Saturday 26 May 2012

இயற்கை தரும் பரிசு - இளநீர்:


தாகத்தைத் தணிக்கும் பானம் மட்டுமல்ல தாதுபொருட்கள் அடங்கிய பல நோய்களைத் தீர்க்கும் தன்மையும் கொண்டது.

மனித உடலில் அதிக அளவு நீர்ச்சத்து விரயமானால் அவற்றைச் சரி செய்ய எளிதில் குறைந்த செலவில் கிடைப்பது இளநீர் மட்டுமே. இளநீரில் உள்ள புரதச்சத்து பசும்பாலில் உள்ளதைவிட அதிகமாகும்.

இளநீர் தரும் சத்தின் அளவு 17.4 கலோரி ஆகும். ஆகையால் சிறந்த மருத்துவ குணம் கொண்ட இளநீர் மனித உடல்நலத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இளநீரில் காணப்படும் முக்கிய சத்து சர்க்கரை சத்தாகும். இளநீரில் 5.5 விழுக்காடு சர்க்கரை சத்து அளவு உள்ளது. மற்றும் தாதுப்பொருட்களான பொட்டாசியம், சோடியம், கால்சியம், இரும்பு, செம்பு, கந்தகம், மெக்னீசீயம் போன்ற தாது உப்புக்கள் அடங்கியுள்ளன.

இளநீரில் ஊட்டச்சத்துக்கள்:
 
இளங்காய்களில் நீர்;: ஈரப்பதம்: 95.01, புரதம்: 0.13, கொழுப்பு: 0.12 மாவுப்பொருள்: 4.11, சாம்பல்: 0.63.

இளநீரின் பயன்கள்:

இளநீர் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.

இளநீர் முதியோர்களுக்கும். நோயாளிக்கும் சிறந்த ஊட்டச் சத்து பானமாகும்.

இளநீர் சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

இளநீரை உடலில் பூசிக்கொண்டால் தட்டம்மை, சின்னம்மை., பெரியம்மை, ஆகியவைகளால் ஏற்படும் உடல் அரிப்பைத் தடுக்கலாம்.

இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்ற உதவுகிறது.

உடலில் ஏற்படும் நீர் இழப்பை சரி செய்வதற்கு இளநீரை பருகுவது நல்லது.

இளநீரில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழவழப்புத் தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானமாக விளங்குகிறது.

இளநீர் ஊட்டசத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

புகையிலை மற்றும் மது போன்றவைகளினால் ஏற்படும் தீய விளைவுகளை நீக்கக்கூடிய நச்சு முறிவாக செயல்படுகிறது.

மனித குலத்திற்கு இயற்கை தந்துள்ள சத்தான இன்சுவை பானம் இளநீர் மட்டும்தான். மற்ற பானங்களுடன் ஒப்பிடுகையில் இளநீர் மட்டுமே அதிகமான பயன்களைத் தருகிறது.

இளநீர் மிகக் குறைந்த செலவில் அதிகப் பயன்களைத் தரவல்லது. எனவே தாகத்தைத் தணிக்க உடல்நலம் காக்க தினமும் ஒரு இளநீர் குடிப்போம் என்றும் நலமாய் இருப்போம்.
 

No comments:

Post a Comment