவல்களை உடனுக்குடன் பரிமாற கணனி, மின்னஞ்சல், இணையம் என
பல வகையான தொழில்நுட்பங்கள் வந்து விட்டன.
மருத்துவத்துறையில்
எளிதாக நோய்களைக் கண்டறிய புது கருவிகள் வந்து விட்டன. அறுவை சிகிச்சை செய்வது,
மாற்று உடல் உறுப்பு பொருத்துவது என ஏராளமான முன்னேற்றங்கள். மனிதனின் வாழ்க்கையில்
இயந்திரங்கள் இல்லாத துறையே இல்லை எனும் அளவிற்கு இயந்திரங்கள் பெரும் பங்கு
வகிக்கின்றன.
தற்கால விஞ்ஞான
சூழலில் ஏற்பட்டுள்ள ஏராளமான முன்னேற்றங்களினால் மனிதனின் வாழ்க்கைத்திறன் உயர்ந்து
விட்டது. காலையில் எழுந்தது
முதல் இரவு உரங்குவது வரை நம் வாழ்கையில் இயந்திரங்கள் புகுந்து விட்டன. விஞ்ஞானம், நாகரீகம் மற்றும் தொழில்நுட்பங்கள் வளர்ந்ததுள்ளது. மறுபக்கம் வெடிகுண்டு, தீவிரவாதம், மதவாதம், இணையதள உலகம், கல்வியில்
ஏற்பட்டுள்ள ஏராளமான மாற்றங்களிளால் நமது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. எந்த
அளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதோ அதே அளவுக்கு தீமைகளும் உள்ளது. ஆகையால் இன்றய
இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் சரியான விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது தலையாய கடமை.
Gowri
ReplyDelete