Wednesday, 28 November 2012

Ten things you need to know about organic food

There are several reasons that people are going organic and one of the first is the loss of trust on manufactured substances.

Most of the products found in supermarkets are packaged and promise content that is healthy, the truth being very different. So,organic food turns out to be a boon for people who prefer healthy eating. Read on to know more:

1. No Chemicals
First, let’s define organic. Organic food, as the name suggests, is produced with the use of natural fertilizers. In most of the products that tend to be 100% organic, the use of chemical fertilizers and pesticides is nil. In some others, it is brought down to a minimal level.

2. Saving Water
Organic foods promote the use of natural farming procedures. These eliminate the chances of water pollution because of harmful chemicals, thereby saving water.

3. Balancing the Ecosystem
Organic farming supports biodiversity in all its forms. The flora and fauna get a major boost in areas where organic farming is practiced. A lot of natural habitats like wetlands have been restored because of organic farming.

4. Going Healthy
Organic, farm-fresh vegetables and fruits retain healthy nutrients. It has been found that a fresh picked fruit from an organic farm is richer in minerals and vitamins as compared to any other produce in the market.

5. Developing the Soil
The process of crop rotation and different forms of farming help the soil build its nutrients naturally. This also helps in holding the soil and reduces erosion.

6. The Taste
Any organic produce tastes better than a product of intensive farming. The reason behind this is that the farming is done in a natural surrounding with no artificial substances used for growth or flavour enhancement.

7. Supporting Farmers
A fact less widely known is that organic farming is less stressful for farmers. If taken up on a large scale, organic farming can curb major health hazards on a rather large scale.

8. Community Building
The farmers’ community in rural areas and on organic farms helps build healthy community practices. This also supports knowledge sharing about agriculture.

9. Just Dairy
The organic dairy products do not contain passed-on antibiotics used on animals and poultry.

10. Affordable

Contrary to the belief that organic products put a dent in the pocket, they are affordable products to use. However, paying a little extra for one’s health should be an acceptable thing to do. The facts shared above about organic foods are now universally acknowledged. People are gradually realizing the importance and health benefits of such food. Learn more and get wiser about your eating habits too!


Thanks to Mumbai yahoo group

Sunday, 18 November 2012

கால்நடை செல்வங்களின் கடைசி பயணம்

நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு மிக முக்கியமான விஷயம். நம் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கேரளாவிற்கு பசு மாடுகள், பசு கன்று குட்டிகள், எருமைகள், கோழிகள் மற்றும் ஆடுகள் கடத்தப்படுவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இது இப்படியே போனால் நம் எதிர்கால சந்ததியினர் பாலுக்கு பதிலாக பவுடர் பாலைத்தான் குடிக்க வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல விவசாயத்திற்கு பயன்படும் சாணம் கூட இறக்குமதி செய்யும் நிலை ஏற்படலாம். இப்போது நாம் சிந்திக்கா விட்டால், இப்படி பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

நான் என்ன செய்ய முடியும் என்று கேட்கும் நல்ல உள்ளங்களுக்காக இங்கே ஒரு வேண்டுகோள். தயவு செய்து தங்கள் நண்பர்களிடம் இது பற்றி பேசவும். மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவும். தங்கள் ஊரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று ஒரு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தவும். இது ஒரு யோசனையே தவிர இதுவே முடிவல்ல. தங்கள் வசதிக்கு தகுந்த மாதிரி மாற்றி அமைத்து கொள்ளலாம். அது சரி என்ன பேசுவது. இதோ உங்களுக்காக ஒரு வீடியோ. இந்த வீடியோவில் பல உண்மைகள் உள்ளன. தயவு செய்து இந்த வீடியோவை பார்க்கவும். அதுவே தாங்கள் பரப்ப வேண்டிய செய்தி.

தங்களுடைய நண்பர்களுக்கு இந்த
கருத்துக்களை மினஞ்சல் மூலமாக அனுப்பவும். நீங்கள் இந்த கருத்துக்கு நிச்சயமாக பதில் தருவீர்கள் என எதிர்பார்கிறேன்.

நன்றி! நன்றி!! நன்றி!!!

வீடியோவின் இணைப்பு கீழே தரப்பட்டுளன:


www.youtube.com/watch?v=o8-Hi2N8FcE _ English

http://www.youtube.com/watch?v=eGHfPQGbUlc&feature=youtu.be - Tamil

Thursday, 8 November 2012

Important Tamil books










Deiva Vaaku
Deiva Vaakku Bagam 2










































Monday, 8 October 2012

யோகாசனப்பிரியர்களுக்கு ஒரு மடல்!

நீங்கள் யோகா கற்க விருப்பம் உள்ளவரா? உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனையா? யோகா கற்க உங்களுக்கு யாரேனும் அறிவுரை கூறினார்களா? அல்லது தற்போது நீங்கள் யோகா கற்று கொண்டு இருக்கிரீர்களா?
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழ மொழி ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான சூழலில் ஏற்பட்டுள்ள ஏராளமான பிரச்சனைகளால் நோயற்ற மனிதனைப் பார்ப்பது அரிதாகி விட்டது. காலையில் எழுந்தது முதல் இரவு வரை நம் வாழ்கை முறை மாறி, உடல் உழைப்பு குறைந்ததனால் உடலின் பலம், நோய் எதிர்ப்பு திறன் ஆகியவை குறைந்ததுடன் ஆயுளும் சுருங்கி விட்டது. விஞ்ஞானம், நாகரீகம் வளர்ந்து உள்ளது ஆனால் மனிதனின் வாழ்க்கைத் தரம் குறைந்து விட்டது. போட்டி, பொறாமைகளினால் நமது வாழ்க்கை சீரழிந்துவிட்டது. அதற்கு தீர்வு யோகம் கற்று வாழ்க்கையை மேம்படுத்துவதே.
ஆனால் இன்று எத்தனை யோகா ஆசிரியர்கள் திறமையானவர்களாக உள்ளனர் என்றால் அது கேள்விக்குறி! இன்றைய காலகட்டத்தில் யோகா என்பது பொருளீட்டும் ஒரு வேலையாக உள்ளதே தவிர உண்மையாக, திறமையோடு மற்றும் சமுதாய நோக்கத்தோடு யோகா கற்றுத்தருபவர்கள் மிகச்சிலரே. யோகா ஆசிரியர்களின் உண்மையான நிலையை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.
நம் நாட்டில் வாழ்ந்த ரிஷிகள் நமக்கு கொடுத்த விஷயங்கள் ஏராளம். அவை அனைத்தும் மனிதனுக்கு ஓர் நன்கொடை. மனிதர்களாகிய நாம் அந்த பரம்பொருளை உணர ஒரு படிக்கட்டு. அவற்றினுள் யோகம் முதலிடம் வகிப்பதோடு மட்டுமல்லாமல் இன்றய தேவையும் கூட. யோகத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் பதஞ்சலி முனிவரும், திருமூலரும் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றனர். யோகத்தில் பல வகைகள் உள்ளன. உதாரணம் ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம், இராஜ யோகம், அஷ்டாங்க யோகம், ஹட யோகம், குண்டலினி யோகம் இன்னும் பல உள்ளன.
யோகம் என்ற சொல் யுஜ் என்ற வேர் சொல்லிலிருந்து வந்தது. யுஜ் என்றால் இணைதல் என்று பொருள். அதாவது ஜீவாத்மாவும் பரமாத்வாவும் இணைய வேண்டும் என்பது நோக்கம். ஆனால் இன்று பெரும்பாலானவர்கள் யோகா பயில்கிறேன் என்று ஆசனத்தை பயிற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் யோகா பயில்வதின் நோக்கம் என்ன? பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சூத்திரத்தில் அத்யாயம் இரண்டு ஸ்லோகம் இருபத்தி ஒன்பதில் அஷ்டாங்க யோகத்தை பற்றி விளக்குகிறது. அஷ்டாங்க (அஷ்ட + அங்க) என்பது எட்டு வகையான அங்கங்கள் என எளிமையாகக் கூறலாம்.
அவை முறையே:
இயமம்           : தவிர்க்கப்பட வேண்டியவை
நியமம்            : பின்பற்றப்பட வேண்டியவை
ஆசனம்           : இருக்கை (உடலை வளைத்து செய்யக்கூடிய பயிற்சி)
பிராணாயாமம்     : மூச்சுப் பயிற்சி
பிரத்தியாகாரம்     : மனதை புலன் வழி நாட்டத்திலிருந்து திருப்புதல்
தாரணை          : மனதை ஒருமுகப்படுத்துதல்
தியானம்          : மனதை ஒரே சிந்தனையில் நிலைநிறுத்துதல்
சமாதி             : ஆழ் நிலை தியானம்
இவற்றில் முதல் ஐந்தும் உடலும், மனமும் சம்பந்தப்பட்டவை எனவே இதை பகிரங்க யோகம் எனவும், அடுத்த மூன்றும் மனமும், ஞானமும் சம்பந்தப்பட்டவை எனவே அதை அந்தரங்க யோகம் எனவும் கூறப்படுகிறது. அஷ்டாங்க யோகத்தின் கடைசி நிலை சமாதி. எவர் ஒருவருக்கு சமாதி கைகூடுதோ அவருக்கு அஷ்ட சித்தி கிடைக்கும். சமாதி நிலையை அடைந்தவர் சித்தராகிறார். இந்த எட்டு நிலைகளையும் படிப்படியாக கற்று முக்தி அடைய வேண்டும் என்பது நம் முன்னோர்களின் கூற்று. அதுவே யோகத்தின் தாத்பரியம்.
அஷ்டாங்க யோகத்தின் மூன்றாவது நிலை ஆசனம். ஆசனம் என்பது உடலை வளைத்து செய்யக் கூடிய பயிற்சி. சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும் என்பது பல மொழி, அது போல உடம்பு இல்லாமல் எந்த செயலையும் செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மை, எனவே இன்றைய காலகட்டத்தில் உடலினை பேணி பாதுகாப்பது என்பது அவசியமானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. ஆனால் இன்றைய பெரும்பாலான யோகா ஆசிரியர்கள் அவர்களுக்கு தெரிந்த இருபது முப்பது ஆசனங்களை வைத்துக்கொண்டு யோகா கற்று தருகிறேன் என்று ஆசனம் மற்றும் பிராணாயாமம் மட்டுமே கற்று கொடுக்கின்றனர். ஆசனம் மற்றும் பிராணாயாமம் யோகத்தின் ஒரு பகுதியே தவிர அதுவே முழுமையான யோகம் ஆகாது. உண்மையில் அவர்களுக்கு உடற்கூறியல் மற்றும் உடலிங்கியல் எவ்வாறு வேலை செய்கிறது என்பது தெரியுமா என்றால் சந்தேகம். எந்த நோய்க்கு என்ன ஆசனம் பயில வேண்டும் என்றால் தெரியாது. எந்த நோய்க்கு என்ன ஆசனம் பயிற்சி செய்ய கூடாது என்பதுவும் தெரியாது. இவர்கள் யோகா ஆசிரியர்கள். இவர்களிடம் தான் நாம் யோகாசனம் பயில்கிறோம்.
புத்தகத்தை படித்தோ அல்லது முறையற்ற ஆசிரியர்களிடமோ யோகா கற்க கூடாது. ஏன்? நம் உடல் மிகவும் நுட்பமான பல பாகங்களை கொண்டது. அதை மிகவும் கவனமாக கையாள வேண்டும். யோகா கற்கிறேன் என்று நம் உடலை நாமே கெடுத்துக் கொள்ளக்கூடாது. அதிலும் குறிப்பாக வியாதி உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உதாரணமாக சர்கரை வியாதி உள்ளவர்களுக்கு அதனோடு சேர்ந்து இரத்த அழுத்த நோயோ அல்லது உடற்பருமன் போன்ற ஏதேனும் ஒன்று கூடவே இருக்கும். யோகா சிகிச்சை (தெரபி) தெரியாதவர்கள் சர்கரை வியாதிக்கு ஆசனம் கற்று தருவார்கள். அதில் சில ஆசனங்கள் இரத்த அழுத்த நோய்க்கு உகந்ததாக இருக்காது. அதனுடைய விளைவு சர்கரை வியாதி குறைந்து இரத்த அழுத்த நோய் அதிகமாகிவிடும். சரியான முறையில் யோகா சிகிச்சை கற்று தரும் நிறுவனங்கள் மிகவும் குறைவு. தற்போது நீங்கள் யோகா கற்று கொண்டு இருக்கிறீர்களா தயவு செய்து உங்களுடைய ஆசிரியரின் அனுபவ ஞானத்தை சரிபார்க்கவும்.
இன்றைய கால கட்டத்தில் கல்வி என்பது வியாபாரமாகிவிட்டது. பல கல்வி நிறுவனங்கள் யோகாவை ஒரு பாட திட்டமாக வைத்துள்ளது. அது எந்த அளவுக்கு தரமானதாக இருக்கிறது என்றால் மிகவும் கவலை அளிக்கிறது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் பணத்துக்காக பல வகையான படிப்புகளை அறிமுகப்படுத்துகின்றன அதில் யோகா பிரபலமடைந்து வருகிறது. அவர்களிடம் முறையான பாட திட்டமும் இல்லை, அனுபவம் மிக்க ஆசிரியர்களும் ல்லை. முறையற்ற கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் யோகா வகுப்பு எடுப்பதால் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றன. இது வரைக்கும் பெரிய அளவில் பிரபலமான பிரச்சனை வரவில்லை என்றாலும் சிறிய அளவில் ஆங்காங்கே சில பிரச்சனை உருவெடுக்கிறது. அதை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும்.
நமது முன்னோர்கள் உலகிற்கு கொடுத்த மிகச்சிறந்த கொடை யோகா. அதனை பாதுகாப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். அனைத்து யோகா ஆசிரியர்களும், எந்த நோய்க்கு என்ன ஆசனம் பயிற்சி செய்ய வேண்டும், எந்த நோய்க்கு என்ன ஆசனம் பயிற்சி செய்ய கூடாது என்பதுவும் மிக நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். யோகா ஆசிரியர்கள் அனைவரும் முறையான கல்வி நிறுவனங்களில் பயிற்சி எடுத்து பணத்துக்காக அல்லாமல் வேலையையே சேவையாக செய்ய முன் வரவேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டாம் என்பது நோக்கம் அல்ல. பணமும் சம்பாதியுங்கள் சேவையும் செய்யுங்கள் என்பது என் வேண்டுகோள். அரசாங்கமும், முன்னணி கல்வி நிறுவனங்களும் தரமான யோகா பாடதிட்டத்தை கொண்டு வர முன்வர வேண்டும். மத்திய அரசாங்கம் ஒரு குழு அமைத்து யோகா பாடதிட்டம் சரியாக உள்ளதா என சரி பார்த்து அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தரச்சான்றிதல் அளிக்க முன்வர வேண்டும். மக்களும் முறையான, தரமான குருவிடம் பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும்.

Monday, 18 June 2012

The truth of Satyamev Jayate

Beware!

The truth of Satyamev Jayate

Since last few days we have seen viral effect across the nation for a television show hosted by Bollywood Star Amir Khan named "Satyamev Jayate" and these days ... I've come across a large number of people discussing and praising the show and also some of them were considering making donations and sending SMSs to the show in public interest, my purpose for writing this post is to let those people know that how and where their donations and revenue generated by SMSs will be used.The foundation where your donations and income via SMSs will go is called "Humanity Trust" and this is the website of this trust:http://www.humanitytrust.com/


 Executive Committee:
 
1. Mr. Jagabar Ali. 

2. Mr. R. Hakkim Ali. 
3. Mr. Fazulutheen.

Members of the Board of Advisors are as follow:

 
1. Mr. M.L. Raja Mohamed  

2. Mr. M.S. NASICK 
3. Mr. A Ahmed Irzath 
4. Mr. S.Abdul Basith

This website says that some of the objectives of their foundation are:- Masjid Construction assistance. (Bore/construction helps) Placement assistance for Islamic youngsters (notifications about jobs across various geographies

DO VISIT THIS WEBSITE AND CHECK YOURSELF

Now look at the irony here: people from all over the country belonging to different religions and communities are sending SMSs and making donations, and you can see clearly that money is spent on people of just one particular community and religion - the Muslims!!Isn't it unfair that first you are attracting people from different religions on emotional grounds, and when they fall prey to it and give donation, you are using that money for communal purpose without even informing the people where their money is going to be used?How will building mosques and madrasas helps our nation? 


And if it doesn't then why are people of this country being fooled like this and no one is raising questions? Are only Muslims unemployed in this country? If not then why this step-motherly treatment to people of other religions? 

See the truth at:www.humanitytrust.com 

It is the Hindus who should be taking INITIATIVES in Hindusthan and keep the enemy guessing. The others come in only when they see the VACUUM. Sonia Maino, too, was sucked into this VACUUM of Hindu "Shakti".There are not too many bad people in India, but the problem is that : There are too many good people in India, who do not speak up about bad deeds, of bad people.....Gandhi ji

IT IS IMPORTANT TO INQUIRE BEYOND THE OBVIOUS


மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனத்தின் பெயர் "புளூம் பாக்ஸ்'


தமிழகம் மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகள், மின்தட்டுப்பாட்டால் திணறிக்கொண்டிருக்கின்றன. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனங்கள், சோலார் இயந்திரங்கள் என பல ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. இருப்பினும், குறைந்த செலவில், மாசு இல்லாமல் மின்சாரத்தை உற்பத்தி செய்வது கடினமாகவே இருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.ஆர்.ஸ்ரீதர் என்பவரின் கண்டுபிடிப்பு, உலக அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சாதனத்தின் பெயர் "புளூம் பாக்ஸ்'.

யார் இந்த ஸ்ரீதர்: 1960ல் தமிழகத்தில் பிறந்த இவர், திருச்சி "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி'யில் மெக்கானிக்கல் இன்ஜினி யரிங் படித்தார். 1980களில் அமெரிக்காவிற்கு சென்ற இவர், அங்குள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில், "நியூக்ளியர் இன்ஜினியரிங்'கில் எம்.எஸ்.பட்டமும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பிஎச்.டி.,யும் பெற்றார். பின், அரிசோனா பல்கலைக்கழக விண்வெளி ஆய்வ கத்தின் இயக்குன ராகவும், "ஏரோஸ்பேஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்' துறையில் பேராசிரி யராகவும் பணிபுரிந்தார். செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தேவை யான ஆக்சிஜன் உள்ளிட்ட வற்றை தயாரிக்க முடியுமா என்ற ஆய்வை பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஸ்ரீதர் தலைமையில் "நாசா' மேற்கொண்டது. இந்த ஆய்வு பாதியில் நிறுத்தப்பட்டது.


கவனத்தை  திருப்பிய ஸ்ரீதர்: செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை தயார் செய்ய முடியுமா என ஆராய்ந்த ஸ்ரீதர், அதே ஆக்சிஜனை உருவாக்கி, அதனுடன் ஹைட்ரஜனை இணைத்து மின்சாரம் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 2002ம் ஆண்டு "புளூம் எனர்ஜி' என்ற நிறுவனத்தை கலிபோர்னியாவில் துவக்கினார். பல ஆண்டு ஆராய்ச்சி முடிவில், 2010 ல் "புளூம் பாக்ஸை' உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இந்த ஆராய்ச்சியை கண்டு அமெரிக்கர்கள் வியப்படைந்தனர்.

புளூம் பாக்ஸ்:சுற்றுச்சூழல் மாசுபடாமல் மின்சாரம் தயாரிக்கும் கைய டக்க அளவுடைய "புளூம் பாக்ஸ்' உதவியுடன், சராசரியாக ஆசிய கண்டத்திலுள்ள நான்கு வீடுகளுக்கு அல்லது ஒரு அமெரிக்க வீட்டிற்கு தடையில்லா மின்சாரம் வழங்கலாம். குளிர்சாதனப்பெட்டி அளவுடைய "புளூம் பாக்ஸை' கொண்டு 100 வீடுகளை கொண்ட ஒரு அபார்ட் மென்ட்டிற்கு மின்சாரம் அளிக்கலாம். இதன் உட்புறத்தில் எரிபொருள் மின்கலம் ( ஊதஞுடூ ஞிஞுடூடூ ) உள்ளது. புரோட்டான் மற்றும் செராமிக் ஜவ்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை உலோக வினையூக்கிகளால் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்குள் மீத்தேன், ஆக்சிஜனை செலுத்தும்போது 1000 டிகிரி வெப்பநிலை உருவாகி, மின்சாரம் உற்பத்தியாகிறது. பெரிய அளவிலான "புளூம் பாக்ஸ்'கள் 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கூகுள், சான்பிரான் சிஸ்கோ விமானநிலையம், சி.ஐ.ஏ., உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இந்த "புளூம்பாக்ஸை' பயன்படுத்துகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் சாதாரண மக்கள் உபயோகப்படுத்தும் வகையில் குறைந்த விலை "புளூம்பாக்ஸ்'கள் தயார் செய்யப்படும் என ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
source:

Thursday, 14 June 2012

கோகோகோலா குடித்து மேலுலகம் சென்ற பெண்

தினமும், 10 லிட்டர் அளவுக்கு குளிர்பானம் குடித்த பெண் மரணமடைந்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் நடஷா ஹாரிஸ், 30. எட்டு குழந்தைகளுக்கு தாய். இவர், காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை அடிக்கடி, “கோ
கோகோலா’ குளிர்பானத்தை பருகி வந்தார். ஒரு நாளைக்கு, 10 லிட்டர், “கோககோலா’வை இவர், பல ஆண்டுகளாக குடித்துவந்தார். இதற்கிடையே அவர் கடந்த, 2010ம் ஆண்டு திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார்.

இவர் திடீரென இறந்ததற்கான காரணம் குறித்து, பல்வேறு துறை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். நடஷாவின், கணவரை அழைத்து, அவரது மனைவி என்னென்ன உணவு பழக்கங்களை கொண்டிருந்தார் என கேட்டனர். நடஷா, ஒரு நாளைக்கு எட்டு முதல், 10 லிட்டர் “கோககோலா’ குடித்ததாகவும், 30 சிகரெட் வரை பயன்படுத்தியதாகவும், ஆனால், குறைவான உணவு மட்டுமே உட்கொண்டு வந்ததாகவும், நடஷாவின் கணவர் கூறினார்.


சமீபத்தில், நடஷாவின் மரணம் குறித்த மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


“தண்ணீராக இருந்தாலும் அது அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உடலுக்கு கெடுதலை தான் செய்யும். அதிகப்படியான, “கோககோலா’வினால் அவரது உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்து விட்டது.


இதனால், அவருக்கு ரத்த அழுத்தமும், சக்தி குறைவும் ஏற்பட்டுள்ளது. இது தான் அவருக்கு மரணத்தை ஏற்படுத்தி விட்டது என, டாக்டர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.



Source:


http://www.paththirikai.com/2012/04/cocacola/



காய்கறிகள் மறதிநோய் ஏற்படாமல் தடுக்கிறது

உடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளப்படும் காய்கறிகள் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள சத்தான கொழுப்புகளும்,காய்கறிகளில் உள்ள தாவர எண்ணெய்களும்தான் அல்சீமரை தடுக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சிகாகோவில் உள்ள ஆய்வாளர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட 815 நபர்களிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுக்கு உயர்தர சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பால் பொருட்களை கொடுத்து சோதனை செய்தனர். அதில் வியப்பூட்டும் மாற்றம் ஏற்பட்டது. 80 சதவிகிதம் வரை அல்சீமர் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. காய்கறிகளில் உள்ள நல்ல கொழுப்புகள் ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கிவிடுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற காய்கறி உணவுகள் இதயநோய் ஏற்படாமல் தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த பழங்களை வாங்கி உண்பதன் மூலம் வைட்டமின் சி சத்தினை உடலில் தக்கவைக்கலாம். இது மறதிநோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் `சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழந்து காணப்படுவர். அவர்களின் முகத்தில் சிடு சிடுப்பு வந்துவிடும். இவர்களின் எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். அதேபோல் மறதிநோயில் இருந்து தப்பிக்க வைட்டமின் இ அதிகமுள்ள கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் வைட்டமின் இ சத்து சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும் .

இதேபோல் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள மேற்கொண்ட ஆய்வில் வைட்டமின் சி வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகள் அல்சீமர் ஏற்படாமல் தடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைட்டமின்களில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ஸ் மூளை நரம்புகளுக்கு நன்மை தருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூளை நரம்புகளில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுவதாலேயே அல்சீமர் எனப்படும் மறதிநோய் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட 980 நபர்களுக்கு வைட்டமின் சி, வைட்டமின் இ நிறைந்த காய்கறிகள், உணவுகளை உட்கொள்ள கொடுத்தனர் அதில் 242 பேர்களுக்கு அல்சீமர் நோய் பாதிப்பு படிப்படியாக குறைந்தது தெரியவந்தது.