Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Tuesday, 9 April 2013

நல் தெய்வம் பசு

ஆர்க்கும் நல் தெய்வம் பசு எனும்
ஆகம மறைகள்
ஏர்க்கும் நல்தெய்வம் இதனின் ஊங்கு
இல்லையாம்; எண்ணி
நீர்க்கும் புற்கும்  நல் நிழலுக்கும்
நேரம் முன் இயற்றிப்
பார்க்கும் தன்தொழில் பின்படில்
உழும் தொழில் பலிக்கும்.  (6)


ஆகமங்களும், வேதங்களும்  யாவர்க்கும் நல்ல தெய்வம் பசு என்றே கூறுகின்றன. ஏர்த்தொழிலுக்கும் இதனை விட நல்ல தெய்வம் வேறு இல்லை என்று எண்ணி உழவன் அவை அருந்தும் நீர், மேயும் புல், தங்கும் நிழல் ஆகிய வசதிக்குரிய நேரத்தையும் செயலையும் முன்னர் அமைத்து, தனது தொழில் நலன்களை பின்னால் வைத்துக் கொல்வானேயானால் அந்த உலவனுக்கு உழுதொழில் சித்திக்கும்.

பொற்க்குறை, பசுக்குறை புருவையின் குறை
நெற்குறை பால் தயிர் நெய் எருக்குறை
சொற்க்குறை யாவையும் தொடர்ந்து சூழும்கால்
 புற்குறை இலமையில் புகுந்த வன்முறை. (17)

பொன் மாடு ஆடு நெல் பால் தயிர் நெய் எரு  முதலான இவற்றின் குறைகளால் உழவனின் புகழுக்கும் குறைவு உண்டாம். இவை யாவும் எதனால் ஏற்பட்டவை என்று ஆராயுமிடத்து புல் பரப்பு நிலம் இல்லாத காரணத்தால் ஏற்பட்ட வலிய குறையாம்.

மட்டுக்கு ஆகலா வயிற்றினுக்கு உழைத்திடின் அவற்றின் 
பாட்டுக்கு ஆகவும் மிகும்பலன் அதில் பகிர்ந்த எடுத்து
ஆள் தொக்கால் விலை எத்துனை அத்துணை சரியாய்
ஊட்டற்கு ஆவன விலை கொண்டு ஊட்டு உணவு உளவேனும். (20) 

மாட்டின் வயிற்றினுக்கு உதவாத மிளகாய், புகையிலை முதலிய பணப் பயிர்களின் பொருட்டு அந்த மாடுகள் பாடுபடுவதால் அவைகளின் வேலைகளுக்காகப் பணப் பயிரில் அதிகமாக கிடைத்த பொருள்களைப் பங்கு செய்து எத்தனை  ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை இந்த மாடுகள் செய்திருக்கின்றன என்பதை எண்ணி வேறு உணவுப் பயிர்களின் வருமான மிகுதியில் பருத்தி விதை, பிண்ணாக்கு முதலியன விலைக்கு வாங்கி சத்துள்ள அவ்வுணவை அவைகளுக்கு ஊட்டுவாயாக.

பகைத்து எதிர்த்திடில் கருவியாய் உதவுதல் பாரான் 
மிகுந்த வன்  படை விரயம் என்றே செலவிட்டான் 

வகுத்த பூர்வ சாதனம் என் மனத்தினில் அடையான்
தொகுத்த தீன்விற்கச்  சேவிற்பான் இருவரும் சுமடர். (21)

பகைவர்கள் எதிர்த்து வந்த போது அவர்களை நாட்டுக்குள் விடாமல் பாதுகாக்கும் படைகளின் உதவியை எண்ணாமல், மிகுதியான படையால் பொருள் விரயம் ஏற்படும் என்று தனது அரச பரம்பரைச்  சாதனத்தையும் கருதாமல் படைகளை குறித்த அரசனும், பொருள் வரவை நினைந்து, தீனிப்போர்களையும் பசு மாடுகளையும் விற்ற உழவனும் மடையர்கள் ஆவார்கள்.

துவரை கொள் கடலைகள் சொன்னல் மாடங்கள் 
அவரைகள் ஆதியில் அகலும் போக்கு எலாம்
எவையும் ஒன்றாக்குவி ஏற்ற காலத்தில் 
அவை மாறி ஆதிகட்கு அறிய தீனும் ஆம். (23)

துவரை கொள் கடலை சோளம் பயறு வகைகள் முதலியவற்றில் இருந்து கழியும் சக்கைகள், பொட்டுக் கள் அனைத்தையும் ஒன்றாகக் குவித்துவை. அவை வெருமைக்காலத்தில் ஆடு மாடுகளுக்கு அரிதான தீனி ஆகும்.

சொன்னல் -  சோளம், மாடங்கள் - உளுந்து முதலிய பயறு வகைகள். அகலும் போக்கு - கழியும் பொட்டுக்கள். மறி - ஆடு . தீனும் - தீவனமும்

வாய் இலை என்னினும் வருத்தம் இல்லையோ
ஆய்தரத் தக்கதோ அமைப்பு இது என்பிரேல்
சேய்  சொல்லத் தெரிந்ததோ தேகம் போற்றுதல்
தாய் செயல் அல்லவோ தாங்கு சாலத்தை. (31)

ஆவினங்கள் வாய் பேசுவதற்கு இல்லை என்றாலும் அதற்கு வருத்தம் இல்லாமலா இருக்கும்? இது ஆராய வேண்டிய ஒன்றா? அவைகளின் அமைப்பு அது என்பாயானால், ஒரு குழந்தை சொல்லிய பின்பா அதன் உடம்பை பாதுகாக்கிறோம்? அக் குழந்தையை பாதுகாத்தல் தாயின் கடமை அல்லவா? அது போலப் பசுக்கூட்டதை நீ தாயாக இருந்து பாதுகாப்பாயாக.

கொள்ளிலோ வினை உயிர்ப்புகள் ஆதிபார் கொடையில் 
தள்ளி ஈயினும் பாதுகாப்பவர்க்கு நீ தருக
அள்ளி ஈயினும் கொலைஞருக்கு அளித்திடேல் அளிக்கில்
விள்ளும் அக்கொலைக்கு உடன்படும் பாவம் உன் மீதாம். (35)

ஆவினங்களில் ஒன்றை வாங்கும் போது அது வேலை செய்வதில் பெரு மூச்சு விடுகிறதா, அல்லது இயல்பான முறையில் மூச்சு விடுகிறதா என்பது போன்றவற்றை கவனித்து வாங்குக. அதனை விலைக்கு கொடுக்கும் போது, விலையைக் குறைத்துக் கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் அதனை பாதுகாப்பவனை பார்த்து கொடு. அதனை கொலை செய்து உண்பவன் அதிக விலை கொடுத்தாலும் அவனுக்கு கொடுக்காதே. கொடுத்தால் அக் கொலைக்கு உடன்படும் பாவம் உன்னை வந்து சாரும்.


மட்டுக்  கொட்டில் 

தள்ளு கோசலம் கோமயம் பின்வழி தரவே 
உள்ளுயர்ந்த நல் தளத்தினது உரைவழி சாடித்
தள்ளினும் எதிர் இறப்பினது ஈரம் ஆதிகள் ஆம் 
கொள்ளு குற்றம் கொண்டு ஓடுகால் வலியது கொட்டில். (39)

பசு கொட்டிலானது பசுக்களின் சாணம், மூத்திரம் முதலியன பின்னால் வழிந்தோடும் படியான உயர்ந்த தளத்தினை உடையதும் சாணம், மூத்திரம் முதலியன உறைந்து கிடந்த வழி, அவைகளை தள்ளிக் கழுவும் போது அக்கழிவுகளை அகற்றிக்கொண்டு ஓடும் கால்வாய்களை உடையதும் நிழல் தரும் தாழ்வாரம் உடையதுமாய் இருக்க வேண்டும்.

அளவு உறும் தோல் பிணைப்பு ஆகும் ஆம் சுழி 
உள சுழிக்கு அதிகம் தோற்கு  ஊனமும் தெரி
வன்முறும் மயிலை உத்தமம் கறுபபினது 
இளிவுறும் அதமம் ஆம் ஏனை மத்திமம். (58)


அளவுற்ற தோல் பிணைத்து நிற்கும் இடங்களில் சுழிகள் தோன்றும். இருக்கும்  அளவுக்கு மேல் சுழிகள் இருப்பின் அவை தோலுக்குப் பலக்குறைவே அல்லாது வேறு கெடுதி இல்லை என்று தெரிந்து கொள். காளைகளில் மயிலை நிறம் உத்தமம். கருப்பு நிறம் அதமம். மற்ற நிறங்கள் மத்திமம் என்றுணர்க.

வீழில் மெய்யுறல் சிதறுதல் விழுசலம் பி(ன்)னிடல்
பாலுறப் பருபருத்தலாய் இடை நடுப்பரிதல்
குழுரோகம் தன்னால் இவை முதலிய சூழால்
ஊழின் மாவலி உயிர் நிலை ஊட்டிய மருத்தின். (53)

விழுது போல் உடம்பு மெலிதல், மாட்டின் வாயில் ஊறி விழும் சலவாய் நார் போன்று பின்னித் தொங்குதல், ரோமம்  சிலிர்த்து காணுதல், இடுப்பும் வயிறும் நெளிந்து வருந்துதல் போன்ற நோய்களின் குறிகளை எண்ணாத வைத்தியன் ஊட்டிய மருந்தால் அவைகள் உயிர் நிலைக்கின்றதென்று கொள்ளுதற்கு இல்லை. ஊழின் வலியால் அவ்வுயிர் உடலில் நிலைத்து இருக்கிறது என்று கொள்ளலாம்.

Monday, 8 October 2012

யோகாசனப்பிரியர்களுக்கு ஒரு மடல்!

நீங்கள் யோகா கற்க விருப்பம் உள்ளவரா? உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனையா? யோகா கற்க உங்களுக்கு யாரேனும் அறிவுரை கூறினார்களா? அல்லது தற்போது நீங்கள் யோகா கற்று கொண்டு இருக்கிரீர்களா?
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழ மொழி ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான சூழலில் ஏற்பட்டுள்ள ஏராளமான பிரச்சனைகளால் நோயற்ற மனிதனைப் பார்ப்பது அரிதாகி விட்டது. காலையில் எழுந்தது முதல் இரவு வரை நம் வாழ்கை முறை மாறி, உடல் உழைப்பு குறைந்ததனால் உடலின் பலம், நோய் எதிர்ப்பு திறன் ஆகியவை குறைந்ததுடன் ஆயுளும் சுருங்கி விட்டது. விஞ்ஞானம், நாகரீகம் வளர்ந்து உள்ளது ஆனால் மனிதனின் வாழ்க்கைத் தரம் குறைந்து விட்டது. போட்டி, பொறாமைகளினால் நமது வாழ்க்கை சீரழிந்துவிட்டது. அதற்கு தீர்வு யோகம் கற்று வாழ்க்கையை மேம்படுத்துவதே.
ஆனால் இன்று எத்தனை யோகா ஆசிரியர்கள் திறமையானவர்களாக உள்ளனர் என்றால் அது கேள்விக்குறி! இன்றைய காலகட்டத்தில் யோகா என்பது பொருளீட்டும் ஒரு வேலையாக உள்ளதே தவிர உண்மையாக, திறமையோடு மற்றும் சமுதாய நோக்கத்தோடு யோகா கற்றுத்தருபவர்கள் மிகச்சிலரே. யோகா ஆசிரியர்களின் உண்மையான நிலையை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.
நம் நாட்டில் வாழ்ந்த ரிஷிகள் நமக்கு கொடுத்த விஷயங்கள் ஏராளம். அவை அனைத்தும் மனிதனுக்கு ஓர் நன்கொடை. மனிதர்களாகிய நாம் அந்த பரம்பொருளை உணர ஒரு படிக்கட்டு. அவற்றினுள் யோகம் முதலிடம் வகிப்பதோடு மட்டுமல்லாமல் இன்றய தேவையும் கூட. யோகத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் பதஞ்சலி முனிவரும், திருமூலரும் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றனர். யோகத்தில் பல வகைகள் உள்ளன. உதாரணம் ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம், இராஜ யோகம், அஷ்டாங்க யோகம், ஹட யோகம், குண்டலினி யோகம் இன்னும் பல உள்ளன.
யோகம் என்ற சொல் யுஜ் என்ற வேர் சொல்லிலிருந்து வந்தது. யுஜ் என்றால் இணைதல் என்று பொருள். அதாவது ஜீவாத்மாவும் பரமாத்வாவும் இணைய வேண்டும் என்பது நோக்கம். ஆனால் இன்று பெரும்பாலானவர்கள் யோகா பயில்கிறேன் என்று ஆசனத்தை பயிற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் யோகா பயில்வதின் நோக்கம் என்ன? பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சூத்திரத்தில் அத்யாயம் இரண்டு ஸ்லோகம் இருபத்தி ஒன்பதில் அஷ்டாங்க யோகத்தை பற்றி விளக்குகிறது. அஷ்டாங்க (அஷ்ட + அங்க) என்பது எட்டு வகையான அங்கங்கள் என எளிமையாகக் கூறலாம்.
அவை முறையே:
இயமம்           : தவிர்க்கப்பட வேண்டியவை
நியமம்            : பின்பற்றப்பட வேண்டியவை
ஆசனம்           : இருக்கை (உடலை வளைத்து செய்யக்கூடிய பயிற்சி)
பிராணாயாமம்     : மூச்சுப் பயிற்சி
பிரத்தியாகாரம்     : மனதை புலன் வழி நாட்டத்திலிருந்து திருப்புதல்
தாரணை          : மனதை ஒருமுகப்படுத்துதல்
தியானம்          : மனதை ஒரே சிந்தனையில் நிலைநிறுத்துதல்
சமாதி             : ஆழ் நிலை தியானம்
இவற்றில் முதல் ஐந்தும் உடலும், மனமும் சம்பந்தப்பட்டவை எனவே இதை பகிரங்க யோகம் எனவும், அடுத்த மூன்றும் மனமும், ஞானமும் சம்பந்தப்பட்டவை எனவே அதை அந்தரங்க யோகம் எனவும் கூறப்படுகிறது. அஷ்டாங்க யோகத்தின் கடைசி நிலை சமாதி. எவர் ஒருவருக்கு சமாதி கைகூடுதோ அவருக்கு அஷ்ட சித்தி கிடைக்கும். சமாதி நிலையை அடைந்தவர் சித்தராகிறார். இந்த எட்டு நிலைகளையும் படிப்படியாக கற்று முக்தி அடைய வேண்டும் என்பது நம் முன்னோர்களின் கூற்று. அதுவே யோகத்தின் தாத்பரியம்.
அஷ்டாங்க யோகத்தின் மூன்றாவது நிலை ஆசனம். ஆசனம் என்பது உடலை வளைத்து செய்யக் கூடிய பயிற்சி. சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும் என்பது பல மொழி, அது போல உடம்பு இல்லாமல் எந்த செயலையும் செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மை, எனவே இன்றைய காலகட்டத்தில் உடலினை பேணி பாதுகாப்பது என்பது அவசியமானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. ஆனால் இன்றைய பெரும்பாலான யோகா ஆசிரியர்கள் அவர்களுக்கு தெரிந்த இருபது முப்பது ஆசனங்களை வைத்துக்கொண்டு யோகா கற்று தருகிறேன் என்று ஆசனம் மற்றும் பிராணாயாமம் மட்டுமே கற்று கொடுக்கின்றனர். ஆசனம் மற்றும் பிராணாயாமம் யோகத்தின் ஒரு பகுதியே தவிர அதுவே முழுமையான யோகம் ஆகாது. உண்மையில் அவர்களுக்கு உடற்கூறியல் மற்றும் உடலிங்கியல் எவ்வாறு வேலை செய்கிறது என்பது தெரியுமா என்றால் சந்தேகம். எந்த நோய்க்கு என்ன ஆசனம் பயில வேண்டும் என்றால் தெரியாது. எந்த நோய்க்கு என்ன ஆசனம் பயிற்சி செய்ய கூடாது என்பதுவும் தெரியாது. இவர்கள் யோகா ஆசிரியர்கள். இவர்களிடம் தான் நாம் யோகாசனம் பயில்கிறோம்.
புத்தகத்தை படித்தோ அல்லது முறையற்ற ஆசிரியர்களிடமோ யோகா கற்க கூடாது. ஏன்? நம் உடல் மிகவும் நுட்பமான பல பாகங்களை கொண்டது. அதை மிகவும் கவனமாக கையாள வேண்டும். யோகா கற்கிறேன் என்று நம் உடலை நாமே கெடுத்துக் கொள்ளக்கூடாது. அதிலும் குறிப்பாக வியாதி உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உதாரணமாக சர்கரை வியாதி உள்ளவர்களுக்கு அதனோடு சேர்ந்து இரத்த அழுத்த நோயோ அல்லது உடற்பருமன் போன்ற ஏதேனும் ஒன்று கூடவே இருக்கும். யோகா சிகிச்சை (தெரபி) தெரியாதவர்கள் சர்கரை வியாதிக்கு ஆசனம் கற்று தருவார்கள். அதில் சில ஆசனங்கள் இரத்த அழுத்த நோய்க்கு உகந்ததாக இருக்காது. அதனுடைய விளைவு சர்கரை வியாதி குறைந்து இரத்த அழுத்த நோய் அதிகமாகிவிடும். சரியான முறையில் யோகா சிகிச்சை கற்று தரும் நிறுவனங்கள் மிகவும் குறைவு. தற்போது நீங்கள் யோகா கற்று கொண்டு இருக்கிறீர்களா தயவு செய்து உங்களுடைய ஆசிரியரின் அனுபவ ஞானத்தை சரிபார்க்கவும்.
இன்றைய கால கட்டத்தில் கல்வி என்பது வியாபாரமாகிவிட்டது. பல கல்வி நிறுவனங்கள் யோகாவை ஒரு பாட திட்டமாக வைத்துள்ளது. அது எந்த அளவுக்கு தரமானதாக இருக்கிறது என்றால் மிகவும் கவலை அளிக்கிறது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் பணத்துக்காக பல வகையான படிப்புகளை அறிமுகப்படுத்துகின்றன அதில் யோகா பிரபலமடைந்து வருகிறது. அவர்களிடம் முறையான பாட திட்டமும் இல்லை, அனுபவம் மிக்க ஆசிரியர்களும் ல்லை. முறையற்ற கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் யோகா வகுப்பு எடுப்பதால் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றன. இது வரைக்கும் பெரிய அளவில் பிரபலமான பிரச்சனை வரவில்லை என்றாலும் சிறிய அளவில் ஆங்காங்கே சில பிரச்சனை உருவெடுக்கிறது. அதை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும்.
நமது முன்னோர்கள் உலகிற்கு கொடுத்த மிகச்சிறந்த கொடை யோகா. அதனை பாதுகாப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். அனைத்து யோகா ஆசிரியர்களும், எந்த நோய்க்கு என்ன ஆசனம் பயிற்சி செய்ய வேண்டும், எந்த நோய்க்கு என்ன ஆசனம் பயிற்சி செய்ய கூடாது என்பதுவும் மிக நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். யோகா ஆசிரியர்கள் அனைவரும் முறையான கல்வி நிறுவனங்களில் பயிற்சி எடுத்து பணத்துக்காக அல்லாமல் வேலையையே சேவையாக செய்ய முன் வரவேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டாம் என்பது நோக்கம் அல்ல. பணமும் சம்பாதியுங்கள் சேவையும் செய்யுங்கள் என்பது என் வேண்டுகோள். அரசாங்கமும், முன்னணி கல்வி நிறுவனங்களும் தரமான யோகா பாடதிட்டத்தை கொண்டு வர முன்வர வேண்டும். மத்திய அரசாங்கம் ஒரு குழு அமைத்து யோகா பாடதிட்டம் சரியாக உள்ளதா என சரி பார்த்து அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தரச்சான்றிதல் அளிக்க முன்வர வேண்டும். மக்களும் முறையான, தரமான குருவிடம் பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும்.

Wednesday, 14 March 2012

மன அழுத்தம்

கிராமப்புறங்களில் வாழ்வது தனி மகிழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். கிராமங்களில் வீசும் இதமான காற்று, அமைதியான சூழல், அங்கு வாழும் மக்களையே மன அழுத்தத்திலிருந்து வெளியில் கொண்டு செல்லும், மேலும் அவர்களை அமைதியை நாடச்செய்யும். ஏதேனும் ஒரு சூழ்நிலையில் மனஅழுத்தம் ஏற்பட்டால் கூட அங்கு நிலவும் அமைதியின் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

கிராமப்புறத்தில் வாழும் மனிதர்களை விட நகர்ப்புறத்தில் வசிக்கும் மனிதர்கள் அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. நகர்புறத்தில் காணப்படும் வேறுபட்ட சமூக அமைப்பு, அதிக சப்தம் மற்றும் மக்கள் நெருக்கடி ஆகியவை காரணமாக மூளையின் அதிக உணர்வு கொண்ட மற்றும் மனஅழுத்தத்துடன் தொடர்பு கொண்ட அமைக்டலா என்ற பகுதி அதிகமாக செயல்படுவது தெரிய வந்துள்ளது.

மேலும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பகுதியாகவும், சுற்றுப்புறத்தோடு தொடர்பு கொண்டதாகவும் விளங்கும் மூளையின் மற்றொரு பகுதியான சிங்குலேட் கார்டெக்ஸ், நகர்ப்புறத்தில் பிறந்தவர்களிடம் தேவையற்ற வகையில் அதிகமாக செயல்படுவதும் ஆய்விலிருந்து தெரிய வருகிறது.

வரும் 2050-ம் ஆண்டிற்குள் ஏறக்குறைய 70 சதம் பேர் நகர்ப்புற வாழ்க்கைக்கு வந்து விடுவர் என கூறப்படுவதால் ஒழுங்கற்ற மனநிலை, எதிலும் அதிக ஆர்வமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க சிறந்த மனநலத்துடன் வாழ்வதற்கு ஏற்ப நகர்ப்புறங்களை தற்போதிருந்தே வடிவமைத்து அதற்கேற்ற வகையில் வாழ்க்கை முறையினை அமைத்து கொள்வது நலம் தரும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மன அழுத்தத்தை தவிர்க்க சில எளிமையான வழிமுறைகள்

தேவையற்ற விவாதம் வேண்டாம்

மன அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிற சூழல்கள் வீட்டிற்கு வெளியில் இருந்து ஏற்படுகிறது. அதனை அப்படியே வெளியே விட்டு விட வேண்டும். வீட்டிற்குள் கொண்டு வந்து தேவையில்லாமல் அதை விவாதிக்க கூடாது. மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழல்களை சமாளிக்கப் பழகவேண்டும். தேவையில்லாமல் விவாதம் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் தரக்கூடாது.

மனஅழுத்தம் ஏற்படும் போது தனிமையை நாடுங்கள்

மனஅழுத்தம் ஏற்பட்ட சூழலில் தனிமையை நாடுவது நல்லது. அது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும். நீங்கள் தனிமையை நாடும் போது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் ஏன் தனிமையை விரும்புகின்றீர்கள் என்று தெரியும். வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

உறவுகளிடம் கேளுங்கள்

உங்கள் உறவுகளுடன் இனிய சூழலை கடைபிடியுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை உறவுகள் மீது திணிக்காதீர்கள். உங்களின் மன அழுத்தம் உறவுகளுக்கும் பாதிப்பபை ஏற்படுத்தும் எனவே மனதை எளிதாக்கி  உறவுகளை உற்சாகப்படுத்துங்கள். மன அழுத்தமான சூழ்நிலையில் உங்களின் நடவடிக்கைகள் உங்கள் உறவுகளை எவ்வாறு பாதிக்கிறது என்று கேளுங்கள்.

கவலைக்கு முற்றுப்புள்ளி

கவலைதான் மன அழுத்தத்தின் ஊற்றுக்கண். அதிலிருந்து தான் மன அழுத்தம் பெருக்கெடுக்கிறது. எனவே கவலைக்கு கட்டுப்பாடு போடுங்கள். கவலை ஏற்படுவதை கட்டுப்படுத்துவது உங்கள் கையில்தான் இருக்கிறது.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்

உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். அது தானாக உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

வளைந்து கொடுங்கள்

எதற்குமே வளைந்து கொடுக்காமல் இருப்பதுதான் மன அழுத்தத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஒரு சில விசயங்களில் நாணலைப்போல வளைந்து கொடுத்தால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர் உளவியலாளர்கள்.

மன்னிக்கும் மனப்பான்மை

என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள். மன்னிக்கும் மனப்பான்மை இருந்தால் மன அழுத்தத்தை குறைத்து விட முடியும்.

Wednesday, 29 February 2012

பாப்பாப் பாட்டு

ஓடி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!  1

சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! 2


கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!  3


பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!  4


வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!  5


காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா! 6

பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!  7


பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!  8


துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! 9


சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!  10


தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!  11


சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!  12 

வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!  13


வேத முடையதிந்த நாடு,-நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு;
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!  14


சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.  15


உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா!  16

மகாகவி பாரதி

புதிய ஆத்திசூடி

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்.
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய் 

ஊண்மிக விரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிக்கொள்
ஒற்றுமை வலிமையாம்.

ஓய்தல் ஒழி.
ஓளடதம் குறை.
கற்றது ஒழுகு.
காலம் அழியேல்.
கிளைபல தாங்கேல்.

கீழோர்க்கு அஞ்சேல்.
குன்றென நிமர்ந்து நில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்.

கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்.
கோல்கைக் கொண்டுவாழ்
கவ்வியதை விடேல்.
சரித்திரச் தேர்ச்சி கொள்

சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக்கு இளைத்திடேல்.
சூரரைப் போற்று

செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்.
சைகையில் பொருளுணர்.
சொல்வது தெளிந்து சொல்
சோதிடந் தளை யிகழ்.

சௌரியம் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று
ஞிமறென இன்புறு.
ஞெகிழ்வது அருளின்.

ஞேயம் காத்தல்செய்.
தன்மை இழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்று வாழ்.
தீயோர்க்கு அஞ்சேல்.

துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி.
தெய்வம் நீ என் றுணர்.
தேசத்தைக் காத்தல் செய்.
தையலை உணர்வு செய்.

தொன்மைக்கு அஞ்சேல்.
தோல்வியில் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினை செய்;

நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்.
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்.
நெற்றி சுருக்கிடேல்.

நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு.

பாட்டினில் அன்பு செய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி இழந்திடேல்.

பெரிதினும் பெரிது கேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
கொய்மை இகழ்.
போர்த் தொழில் பழகு.
மந்திரம் வலிமை.

மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங் கொடேல்.

மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல்.

யவனர்போல் முயற்சிகொள்.
யாரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில்.

ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொல்.
ரோதனம் தவிர்.

ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பியற்சி செய்.
லீலை இவ் வுலகு.
(உ)லுத்தரை இகழ்.

(உ)லோக நூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வான நூற் பயிற்சி கொள்.
விதையினைத் தெரிந்திடு.

வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமை செய்.
வையத் தலைமை கொள்.
வௌவுதல் நீக்கு. 


மகாகவி பாரதி

அக்கினிக் குஞ்சு

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.

மகாகவி பாரதி

வள்ளலார் பாடல்

அன்பெனும் பிடியுள் அகப்படும்மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புருவாம் பர சிவமே!
 

வள்ளலார் பாடல்

இறக்கவும் ஆசை இல்லை; இப்படிநான்
இருக்கவும் ஆசை இன்றி; இனிநான்
பிறக்கவும் ஆசை இலை; உலகெல்லாம்
பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள்
செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலை துயர்அடைந்து
தூங்கவும் ஆசைஒன் றிலையே.


வள்ளலார் பாடல்

மனம்எனும் ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
இருத்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.

 

வள்ளலார் பாடல்

அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவ  நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.

Friday, 24 February 2012

திருநள்ளாறு

"இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.

இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன. அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ??? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில்  சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.  இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.

மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது." 

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன். நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!

எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்... எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!! எப்படியா ??
அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு. நமக்கு மேலே ஒருவனடா....
ॐ..........சிவமயம்..........ॐ

Thursday, 23 February 2012

காஞ்சிப்பெரியவர்

பல ஆண்டுகளுக்கு முன் சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றிய ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி காஞ்சிப்பெரியவரை சந்தித்து ஆசி பெற விரும்பினார்.

தனக்கு கீழ் பணியாற்றுபவர்களிடம், காஞ்சிபுரத்துக்கு வருவதாகவும் பெரியவரைத் தரிசிக்க ஏற்பாடுகளைச் செய்யும்படியும் உத்தரவிட்டார். ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு பழம், பூ, பூஜைப்பொருட்களை ஊழியர்கள் மூலம் வாங்கச் சொல்லியிருந்தார். குறிப்பிட்ட நாளில், பூஜைப் பொருள் கூடைகளுடன் பெரியவர் முன் வந்தார்.

பெரியவர், சீடர்களை அழைத்து அவற்றை அங்கிருந்து அகற்றும்படி கூறினார். அதிகாரியிடம், "உங்களிடம் பணியாற்றும் இவர்களுக்கு ஏன் இவ்வளவு செலவு வைத்தீர்கள்? விருப்பத்துடன் இதை யாரும் செய்திருக்க மாட்டார்கள். உங்கள் வருமானத்தில், ஒருமுழம் பூ மட்டும் வாங்கி வந்தாலும் எனக்கு போதும். இதுவும் ஒருவகை லஞ்சம் தான். அரசு அதிகாரியான நீங்களே இதைச் செய்யலாமா?'' என்று புத்திமதி கூறி பிரசாதம் வழங்கினார். பெரியவரின் வாழ்வில் நடந்த இந்த சம்பவம் நமக்கு ஒரு பாடம்.

நான்கு நிலை வாழ்க்கை

பிரமச்சர்யம்
வேதங்களை ஓதுவது; வேதங்களை கற்பித்த ஆசார்யர்களுக்குப் பணிவிடை செய்வது; எவரிடமும் பாரபட்சமின்றி நடந்து கொள்வது; தன்னை பகைப்பவர்களுக்கும் நன்மை செய்வது; தியானம் செய்வது; தன்னுடைய கல்வியை மேன்மேலும் வளர்த்து கொள்வது – ஆகியவை பிரமச்சாரியின் கடமை.
கிரஹஸ்தாஸ்ரமம்
கொடுமையின்மை, நன்றியுணர்வு, பிதுர் கார்யங்களில் ஈடுபாடு, எல்லா வர்ணங்களைச் சார்ந்தவங்களுக்கும் உணவளிப்பது, விருந்தாளிகளைத் தெய்வம் எனக் கருதுவது, உரிய காலத்தில் மட்டும் மனைவியை அடைந்து சந்ததிகளைப் பெருக்குவது, தெய்வ காரியங்களைச் செய்வது – போன்றவை இல்லற நிலையின் தர்மமாகும்.
வானப்ரஸ்தம்
இல்லற தர்மத்தை முழுமையாக முடித்த பின், சடைமுடி தரிப்பதற்கான விதிகளைப் பின்பற்றுவது; முயற்சியினால் இந்திரியங்களை அடக்குவது, உள்ளத்தை தூய்மைப்படுத்துவது - ஆகியவற்றைச் செய்து கொண்டு, மனைவியுடனோ, மனைவியில்லாமலோ வனம் சென்று, அங்கு கிடைத்ததை உண்டு வாழும் தர்மம் வானப்ரஸ்தம்.
சந்யாசம்
வீட்டையும், சுற்றத்தையும் துறந்து, சுற்றித் திரியும்போது, கிடைத்த இடத்தில் படுத்து, தானமாகக் கிடைப்பதை உண்டு, இந்திரியங்களை அடக்கி, ஆசைகளையும், பற்றுக்களையும் அறுத்து, எல்லா ஜீவராசிகளையும் சமமாகப் பாவித்து, எதையும் விரும்பாமல், எதையும் வெருக்காமல் வாழும் நிலை சந்யாசம்.

உணவு உட்கொள்ளும் முறை


கிழக்குத் திசையைப் பார்த்து உணவு உட்கொள்வது ஆயுளைத் தரும், தெற்கு திசையைப் பார்த்து உணவு உட்கொள்வது புகழைத் தரும், மேற்கு திசையைப் பார்த்து உணவு உட்கொள்வது செல்வத்தைத் தரும், வடக்கு திசையைப் பார்த்து உணவு உட்கொள்வது நல்வினை பயனைத் தரும், சாப்பிடுவதற்கு முன் கை, கால் கழுவ வேண்டும். நின்று கொண்டோ, நடந்து கொண்டோ உணவு உட்கொள்ள கூடாது. உட்கார்ந்து தான் சாப்பிட வேண்டும். பந்தியில் அமரும்போது மற்றவர்களுக்கு முன்பாகப் புசிக்கக் கூடாது. வேண்டியவர்களுக்கும், விருந்தாளிகளுக்கும் உணவளிக்காமல் தான் உணவு உண்கிறவன், விஷத்தை உண்டவனாகிறான். ஆகாரத்தை முடித்த பிறகு தயிரைச் சாப்பிடக் கூடாது. 

நல்லொழுக்கங்கள்


நன்மை தரக் கூடிய குணங்கள் முப்பத்தாறு
  1. தெய்வங்களை வணங்க வேண்டும்.
  2. துவேசம் என்பதை விட்டொழிக்க வேண்டும்.
  3. சத்துள்ள ஆகாரத்தையே உண்ண வேண்டும்.
  4. தன்னடக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  5. காரணமில்லாத கோபத்தை தவிர்க்க வேண்டும்.
  6. தன்னுடைய முடிவுகளை பகிரங்கப்படுத்தக் கூடாது.
  7. கர்வத்தைத் தவிர்த்துப் பணிவுடன் இருக்க வேண்டும்.
  8. கொடுமை  செய்யாமல் செல்வத்தை ஈட்ட வேண்டும்.
  9. நம்பத் தகுந்தவர்களிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்.
  10. தன்னுடைய மனைவியை ஒழுங்காகக் காப்பாற்ற வேண்டும்.
  11. அறியாமையின் காரணமாகத் தவறாக யாரையும் தாக்கக் கூடாது.
  12. தன்னுடைய நண்பர்களிடம் விரோதமாக நடந்து கொள்ளக் கூடாது.
  13. எந்த நேரத்திலும் மக்களின்பால் அன்பை கைவிட்டு விடக் கூடாது.
  14. பெருமளவில் பெண்களோடு உறவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
  15. தீய நடத்தை உடையவர்களை எந்த வேலையிலும் அமர்த்தக் கூடாது.
  16. தீர விசாரிக்காமல் யாருக்கும் எந்த தண்டனையும் கொடுக்கக் கூடாது.
  17. தீயவர்களை விளக்கி, நல்ல உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  18. மற்றவர்களைத் துன்புறுத்தாத வகையில் அதிகாரம் செலுத்த வேண்டும்.
  19. தன்னிடம் விசுவாசம் இல்லாதவர்களை ஒற்றர்களாக நியமிக்கக் கூடாது.
  20. தனக்கு தீமை செய்தவர்கள் மேல் என்றுமே நம்பிக்கை வைக்கக் கூடாது.
  21. குரோதமும், ஆத்திரமுமின்றி தன்னுடைய கடமைகளை செய்ய வேண்டும்.
  22. ஹிம்சை செய்வதன் முலம், தன்னுடைய இலட்சியத்தை அடையக் கூடாது.
  23. தீய நோக்கம் உடையவர்கள் எதிரே எந்த ஆலோசனையையும் செய்யக் கூடாது.
  24. உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் – ஆனால் தீமை செய்தவர்களிடம் அல்ல.
  25. இன்பங்களை அனுபவிக்கும்போது அவற்றில் பெரும் பற்றுக் கொண்டு விடக்கூடாது.
  26. பெருமையடித்துக் கொள்ளாத தைரியமும், எப்பொழுதும் இன் சொல் பேச வேண்டும்.
  27. பெரியோர்களிடமும், நல்லவர்களிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
  28. பேராசை உடையவர்களை விலக்கி, மற்றவர்களுக்கு தர்மங்களைச் செய்ய வேண்டும்.
  29. சாமர்த்தியத்தைக் காட்டுவதற்க்குக் கூட, நல்ல நேரத்திற்க்காகக் காத்திருக்க வேண்டும் .
  30. கெட்ட பெயர் வராத வகையில் செல்வத்தை அடைவதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.
  31. சரியான காரணத்தோடு எதிரியை வீழ்த்தினால், அதன் பிறகு அதை நினைத்து வருந்தக் கூடாது.
  32. தன்னுடைய சிறப்புகளைப் பற்றி பேசாமல், மற்றவர்களுடைய மேன்மைகளைப் பற்றியே பேச வேண்டும்.
  33. எல்லோரிடத்திலும் எல்லா நேரத்திலும் தயை, அதே நேரத்தில் தூய்மையான மனதுடன் இருக்க வேண்டும்.
  34. மற்றவர்களிடமிருந்து அபராதத் தொகைகளைப் பெரும்போது, நல்லவர்களைத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும்.
  35. தன்னால் எவன் ஒருவனுக்கு நன்மை செய்யப்பட்டதோ அவன், தன்னை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  36. வெறும் வார்த்தைகளால் மற்றவர்களைத் திருப்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து, காரியம் மூலமாக மற்றவர்களைத் திருப்தி செய்ய வேண்டும்.

மனிதன் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள்
  1. தானம் செய்ய வேண்டும்.
  2. பிறர் குற்றத்தைப் பேசக் கூடாது.
  3. ஈரமான காலுடன் படுக்க கூடாது.
  4. தினந்தோறும் நல்லவற்றை படிக்க வேண்டும்.
  5. சூரியன் உதயமான பின் யாரும் படுத்திருக்கலாகாது.
  6. உடலில் எந்தவிதமான ஆடையுமின்றி குளிக்கக் கூடாது.
  7. வடக்கிலும், மேற்கிலும் தலை வைத்துப் படுக்கக் கூடாது.
  8. வயல்களிலும், போகிற வழிகளிலும் மலஜலம் கழிக்கக் கூடாது.
  9. கோபம், பொறாமை ஆகியவற்றை மனிதன் விட்டுவிட வேண்டும்.
  10. அழுக்கடைந்த கண்ணாடியில் தன் முகத்தை மனிதன் பார்க்கக் கூடாது.
  11. உட்காருகிற ஆசனத்தைக் காலால் இழுத்து அதன் மீது உட்காரக் கூடாது.
  12. பிறன் மனைவியுடன் தனிமையில் ஒரே ஆசனத்தில் கூட அமரக் கூடாது.
  13. இரவில் இரண்டு தெருக்களோ, நான்கு தெருக்களோ சந்திக்கும் இடங்களில் நிற்கக் கூடாது.
  14. பிறரைத் திட்டுவது, குறைசொல்வது, கோள் சொல்வது ஆகியவற்றை விட்டுவிட வேண்டும்.
  15. சரீரத்தில் சுத்தமில்லாத போது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பார்க்கக் கூடாது.
  16. தன்னுடைய ஒரு காலை மற்றொரு காலினால் மிதிக்கக் கூடாது. அது மிகவும் கெட்ட பழக்கம்.
  17. ஓடுகளை உடைப்பது, நகத்தைக் கடிப்பது போன்றவை அசுத்தமான வழக்கங்கள். அவற்றை விட்டுவிட வேண்டும்.
  18. பொழுது விடிவதற்கு முன்பாக மனிதன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, தர்ம நியாயங்களைப் பற்றி நினைக்க வேண்டும்.
  19. பிறன் மனைவியை நாடக் கூடாது. அதைப் போல் ஆயுளைக் குறைத்து, பாவத்தைக் கூட்டும் காரியம் வேறு எதுவும் இல்லை,
  20. அடிப்பது என்பது திருத்துவதற்காக மட்டுமே வழக்கில் வந்தது, ஆகையால் தன் மகன் அல்லது சிஷ்யன் ஆகியோரைத் தவிர, வேறு எவரிடமும் அதைப் பயன்படுத்தக் கூடாது.
  21. சுற்றத்தான், நண்பன், கணவனில்லாத சகோதரி, குரு, பண்டிதன், வயது முதிர்ந்தவன் – ஆகியோர் ஏழைகளாக இருந்தால், அவர்களைத் தன்னால் இயன்ற வரையில் காப்பாற்ற வேண்டும்.
  22. கை கூப்பி நின்று சூரியன் உதயமாகும் போதே அவனை பூஜிக்க வேண்டும். உச்சி சூரியனையும், கிரஹணம் பிடித்த சூரியனையும், நீரில் தெரியும் சூரியனின் பிம்பத்தையும் பார்க்கக் கூடாது.
  23. தாய், தந்தை, குரு ஆகியோர் கட்டளை இடும்போது அது நல்ல காரியமா, கெட்ட காரியமா என்று ஆராய்ந்து அறியும் உரிமை மனிதனுக்கு கிடையாது. அக்கட்டளையை நிறைவேற்ற வேண்டும்.
  24. எதைக் கூறினால் மற்றொருவன் மனம் புண்படுமோ அதைக் கூறக் கூடாது. தீயினால் சுட்ட புண் ஆறும், வார்த்தையினால் ஏற்படுத்தப்பட்ட புண் ஆறுவதில்லை. ஆகையால் யாரையும் புண் படுத்திப் பேசக் கூடாது.
  25. தெருவில் செல்லும் போது, பிராமணன், பசு, அரசன், வயோதிகன், கர்ப்பிணிப் பெண், சுமையைத் தூக்கிச் செல்பவன், உடல் நலிந்தவன் ஆகியோர் எதிர்ப்பட்டால் அவர்களுக்கு வழி விட்டு, அதன் பின் நாம் நடக்க வேண்டும்.
  26. தன்னுடைய பிறந்த நட்சத்திரம், தன்னுடைய பிறந்த நட்சத்திரத்திலிருந்து ஐந்தாவது நாள், பூரட்டாதி, உத்திரட்டாதி, கிருத்திகை ஆகிய நட்சத்திரங்களிலும், அஷ்டமி, சதுர்தசி, அம்மாவாசை ஆகிய நாட்களிலும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக் கூடாது.
  27. மனைவிக்கு மாதவிலக்கு முடிந்த நான்காவது தினம் வரை அவளுடன் கணவன் சேரக்கூடாது; ஐந்தாவது நாள் சேர்ந்தால் பெண் குழந்தை பிறக்கும். ஆறாவது நாள் இனைந்தால் ஆண் குழந்தை பிறக்கும். மாதவிலக்கு முடிந்து பதினாறாவது நாள் வரை கர்ப்பமுண்டாவதற்கான காலம் என்று கூறப்படுகிறது.
  28. புகழ், ஆயுள், செல்வம் எல்லாவற்றையும் கொடுப்பது நல்ல ஆசாரமே!.  நல்ல ஆசாரங்களிலிருந்து நழுவாதவன் நல்லுலகங்களை அடைவான்.