Monday 11 June 2012

அரதாச்சாரிய சுவாமிகள்

தினந்தோறும் சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து விட்டு அதன் பின்பு உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அரதாச்சாரிய சுவாமிகள். ஒருநாள் வழக்கம்போல சிவ பூஜை செய்துக் கொண்டிருக்கும் போது தாகத்தால் வாடிய நாய் ஒன்று அங்கு வந்தது. அதன் நிலையை உணர்ந்தார் அவர். அபிஷேக நீரை எடுத்து நாயின் முன் வைத்தார். அந்த நாய் அபிஷேக நீரைக் குடித்துவிட்டு அங்கிருந்து சென்றது. இதைக் கண்ட எல்லோரும் திகைத்தனர். அங்கிருந்த ஒருவர், இறைவனுக்குரிய அபிஷேக நீரை நாய்க்குக் குடிக்கக் கொடுத்தீர்களே... இது தகுமா ? என்று கேட்டார். அதற்கு சுவாமிகள், சிவபெருமானே நாய் வடிவில் வந்தால் நான் என்ன செய்ய முடியும் ? என்று கேட்க, சகல உயிர்களிடமும் சிவனைக்காணும் அவரது பக்தியை உணர்ந்து யாவரும் வியந்தனர்.

No comments:

Post a Comment