Thursday 23 February 2012

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்


ஆசையின் காரணமாக உண்டாகிற தீமைகள் பத்து
  1. குடி
  2. கூத்தாடுவது
  3. வேட்டையாடுதல்
  4. பகலில் உறங்குவது
  5. பிறரை அவமதிப்பது
  6. மனக் குழப்பமடைவது
  7. பெண்ணிடம் மயக்கம் கொள்வது
  8. அர்த்தமில்லாத பாட்டுக்களைப் பாடுவது
  9. சொக்கட்டான் விளையாட்டில் ஈடுபடுதல்
  10. காரணமில்லாமல் வாத்தியங்கள் வாசிப்பது
 கோபத்தினால் உண்டாகிற தீமைகள் எட்டு
  1. கடுஞ்சொற்கள் பேசுவது
  2. பிறருடைய பொருளை அபகரிப்பது
  3. குற்றமில்லாதவனைத் தன்டிப்பது
  4. பிறர் புகழைக் கண்டு பொறாமை கொள்வது
  5. தவறில்லாமல் இருக்கும்போதே குற்றம் காண்பது
  6. நேர்மையில்லாமல் நடந்து கொன்டு கொலை செய்வது
  7. நியாயமில்லாமல் கொடுமையான தண்டனை அளிப்பது
  8. பிறருடைய நல்ல குணங்களைக் குறைகளாகக் கூறுவது
  9. இந்த பதினெட்டிலும் கூட, ஆசையினால் உண்டாகிற தீமைகளில் குடி பழக்கம், சொக்கட்டான் விளையாட்டு, பெண்ணிடம் ஏற்படுகிற மயக்கம், வேட்டை ஆகிய நான்கும் பெரும் தீமைகளாகக் குறிப்பிடப்படுகின்றன. கோபத்தினால் உண்டாகிற தீமைகளில் - பிறர் பொருளை அபகரிப்பது, கடுஞ்சொற்கள் பேசுவது, நியாயமின்றி மிகவும் கொடுமையான தண்டனை அளிப்பது ஆகிய மூன்றும் பெரும் குற்றங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இவை மனு தர்மத்திலும் கூறப்பட்டிருக்கின்றன.
கவனமாக இருக்க வேண்டிய பதினைந்து விஷயங்கள்

ஐந்து விஷயங்களினால் உண்டாகக் கூடிய விரோதங்கள்

1. பெண் 2. சொல் 3. குற்றம் 4. பொருள் 5. பகைவன்

பத்து விஷயங்களினால் உண்டாகக் கூடிய ஆபத்து

1. அநீதி 2. பொய் 3. அச்சம் 4. கோபம் 5. மடமை 6. தயக்கம் 7. சோம்பல் 8. அவமதிப்பு 9. பொறாமை 10. எச்சரிக்கையின்மை

மூன்று வகையான மனிதர்கள்
  1. வரும் முன் காப்போன்
  2. வந்த பின் காப்போன்
  3. மந்த புத்தி உள்ளவன் 
 மீதமில்லாமல் அழிக்க வேண்டியவை மூன்று

1. கடன் 2. பகை 3. நெருப்பு 

விலங்குகளிடமிருந்து கற்க வேண்டிய குணம்
  1. கழுகைப் போல பார்வை
  2. சிங்கம் போன்ற பராக்கிரமம்
  3. கொக்கைப் போல பொறுமை
  4. நாயைப் போல எச்சரிக்கை உணர்வு
  5. பாம்பு போல் நெருங்குவது தெரியாமலே பகைவனை நெருங்கும் தன்மை

No comments:

Post a Comment