Monday 11 November 2013

ஹிந்து

ஹிந்து
 
ஹிந்து என்ற பெயர் ஒரு மதத்தை(religion), கலாச்சாரத்தை (culture), தத்துவ அறிவு (philosophy),  வாழ்க்கை முறையை (way of life), இவை அனைத்தையும் உள்ளடக்கிய பண்பாட்டை (culture) குறிக்கிறது.

'ஹிந்து மதம்', 'ஹிந்து' என்ற சொல் இந்திய சமயத்தினர்கள் மீது வெள்ளைக்காரர்கள் திணித்ததே. இந்தியாவில் மதம் என்ற பெயரில் எதுவுமே இருந்தது கிடையாது, தமிழில் சமயம் என்றும் வடமொழியில் 'தர்ம(ம்)' என்றே வழங்கப்பட்டு வந்தது. சடங்குகளையும், கொள்கைகளையும் சார்ந்தது சமயங்கள் அவற்றின் வேறுபாடுகளை வைத்து வைதீகம், பவுத்தம், ஆசிவகம், சமணம், வைணவம், சைவம், சிறுதெய்வ சமயம் என்று பல்வேறு பெயர்களில் வழங்கப் பெறலாயிற்று. ஆதி இந்தியர்கள் இவற்றில் எதோ ஒரு சமயம் சார்ந்தவர்களாக இருந்தனரேயன்றி அனைத்தையுமே ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர்.


சமண சமயம்

இந்தியாவில் தோன்றிய பழைய சமயங்களுள் சமண சமயமும் ஒன்று. இது பொதுவாக ஜைனம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆருகதம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அகிம்சை சமண சமயத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இன்று உலகில் சமண சமயத்தை ஏறத்தாள 5 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றார்கள். பல்வேறு வரலாற்று காலகட்டங்களில் தமிழர்களிடம் சமணம் பரவி இருந்தது, இன்றும் குறிப்பிடத்தக்க சமணர்கள் தமிழர்கள் ஆவார்கள். இவர்கள் தமிழ்ச் சமணர் அன்று அறியப்படுவர். வடநாட்டினின்று வந்த சமணரும் தமிழ்ச் சமணரும் கலாச்சார இரீதியாகவும் மொழி இரீதியாகவும் வேறுபட்டவர்கள் ஆவர். கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் மகாவீரரால் பின்பு இம்மதம் பிரசித்தப்படுத்தப்பட்டது.மகாவீரருக்கு முன்பு 24 தீர்த்தங்கரர் என அறியப்படும் சமணப்பெரியார்கள் இருந்துள்ளார்கள்.

சமணம் என்ற சொல்லின் பொருள்

சமணம் எனும் சொல் ஸ்ரமணம் என்ற வடமொழிச் சொல்லின் பாகத வடிவமே சமணம். கடிய நோன்புகளிளாலும், தவத்தாலும் தங்களைக் கடுமையாக வருத்திக் கொள்பவர் - சிரமப்படுத்திக்கொள்பவர் என்பது சமணர் என்ற சொல்லின் மற்றொரு பொருளாகும். எல்லா உயிர்களையும் சமமாகப் பார்க்கும் அருள் உள்ளம் உடையவர் என்றும் இச்சொல்லிற்கு சிறப்பு விளக்கம் செய்வர்.

சமண சமயப் பிரிவுகள்:

சமண சமயத்தில் ஆடையணியாமல் உடலில் திருநீறு பூசியபடி இருக்கும் திகம்பரர்களும் , வெள்ளை ஆடையினை உடுத்தியிருக்கும் சுவேதம்பரர்களும் இரு ஆதிப்பிரிவினர் ஆவார்கள். இவர்களிலிருந்து கீழ்வரும் பிரிவுகள் பிற்காலத்தில் தோற்றம் பெற்றன.
  • சுதனக்வாசி - இறைவனுக்கு உருவமில்லை என்பது இவர்கள் கொள்கை.
  • சுவேதம்பர தேராபந்த் - ஆச்சார்யா பிக்ஷு என்பவரால் தொடங்கப்பெற்றது.
  • பிசாபந்த
  • முர்டிபுஜக - உருவவழிபாட்டினை ஏற்றவர்கள்.

இல்லறத்தாரும் மற்றும் துறவறத்தாரும் பொதுவாக கடைபிடிக்க வேண்டிய ஐந்து அனுவிரதங்கள்

  1. அகிம்சை
  2. வாய்மை
  3. கள்ளாமை
  4. துறவு
  5. அவாவறுத்தல்

துறவறத்தார் கடைபிடிக்க வேண்டிய மகாவிரதங்கள்

  1. ஐம்பொறி அடக்கம் ஐந்து
  2. ஆவஸ்யகம் ஆறு
  3. லோசம்
  4. திகம்பரம் (உடை உடுத்தாமை)
  5. நீராடாமை
  6. பல் தேய்க்காமை
  7. தரையில் படுத்தல்
  8. நின்று உண்ணல்
  9. ஒரு வேளை மட்டும் உண்ணல்
சந்திரகுப்த மௌரியரின் அரசகுருவாக இருந்த பத்திரபாகு முனிவர் என்பவர் காலத்தில் சமண சமயம் தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக வந்தது என்பர். இந்தியாவின் வடப்பகுதியிலிருந்து பன்னீராயிரம் சமண முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்னகம் நோக்கி வந்தார். இவர் மைசூர் அருகேயிருக்கும் சிரவணபௌகொளவில் தம் குழுவுடன் தங்கினார். இவருடைய சீடரான விசாக முனிவர் சோழபாண்டிய நாட்டில் சமணம் பரவ வழிவகை செய்தார். இவ்வாறு இந்திய வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த சமண சமயம் பற்றி, கதா கோசம் எனும் நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. பத்திரபாகு முனிவரின் காலம் கி.மு. 317 முதல் கி.மு. 297 என்பதால் சமணம் தென்னகம் வந்த வரலாறு ஏறத்தாள 2500 காலத்திற்கும் முற்பட்டதாகும்.
அதன்பின் வடநாட்டில் தோன்றிய சமய நெறி என்றாலும், தமிழ்நாட்டில் வேரூன்றி பல நூற்றாண்டுகள் செழிப்புடன் விளங்கியது. தமிழ்நாட்டில், தமிழ் மொழியில், தமிழர் சிந்தனையில் சமணத்தின் பங்கு இணைபிரிக்க முடியாதது. சங்ககாலத்துப் பாடல் ஒன்று இவர்களை 'உண்ணாமையின் உயங்கிய மருங்குல் ஆடாப படிவத்து ஆன்றோர்' என்று குறிப்பிடுகிறது. (அகம் 123)
பாண்டிய மன்னன் நின்றிசீர் நெடுமாறன் காலத்தில் திருஞான சம்மந்தருடன் வாதத்தில் ஈடுபட்ட சமணர்கள், தாங்கள் வாதத்தில் தோற்றால் கழுவேறுவோம் என்று கூறினர். அனல் வாதம், புனல் வாதம் இரண்டிலும் திருஞான சம்பந்தர் வென்றதால் சமணர்கள் கழுவேறினார்கள்.
"சமணத்திற்கும் பெளத்தத்திற்குமிடையில் முரண்பாடு ஏறபட்டதும் புத்தசமயம் தமிழ்நாட்டை விட்டு இலங்கைக்குச் சென்றது. சமணமே தமிழகத்தின் தனிப்பெரும் சமயமாக பல நூற்றாண்டுகள் நிலைபெற்றிருந்தது. சிந்தாந்த ரீதியில் சமணர்களது அறநெறிகள் இன்றுவரை தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுள்ளன...தமிழக மக்கள் சிந்தனையில் சமண அறநெறிகள் உள்ளன."
தேவகோட்டையில் வாழ்ந்த மக்களிடம் சமன சமயத்தை பரப்ப வந்த சமன துறவிகளை தேவகோட்டை மன்னன் விரட்டியதால் உயிருக்கு பயந்து தற்பொதுள்ள சித்தன்னவாயில் என்னும் ஊரில் உள்ள ஒரு பாறையில் தஞ்சம் புகுந்தனர். அங்கு அவர்கள் ஓய்வு நேரத்தில் வரைந்த சமன துறவி ஒவியங்களே தற்போதுள்ள உலக புகழ் பெற்ற சித்தன்னவாசல் ஓவியங்கள் ஆகும்.

சமணரும் தமிழும்

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக "தமிழ்நாட்டில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்து, இலக்கிய வளம்மிக்க மொழி என்னும் அந்தஸ்தைத் தமிழ் அடையப் பெருமளவு காரணமாயினர். தமிழ்மொழியில் இலக்கியம், இலக்கணம் (மொழியியல்), உரைநடை, அகராதி நிகண்டு, மற்றும் தருக்கம் ஆகிய துறைககளில் சமணப்பெரியார்கள் ஆற்றியுள்ள பணி வியக்கத்தக்கது." 
  • சீவக சிந்தாமணி (சமணம், அரசன் சீவகன் வரலாறு, எட்டு மணம் பின் துறவறம், வடமொழி தழுவல்)
  • வளையாபதி (70 செய்யுள்கள் கிடைகின்றன)
  • நீலகேசி தற்போது கிடைக்கவில்லை
  • திருக்குறள்
  • நாலடியார்
  • பழமொழி நானூறு
  • ஏலாதி
  • திணைமாலை நூற்றைம்பது

ஐஞ்சிறுகாப்பியம்

  • உதயணகுமார காவியம் (சைனம், அரசன் உதயணன் வரலாறு)
  • நாககுமார காவியம் (சைனம், தற்போது கிடைக்கவில்லை)
  • யசோதர காப்பியம் (வடமொழி தழுவல், உயிர்கொலை கூடாது)
  • நீலகேசி (நீலி என்ற பெண் சைன முனிவர் சைன சிறப்பை எடுத்தியம்பும் காப்பியம்)
  • சூளாமணி (சைனம், திவிட்டன் விசயன் கதை, துறவு-முக்தி, வடமொழி தழுவல்)
  • பெருங்கதை (சைனம், அரசன் உதயணன் வரலாறு)

No comments:

Post a Comment