கிழக்குத்
திசையைப் பார்த்து உணவு உட்கொள்வது ஆயுளைத் தரும், தெற்கு திசையைப் பார்த்து உணவு
உட்கொள்வது புகழைத் தரும், மேற்கு திசையைப் பார்த்து உணவு உட்கொள்வது செல்வத்தைத்
தரும், வடக்கு திசையைப் பார்த்து உணவு உட்கொள்வது நல்வினை பயனைத் தரும், சாப்பிடுவதற்கு
முன் கை, கால் கழுவ வேண்டும். நின்று கொண்டோ, நடந்து கொண்டோ உணவு உட்கொள்ள கூடாது.
உட்கார்ந்து தான் சாப்பிட வேண்டும். பந்தியில் அமரும்போது மற்றவர்களுக்கு
முன்பாகப் புசிக்கக் கூடாது. வேண்டியவர்களுக்கும், விருந்தாளிகளுக்கும் உணவளிக்காமல்
தான் உணவு உண்கிறவன், விஷத்தை உண்டவனாகிறான். ஆகாரத்தை முடித்த பிறகு தயிரைச்
சாப்பிடக் கூடாது.
No comments:
Post a Comment