Thursday, 10 May 2012

நினைவூட்டுகிறேன்

இந்தியா மீண்டும் மீண்டும் தன் மீது போர்தொடுத்த பயங்கரவாதிகளை என்ன செய்தது?
 
அபு சலீம் – ஒரு இஸ்லாமியப் பயங்கரவாதி 1993 மும்பை குண்டு வெடிப்பை நிகழ்த்திய சதிகாரர்களுள் முக்கியமான ஒருவன். குண்டு வெடிப்பைத் திட்டமிட்டு நடத்திய தாவூத் இப்ராஹிமின் ஒரு முக்கிய அடியாள். அவன் குண்டு வெடிப்புக்குப் பின்னால் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று விட்டான். அவனை இந்திய அரசின் உளவுப் பிரிவினரால் தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை. மும்பைக் குண்டு வெடிப்பில் மட்டும் அல்லாது இந்தியாவில் ஏராளமான கொலை, கடத்தல் குற்றங்களையும் செய்தவன். ஆள்களைக் கடத்திச் சென்று பணம் பறிப்பவன். பணத்துக்காகக் கொலைகள் செய்யும் ஒரு பயங்கரவாதி. அவனை 2002ம் வருடம் செப்டம்பர் மாதம் இண்டர்போல் போர்ச்சுக்கலின் லிஸ்பன் நகரத்தில் வைத்து அடையாளம் கண்டு இந்தியாவுக்குத் தகவல் தெரிவித்தது. அவனையும் அவனுடைய காதலியான நடிகை மோனிகா பேடியையும் இந்திய அரசிடம் ஒப்படைக்க போர்ச்சுக்கல் அரசு மறுத்து விட்டது. கடுமையான சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இந்தியாவில் பல நூறு பேர்களின் கொலைகளுக்குக் காரணமான கொடூரமான கொலைகாரனுக்கு நாங்கள் மரண தண்டனை விதிக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை போர்ச்சுக்கள் நீதிமன்றத்துக்கு இந்தியா கொடுத்த பின்பே கடும் போராட்டத்திற்குப் பின்பே 4 வருடச் சட்டப் போராட்டத்திற்கு பின்பே அவனை போர்ச்சுக்கல் அரசு இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புக் கொண்டது. இப்பொழுது அவனுக்கு கடுமையான தண்டனை எதையும் விதிக்காமல் தன் சிறையில் வைத்து உபச்சாரம் செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு. இது வரை அவனுக்கு எந்த வித தண்டனையையும் இந்திய கோர்ட்டுகள் வழங்கவில்லை. நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் படு கொலைகளுக்கு நீதி இந்தியாவில் வழங்கப் படவேயில்லை.


தாவூத் இப்ராஹிம் – 1993, 2008 மும்பை குண்டு வெடிப்புகளுக்கும் இந்தியாவில் பல ஆயிரம் கோடி கள்ளக் கடத்தல் மற்றும் சட்டவிரோத வணிகங்களுக்கும் மூளையாக, தலைவனாக இருக்கும் பயங்கரமான இஸ்லாமிய பயங்கரவாதி. அவன் மீது நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற கொலைக் குற்றச் சாட்டு ஆதாரங்களுடன் சாட்டப் பட்டுள்ளது. இந்தியாவிற்குள் போதை மருந்து கடத்துவது இந்திய நகரங்களில் குண்டு வைத்து பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்துவது போன்ற எண்ணற்ற கொடூரமான சதிச் செயல்களை இன்று வரைத் தொடர்ந்து செய்து வருபவன். எண்ணற்ற அப்பாவி இந்துக்களின் உயிர்களைப் பறித்தச் சண்டாள அரக்கன். இந்தியாவின் இருப்பையே அழிக்க உறுதி பூண்டுள்ள ஒரு தேச விரோதி மனித குல விரோதி இந்த தாவூத். அமெரிக்க அரசு உட்பட பல நாடுகள் அவனை ஒரு உலக அளவிலான முக்கிய பயங்கரவாதியாக அடையாளம் கண்டுள்ளன. அவன் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று பாக்கிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்தில் வசிப்பதாக பல முறை இந்திய அரசு பாக்கிஸ்தான அரசிடமும் அமெரிக்க அரசிடமும் முறையிட்டு அவனை நாடு கடத்துமாறு கெஞ்சி வருகிறது. அவனை பாலிவுட்டின் நடிகைகளும் இந்தியாவின் பிற பயங்கரவாதிகளும் சந்திக்க முடிகின்றது. அவனது மகளின் திருமணத்தில் இந்தியர்கள் கலந்து கொள்ள முடிகிறது. ஆனால் இன்று வரை அவனைக் கைது செய்து இந்தியா கொண்டு வர வக்கில்லாமல் இந்திய அரசு பாக்கிஸ்தானின் ராணுவத் தலைமையிடமும் அமெரிக்க அரசிடமும் பிரிட்டனிடமும் இன்னும் பல நாடுகளிடமும் அவனைத் திருப்பித் தரக் கோரி மண்டியிட்டுக் கெஞ்சி வருகிறது. கிஞ்சித்தும் சுயமரியாதையும் தம் நாட்டுப் பிரஜைகளின் உயிர்களுக்கு மரியாதை அளிக்காமலும் இந்தியாவின் இருப்புக்கே அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு பயங்கரவாதியை இன்று வரைப் பிடித்து அவனால் கொல்லப் பட்ட மக்களுக்கு நீதி வழங்க வக்கில்லாமல் இருக்கிறது இந்திய அரசு.


டைகர் மோமன், காந்தாஹார் விமானக் கடத்தல் பிணையினால் விடுவிக்கப் பட்ட பயங்கரவாதிகள் முதல் கடைசியாக நடந்த மும்பைக் குண்டு வெடிப்புகள் வரை இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் நடக்கும் அத்தனை விதமான பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தும் அனைத்து விதமான பயங்கரவாதிகளும் இந்தியாவிற்குள் எந்தவித சிக்கலும் இல்லாமல் நுழைந்து தங்கள் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்த முடிகிறது. 2008ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புக்கும், அக்சர்தம் கோவிலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் திட்டமிட்ட டேவிட் ஹெய்லி என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதியை அமெரிக்க அரசு பிடித்து விட்டாலும் கூட இந்திய உளவுத் துறையினர் அவனை விசாரிப்பதற்குக் கூட அனுமதி வழங்கப் படவில்லை.

 
இந்தியாவின் இறையாண்மையின் சின்னமாக விளங்கும் பாராளுமன்றத்தைத் தாக்கிய அப்சல் குரு என்பவனை இந்தியாவின் உச்ச நீதி மன்றம் பலமுறை தூக்கிலுமாறு உத்தரவிட்டும் கூட இன்று வரை இந்தியாவை ஆளும் சோனியாவின் காங்கிரஸ் அரசாங்கம் பிடிவாதமாக அவனுக்குத் தண்டனை அளிக்க மறுத்து வருகிறது. அவனைத் தூக்கில் போட்டால் முஸ்லீம் ஓட்டுக்கள் கிடைக்காது என்ற ஒரே காரணத்திற்காக கேடுகெட்ட காங்கிரஸ் அரசாங்கம் அவனைப் பாதுகாத்து வருகிறது.
இப்படி எத்தனையோ உதாரணங்களை நாம் கொடுத்துக் கொண்டே போகலாம். இந்தியாவின் ஆட்சியாளர்கள் மீது விரக்தியையும் வெறுப்பையும் அவமானத்தையுமே இந்த நிகழ்வுகள் நமக்கு ஏற்படுத்துபவை. இந்தியாவின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்க முடியாத, இந்தியாவையும் அதன் மக்களையும் அன்றாடம் கொன்று தீர்க்கும் மிருகங்களைக் கண்டு பிடிக்க முடியாத, அப்படியே கண்டு பிடித்தாலும் அவர்களை விசாரித்து உரிய தண்டனை கொடுக்க பலம் இல்லாத கோழையான அரசாங்கங்களையே இந்தியா தொடர்ந்து பெற்று வருகிறது.
சுயமரியாதையும், சுய பாதுகாப்பு உணர்வும் ஒற்றுமையும் இல்லாத ஒரு சமூகம் இந்த உலகில் வாழ அருகதையில்லாத எளிதில் அழிக்கப் படக் கூடிய, உலகில் மரியாதை பெறாத முதுகெலும்பில்லாத ஒரு கேவலமான சமூகமாகி விடும். அப்படிப் பட்ட கேவலமான ஒரு இடத்தில் தான் இந்தியா இன்று இருக்கிறது பெரும் மன வலியை ஏற்படுத்தும் ஒரு உண்மை. சீனா முதல் பங்களாதேஷ், இலங்கை வரை இந்தியாவை ஒரு முதுகெலும்பில்லாத காமெடிப் பீசாக மட்டுமே உலக நாடுகள் கருதுகின்றன. அதன் காரணம் நம் வரலாற்றை உணர்ந்து நம் வலிமையை உறுதி செய்யாத பலவீனமான அரசியல்வாதிகளும் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் நம் பலவீனமான மக்களுமே.

No comments:

Post a Comment