Monday 11 June 2012

மன நல விடுதி

ஒரு மன நல விடுதியை பார்வையிட சென்றார் ஒரு மன நல நிபுணர். மன நல விடுதியின் பொறுப்பாளர் அவரை சுற்றி பார்க்க அழைத்து சென்றார். அவரது கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவன் தனது அறையில் கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தான். 
 
சுவரின் மேல் ஒரு சாதாரண பெண்ணின் படம் இருந்தது. அவன் அதன் முன்னால் கைகளை கூப்பிய வண்ணம் கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தான். மனநல நிபுணர் இந்த மனிதனுக்கு என்னவாயிற்று? என்று கேட்டார். பொறுப்பாளர், அவனை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி, அவரை சற்று தொலைவில் அழைத்து சென்று, அவனை பிரார்த்தனையிலிருந்து யாரும் தொந்தரவு செய்வதை அவன் விரும்பவில்லை. முழு நாளும் அவன் பிரார்த்தனை செய்த வண்ணம் இருக்கிறான் என்றார்.

அந்த படம் யாருடையது? என்று நிபுணர் கேட்டார். பொறுப்பாளர் சிரிக்க தொடங்கினார். அது யாருமில்லை ஒரு சாதாரண பெண். அவன் அவளை காதலித்தான். ஆனால் இருவரும் வேறு வேறு சாதிகளை சார்ந்திருந்தபடியால் அந்த பெண்ணின் தந்தை மறுத்து விட்டார். இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அந்த பெண் ஒரு தெய்வமாகி விட்டாள். கிடைக்க முடியாமற் போனதால் ஒரு சாதாரண பெண் தெய்வமாகி விட்டாள். இப்போது அவன் இந்த பிறவியில் நடக்காத ஒன்று பிரார்த்தனையின் மூலம் அடுத்த பிறவியிலாவது நடக்கும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான்.

இந்த மாதிரி ஒரு கேஸை நான் பார்த்ததேயில்லை என்றார் நிபுணர். அடுத்த அறையில் மற்றொரு மனிதன் தனது தலையை சுவரில் மோதி கொண்டிருந்தான். அவனை இரண்டு காவலாளிகள் பிடித்து கொண்டிருந்தனர்.

இவனுக்கு என்னவாயிற்று? ஏன் இவன் தனது தலையை சுவரில் மோதி கொள்கிறான்? என்றார் மன நல நிபுணர். இவன்தான் அந்த பெண்ணை திருமணம் செய்தவன் என்றார் விடுதி பொறுப்பாளர்.
 

No comments:

Post a Comment