பல
ஆண்டுகளுக்கு முன் சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறையில்
பணியாற்றிய ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி காஞ்சிப்பெரியவரை சந்தித்து ஆசி பெற
விரும்பினார்.
தனக்கு கீழ் பணியாற்றுபவர்களிடம், காஞ்சிபுரத்துக்கு வருவதாகவும் பெரியவரைத் தரிசிக்க ஏற்பாடுகளைச் செய்யும்படியும் உத்தரவிட்டார். ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு பழம், பூ, பூஜைப்பொருட்களை ஊழியர்கள் மூலம் வாங்கச் சொல்லியிருந்தார். குறிப்பிட்ட நாளில், பூஜைப் பொருள் கூடைகளுடன் பெரியவர் முன் வந்தார்.
பெரியவர், சீடர்களை அழைத்து அவற்றை அங்கிருந்து அகற்றும்படி கூறினார். அதிகாரியிடம், "உங்களிடம் பணியாற்றும் இவர்களுக்கு ஏன் இவ்வளவு செலவு வைத்தீர்கள்? விருப்பத்துடன் இதை யாரும் செய்திருக்க மாட்டார்கள். உங்கள் வருமானத்தில், ஒருமுழம் பூ மட்டும் வாங்கி வந்தாலும் எனக்கு போதும். இதுவும் ஒருவகை லஞ்சம் தான். அரசு அதிகாரியான நீங்களே இதைச் செய்யலாமா?'' என்று புத்திமதி கூறி பிரசாதம் வழங்கினார். பெரியவரின் வாழ்வில் நடந்த இந்த சம்பவம் நமக்கு ஒரு பாடம்.
No comments:
Post a Comment